Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 129

51

قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوْلَىٰنَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

தூதரே!- இந்த நயவஞ்சகர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் தலைவனாகவும் நாங்கள் அடைக்கலம் தேடும் பாதுகாவலனாகவும் இருக்கின்றான். நாங்கள் எங்கள் விவகாரங்களில் அவனையே சார்ந்துள்ளோம். அவன் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே அவர்களுக்குப் போதுமானவன்; மிகச் சிறந்த பொறுப்பாளன்.

52

قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحْدَى ٱلْحُسْنَيَيْنِ ۖ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٍۢ مِّنْ عِندِهِۦٓ أَوْ بِأَيْدِينَا ۖ فَتَرَبَّصُوٓا۟ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ

(நபியே!) நீர் கூறுவீராக "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?" ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் எள்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.

தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “வெற்றி அல்லது வீரமரணம் நிகழுவதைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்? ஆனால் நாமோ உங்களை அழித்து விடும் ஒரு வேதனையை அல்லாஹ் உங்கள் மீது இறக்குவதை அல்லது உங்களுடன் போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் போது எங்களின் கைகளால் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் உங்களை அவன் தண்டிப்பதையுமே எதிரப்பார்க்கிறோம். எனவே எங்களுக்கு நேர்வதை நீங்கள் எதிர்பாருங்கள். உங்களுக்கு நேர்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

53

قُلْ أَنفِقُوا۟ طَوْعًا أَوْ كَرْهًۭا لَّن يُتَقَبَّلَ مِنكُمْ ۖ إِنَّكُمْ كُنتُمْ قَوْمًۭا فَٰسِقِينَ

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களின் செல்வங்களை விரும்பியோ விரும்பாமலோ செலவு செய்யுங்கள். அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் அவனுக்கு அடிபணியாததனாலும் நீங்கள் செலவு செய்யும் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது.

54

وَمَا مَنَعَهُمْ أَن تُقْبَلَ مِنْهُمْ نَفَقَٰتُهُمْ إِلَّآ أَنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَبِرَسُولِهِۦ وَلَا يَأْتُونَ ٱلصَّلَوٰةَ إِلَّا وَهُمْ كُسَالَىٰ وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمْ كَٰرِهُونَ

அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.

அவர்கள் செய்யும் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படாததற்கான மூன்று காரணங்கள்: (ஒன்று) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். (இரண்டு) அவர்கள் தொழுதாலும் சோம்பேறிகளாகவே தொழுகிறார்கள். (மூன்று) அவர்கள் தங்களின் செல்வங்களை விரும்பி செலவு செய்வதில்லை. வெறுத்தவாறே செலவு செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் தொழுகைகள் மற்றும் தர்மங்களின் மூலம் நற்கூலியை விரும்புவதில்லை.

55

فَلَا تُعْجِبْكَ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُمْ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَٰفِرُونَ

அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.

தூதரே!- நயவஞ்சகர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ உம்மைக் கவர்ந்துவிட வேண்டாம். அவர்களின் செல்வங்கள் மற்றும் பிள்ளைகளால் ஏற்படும் விளைவு தீயவையாகும். அதனை அடைவதற்கு சிரமப்படுதல் அவைகளில் ஏற்படும் சோதனைகள் என்பவற்றினால் அல்லாஹ் அவர்களுக்கு அவற்றை வேதனையாக ஆக்கியுள்ளான். அதே நிலையிலேயே அவர்களின் உயிர்களும் பிரிந்தவுடன் அவர்கள் நரகத்தின் அடித்தளத்தில் நிரந்தரமாக வேதனை செய்யப்படுவார்கள்.

56

وَيَحْلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُم مِّنكُمْ وَلَٰكِنَّهُمْ قَوْمٌۭ يَفْرَقُونَ

நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்; என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.

நம்பிக்கையாளர்களே!- நயவஞ்சகர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் என்று தங்களை வெளிப்படுத்தினாலும் அவர்களது உள்ரங்கத்தில் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர். ஆனாலும் இணைவைப்பாளர்கள் கொலை செய்யப்பட்டும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டது போன்று தாங்களும் தண்டிக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் தப்புவதற்காக வெளிரங்கத்தில் முஸ்லிம்களாக உள்ளனர்.

57

لَوْ يَجِدُونَ مَلْجَـًٔا أَوْ مَغَٰرَٰتٍ أَوْ مُدَّخَلًۭا لَّوَلَّوْا۟ إِلَيْهِ وَهُمْ يَجْمَحُونَ

ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.

இந்த நயவஞ்சகர்கள் தம்மைப் பாதுகாக்கும் ஏதேனும் கோட்டையையோ மறைந்து கொள்வதற்கு மலைகளில் குகைகளையோ ஒளிந்துகொள்வதற்கு பதுங்குமிடத்தையோ பெற்றால் அதில் அடைக்கலம் புகுந்துவிடுவார்கள். மேலும் அதில் விரைந்து நுழைந்தும் விடுவார்கள்.

58

وَمِنْهُم مَّن يَلْمِزُكَ فِى ٱلصَّدَقَٰتِ فَإِنْ أُعْطُوا۟ مِنْهَا رَضُوا۟ وَإِن لَّمْ يُعْطَوْا۟ مِنْهَآ إِذَا هُمْ يَسْخَطُونَ

(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.

தூதரே!-நயவஞ்சகர்களில் சிலர் தர்மப் பொருள்களில் தாங்கள் நாடியதைப் பெறாததனால் உம்மைக் குறைகூறுகிறார்கள். நீர் அவர்கள் விரும்பியதை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் உம்மைக் கொண்டு திருப்தியடைகிறார்கள். அவர்கள் கேட்பதை நீர் வழங்காவிட்டால் வெறுப்பை வெளியிடுகின்றனர்.

59

وَلَوْ أَنَّهُمْ رَضُوا۟ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ سَيُؤْتِينَا ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ

அல்லாஹ்வும் அவனுடைய தூரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்" என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).

தூதரே! தர்மப் பொருள்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறும் இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு விதித்ததை ஏற்றுக் கொண்டு, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்கு வழங்குவான். அல்லாஹ் வழங்கியதிலிருந்து தூதரும் எங்களுக்கு வழங்குவார். நாங்கள் அல்லாஹ்விடமே - அவன் எங்களுக்கு வழங்குவான் என்று - ஆர்வம் கொண்டுள்ளோம்” என்று கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அது அவர்கள் குறைகூறுவதைவிடச் சிறந்ததாக அமைந்திருக்கும்.

60

۞ إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلْفُقَرَآءِ وَٱلْمَسَٰكِينِ وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا وَٱلْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِى ٱلرِّقَابِ وَٱلْغَٰرِمِينَ وَفِى سَبِيلِ ٱللَّهِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۖ فَرِيضَةًۭ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌۭ

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

நிச்சயமாக கடமையான தர்மங்கள், தொழில் அல்லது உத்தியோகம் இருந்தும் போதுமான வருமானமின்றி கவனிப்பாரற்றுள்ள ஏழைகளுக்கும், எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளாத அவர்களது நிலமை அல்லது பேச்சின் மூலம் தெளிவாக வசதியற்றவர்கள் என மக்களால் அறியப்பட்ட வறியவர்களுக்கும், ஆட்சியாளர் ஸகாத்தை சேகரிப்பதற்காக நியமித்தவர்களுக்கும், ஸகாத்தை வழங்குவதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிராகரிப்பாளர்களுக்கும் அல்லது ஈமான் உறுதியாவதற்காக பலவீனமான நம்பிக்கையாளர்களுக்கும் அல்லது ஸகாத்தை பெறுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கிழைப்பதை தவிர்ந்து கொள்வோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வீண்விரயத்திற்காகவோ பாவம் செய்வதற்கோ அல்லாமல் கடன் பெற்ற ஆனால் கடனை அடைக்க முடியாத கடனாளிக்கும் அல்லாஹ்வின் பாதையில் போராடுவோரை தயார்படுத்துவதற்காகவும் பிரயாணச் செலவின்றி தவிக்கும் பிரயாணிக்கும் உரியனவாகும். ஸகாத்தை இவர்களுக்கு மாத்திரம் செலவிடுவதே இறைகட்டளையாகும். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை நன்கறிந்தவனும் அவனது திட்டமிடலிலும் சட்டதிட்டங்களிலும் ஞானமுடையவனுமாவான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.