Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 129

61

وَمِنْهُمُ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱلنَّبِىَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٌۭ ۚ قُلْ أُذُنُ خَيْرٍۢ لَّكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِينَ وَرَحْمَةٌۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ ۚ وَٱلَّذِينَ يُؤْذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத்துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்." எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருக்கு வார்த்தைகளினால் தொல்லை கொடுக்கிறார்கள். அவரது சகிப்புத் தன்மையை காணும் போது, “இவர் யார் என்ன கூறினாலும் அதனை நம்பிவிடுகிறார். உண்மை எது பொய் எது எனப் பிரித்தறிய முடியாதவர்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூதர் நன்மையான விஷயங்களைத்தான் கேட்கிறார். அல்லாஹ்வையும் உண்மையாளர்களான நம்பிக்கையாளர்கள் கூறுவதையும் உண்மைப்படுத்துகிறார். அவர்களுடன் கருணையுடன் நடந்துகொள்கிறார். அல்லாஹ்வின் தூதருக்குத் ஏதேனும் ஒரு வகையில் தொல்லை கொடுப்பவருக்கும் வேதனைமிக்க கடும் தண்டனை உண்டு.

62

يَحْلِفُونَ بِٱللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرْضُوهُ إِن كَانُوا۟ مُؤْمِنِينَ

(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.

நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் நீங்கள் அவர்களைக் கொண்டு திருப்தியுறுவதற்காக தாங்கள் நபியவர்களைத் துன்புறுத்தும் எதையும் கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றார்கள். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் ஈமான் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகத் தகுதியானவர்களாவர்.

63

أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدًۭا فِيهَا ۚ ذَٰلِكَ ٱلْخِزْىُ ٱلْعَظِيمُ

எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவிலலையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.

இந்த நயவஞ்சகர்கள் தங்களின் இச்செயல்களின் மூலம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையும், அவ்வாறு அவ்விருவரையும் எதிர்ப்போர் மறுமை நாளில் நரக நெருப்பில் நுழைந்து அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?! அதுவே அவமானமும் பெரும் இழிவுமாகும்.

64

يَحْذَرُ ٱلْمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌۭ تُنَبِّئُهُم بِمَا فِى قُلُوبِهِمْ ۚ قُلِ ٱسْتَهْزِءُوٓا۟ إِنَّ ٱللَّهَ مُخْرِجٌۭ مَّا تَحْذَرُونَ

முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்; " நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்."

தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்துள்ள நிராகரிப்பை நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்தும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தனது தூதரின் மீது இறக்கிவிடுவானோ என நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: -“நயவஞ்சகர்களே-, நீங்கள் மார்க்கத்தை பரிகாசம் செய்வதையும், குறைகூறுவதையும் தொடருங்கள். நீங்கள் அஞ்சும் விஷயத்தை ஏதேனும் அத்தியாயத்தை இறக்குவதன் மூலமோ அல்லது தன் தூதருக்கு அறிவித்தோ அல்லாஹ் வெளிப்படுத்திவிடுவான்.

65

وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمْ تَسْتَهْزِءُونَ

(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.

தூதரே!- நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களை குறைகூறி திட்டிக் கொண்டிருந்தது குறித்து அல்லாஹ் உமக்கு அறிவித்த பிறகு, அவர்களிடம் நீர் அது பற்றி நீர் கேட்டால், “நாங்கள் விளையாட்டாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். உண்மையாகவல்ல” என்று கூறுகிறார்கள். -தூதரே! நீர் கேட்பீராக-: “அல்லாஹ்வைக் குறித்தும் அவனுடைய வசனங்களைக் குறித்தும் அவனுடைய தூதரைக் குறித்துமா நீங்கள் பரிகாசம் செய்கிறீர்கள்?!

66

لَا تَعْتَذِرُوا۟ قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَٰنِكُمْ ۚ إِن نَّعْفُ عَن طَآئِفَةٍۢ مِّنكُمْ نُعَذِّبْ طَآئِفَةًۢ بِأَنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ

புகழ் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.

இதுபோன்ற பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் மறைத்து வைத்திருந்த நிராகரிப்பை பரிகாசத்தின் மூலம் வெளிப்படுத்தி விட்டீர்கள். உங்களில் ஒரு பிரிவினர் தங்களின் நயவஞ்சகத்தனத்தை விட்டு விட்டு உளத் தூய்மையுடன் பாவமன்னிப்புக் கோரியதனால் நாம் அவர்களை மன்னித்தாலும் பாவமன்னிப்புக் கோராமல் நயவஞ்சகத்தில் நிலைத்திருக்கும் பிரிவினரை நாம் தண்டிப்போம்.

67

ٱلْمُنَٰفِقُونَ وَٱلْمُنَٰفِقَٰتُ بَعْضُهُم مِّنۢ بَعْضٍۢ ۚ يَأْمُرُونَ بِٱلْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ ۚ نَسُوا۟ ٱللَّهَ فَنَسِيَهُمْ ۗ إِنَّ ٱلْمُنَٰفِقِينَ هُمُ ٱلْفَٰسِقُونَ

நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.

நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றுபட்டவர்களே. அவர்கள் தீமை செய்யத் தூண்டுகிறார்கள். நன்மையை விட்டும் தடுக்கிறார்கள். தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கு வழிபடுதை விட்டுவிட்டார்கள். எனவே அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டான். நிச்சயமாக இந்த நயவஞ்சகர்களே அல்லாஹ்வுக்குக் அடிபணியாதவர்கள். சத்தியப் பாதையிலிருந்து பாவம் மற்றும் வழிகேட்டை நோக்கி வெளியேறியவர்கள்.

68

وَعَدَ ٱللَّهُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْمُنَٰفِقَٰتِ وَٱلْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۚ هِىَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ ٱللَّهُ ۖ وَلَهُمْ عَذَابٌۭ مُّقِيمٌۭ

நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தராமான வேதனையுமுண்டு.

பாவமன்னிப்புக் கோராத நயவஞ்சகர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் நரக நெருப்பில் நுழைவிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இதுவே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். மேலும் அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். அவர்களுக்கு தொடரான வேதனையுண்டு.

69

كَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوٓا۟ أَشَدَّ مِنكُمْ قُوَّةًۭ وَأَكْثَرَ أَمْوَٰلًۭا وَأَوْلَٰدًۭا فَٱسْتَمْتَعُوا۟ بِخَلَٰقِهِمْ فَٱسْتَمْتَعْتُم بِخَلَٰقِكُمْ كَمَا ٱسْتَمْتَعَ ٱلَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَٰقِهِمْ وَخُضْتُمْ كَٱلَّذِى خَاضُوٓا۟ ۚ أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ

(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.

நயவஞ்சகர்களே! நிராகரிப்பிலும் பரிகாசம் செய்வதிலும் நீங்கள் உங்களுக்கு முன்னர் நிராகரித்த சமூகங்களைப் போன்றவர்கள்தாம். அவர்கள் உங்களைவிட அதிக பலமும் பணமும் பிள்ளைகளும் உடையவர்களாக இருந்தார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட உலக இன்பங்களையும் ஆசாபாசங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள். -நயவஞ்சகர்களே!- நிராகரித்த உங்களுக்கு முந்தைய சமூகங்கள் தமது பங்கை அனுபவித்ததைப் போலவே நீங்களும் உங்களுக்கு விதிக்கப்பட்ட பங்கை அனுபவியுங்கள். அவர்கள் சத்தியத்தை நிராகரித்து தங்களின் தூதர்களைக் குறை கூறியதைப் போலவே நீங்களும் சத்தியத்தை நிராகரித்து தூதரைக் குறை கூறியுள்ளீர்கள். இழிவான இந்த பண்புகளை உடையவர்களின் செயல்கள் நிராகரிப்பினால் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிட்டதனால் அவைகள் பயனற்றுவிட்டன. இவர்கள் தாம் தங்களை அழிவில் ஆழ்த்தி தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்ட நஷ்டவாளிகளாவர்.

70

أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَٰهِيمَ وَأَصْحَٰبِ مَدْيَنَ وَٱلْمُؤْتَفِكَٰتِ ۚ أَتَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ ۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

நிராகரித்த சமூகங்களான நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்ராஹீம் ஆகியோரின் சமுதாயங்களும் மத்யன்வாசிகளும், லூத்தின் சமூகமும் செய்தவை, அவர்களுக்குக் கிடைத்த தண்டனை பற்றிய தகவல் இந்த நயவஞ்சகர்களை அடையவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. அவனது தூதர்கள் அவர்களை எச்சரித்திருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வையும் அவன் அனுப்பிய தூதர்களையும் நிராகரித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களாக இருந்தனர்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.