Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 41–50 of 129

41

ٱنفِرُوا۟ خِفَافًۭا وَثِقَالًۭا وَجَٰهِدُوا۟ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.

நம்பிக்கையாளர்களே!- சிரமத்திலும் இலகுவிலும், இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காகப் புறப்படுங்கள். உங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்யுங்கள். ஏனெனில் அவ்வாறு புறப்பட்டு, செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்வது, ஜிஹாது செய்யாமல் இருந்து கொண்டு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பதை விட இவ்வுலகிவும் மறுவுலகிலும் அதிகப் பயனைத் தரக்கூடியதாகும். நீங்கள் அதனை அறிந்தவர்களாக இருந்தால் இதற்காக ஆர்வம் கொள்ளுங்கள்.

42

لَوْ كَانَ عَرَضًۭا قَرِيبًۭا وَسَفَرًۭا قَاصِدًۭا لَّٱتَّبَعُوكَ وَلَٰكِنۢ بَعُدَتْ عَلَيْهِمُ ٱلشُّقَّةُ ۚ وَسَيَحْلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُونَ أَنفُسَهُمْ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَٰذِبُونَ

"(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்" என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.

தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதி கோரிய நயவஞ்சகர்களை, எளிதாக அடைந்துகொள்ளும் போர்ச் செல்வத்துக்கும் சிரமமற்ற பயணத்துக்கும் நீர் அழைத்திருந்தால் அவர்கள் உம்முடன் வந்திருப்பார்கள். ஆயினும் எதிரியை நோக்கிய பயணத் தூரம் நீண்டதாக அவர்களுக்குத் தென்பட்டதால் அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதிகோரும் இந்த நயவஞ்சகர்கள் நீர் திரும்பிவரும் போது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுவார்கள்: “உங்களுடன் ஜிஹாதிற்காக புறப்பட முடிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டிருப்போம்.” போரை விட்டு பின்தங்கியதனாலும் பொய்ச் சத்தியங்களினாலும் தம்மை அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கி தமக்குத் தாமே அழித்துக் கொண்டார்கள். அவர்கள் தமது கூற்றிலும் சத்தியங்களிலும் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

43

عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَتَعْلَمَ ٱلْكَٰذِبِينَ

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்கள்?

தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க அவர்களுக்கு அனுமதியளிப்பதற்கு நீர் எடுத்த முடிவுக்காக அல்லாஹ் உம்மை மன்னித்துவிட்டான். உண்மையாகவே காரணம் உடையவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பது தெளிவாகும் முன்னரே அவர்களுக்கு நீர் ஏன் அனுமதியளித்தீர்? அவ்வாறு தெளிவாகும் வரை காத்திருந்திருந்தால் பொய்யர்களின்றி உண்மையாளர்களுக்கு மாத்திரம் நீர் அனுமதி வழங்கியிருக்கலாம்.

44

لَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ أَن يُجَٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.

தூதரே! அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் போர் புரியாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருவது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களது பண்பல்ல. மாறாக அவர்களைப் புறப்படுமாறு எப்பொழுது நீர் அழைத்தாலும் புறப்பட்டு தமது பொருட்களாலும் உடலாலும் போர்புரிவதே அவர்களது பண்பாகும். தன் அடியார்களில் தன்னை அஞ்சக்கூடியவர்களை அவன் அறிவான். உம்முடன் புறப்படுவதைத் தடுக்கும் தகுந்த காரணங்களின்றி உம்மிடம் அவர்கள் அனுமதிகோர மாட்டார்கள்.

45

إِنَّمَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَٱرْتَابَتْ قُلُوبُهُمْ فَهُمْ فِى رَيْبِهِمْ يَتَرَدَّدُونَ

(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்குமங்கும்) உழலுகின்றனர்.

தூதரே!- அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாதிற்குப் புறப்படாமல் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதிகோருபவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத நயவஞ்சகர்களாவர். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளார்கள். சத்தியத்தை அடைய முடியாமல் தங்கள் சந்தேகங்களில் அவர்கள் தடுமாறித் திரிகிறார்கள்.

46

۞ وَلَوْ أَرَادُوا۟ ٱلْخُرُوجَ لَأَعَدُّوا۟ لَهُۥ عُدَّةًۭ وَلَٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيلَ ٱقْعُدُوا۟ مَعَ ٱلْقَٰعِدِينَ

அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) "தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.

‘நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக உம்முடன் புறப்பட விரும்புகிறோம்’ என்ற அவர்களது கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தயாராகியிருப்பார்கள். ஆனால் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. எனவேதான் தமது வீடுகளில் அமர்ந்திருப்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு புறப்படுவது அவர்களுக்குச் சிரமமாகி விட்டது.

47

لَوْ خَرَجُوا۟ فِيكُم مَّا زَادُوكُمْ إِلَّا خَبَالًۭا وَلَأَوْضَعُوا۟ خِلَٰلَكُمْ يَبْغُونَكُمُ ٱلْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّٰعُونَ لَهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ

உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.

இந்த நயவஞ்சகர்கள் உங்களுடன் புறப்படாமல் இருப்பதே சிறந்ததாகும். அவர்கள் உங்களுடன் புறப்பட்டால், போரிடச் செய்யாமல் இருப்பதற்கான முயற்சி, சந்தேகங்களைத் தோற்றுவித்தல் போன்றவற்றின் ஊடாக குழப்பத்தையே ஏற்படுத்துவார்கள். உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கோல் மூட்டுவதில் விரைவாக ஈடுபடுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் பரப்பும் பொய்யைக் கேட்டு அதனை ஏற்றுப் பரப்புவர்களும் உங்களிடையே உள்ளனர். இதனால் உங்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி விடும். நம்பிக்கையாளர்களிடையே சூழ்ச்சிகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.

48

لَقَدِ ٱبْتَغَوُا۟ ٱلْفِتْنَةَ مِن قَبْلُ وَقَلَّبُوا۟ لَكَ ٱلْأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلْحَقُّ وَظَهَرَ أَمْرُ ٱللَّهِ وَهُمْ كَٰرِهُونَ

நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.

தபூக் போருக்கு முன்னாலிருந்தே இந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குழைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். -தூதரே!- பலவகையான சூழ்ச்சிகளால் போர் செய்யும் உமது எண்ணத்தை மாற்ற நினைத்தனர். ஆனால் அல்லாஹ்வின் உதவியும் பலப்படுத்தலும் உமக்குக் கிடைத்தன. தன் மார்க்கத்தைக் கண்ணியப்படுத்தி, தன் எதிரிகளை அடக்கினான். அசத்தியம் சத்தியத்தை மிகைக்க வேண்டும் என அவர்கள் விரும்புபவர்களாக இருந்ததால் சத்தியம் வெற்றி பெறுவதை அவர்கள் வெறுப்பவர்களாக உள்ளனர்.

49

وَمِنْهُم مَّن يَقُولُ ٱئْذَن لِّى وَلَا تَفْتِنِّىٓ ۚ أَلَا فِى ٱلْفِتْنَةِ سَقَطُوا۟ ۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌۢ بِٱلْكَٰفِرِينَ

"(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்" என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.

“அல்லாஹ்வின் தூதரே! போரை விட்டு பின்தங்குவதற்கு எனக்கு அனுமதியளியுங்கள். என்னை உங்களுடன் புறப்படுமாறு கட்டாயப்படுத்தி எதிரிகளின் - ரோமானியரின் - பெண்களால் நான் பாதிக்கப்பட்டு பாவத்தில் விழுந்துவிட காரணமாகிவிடாதீர்கள்” என்று நயவஞ்சகர்களில் சிலர் உம்மிடம் போலியான சாக்குப்போக்குகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதைவிட பெரும் சோதனைகளான நயவஞ்சகம், போருக்குப் புறப்படாமல் பின்தங்குதல் ஆகியவற்றில் அவர்கள் விழுந்துவிட்டார்கள். மறுமை நாளில் நரகம் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கும். எவரும் அதிலிருந்து தப்பமுடியாது. தப்புவதற்கான எந்த வழியையும் அவர்கள் பெறமாட்டார்கள்.

50

إِن تُصِبْكَ حَسَنَةٌۭ تَسُؤْهُمْ ۖ وَإِن تُصِبْكَ مُصِيبَةٌۭ يَقُولُوا۟ قَدْ أَخَذْنَآ أَمْرَنَا مِن قَبْلُ وَيَتَوَلَّوا۟ وَّهُمْ فَرِحُونَ

உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்" என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே!- அல்லாஹ்வின் அருளான உமக்கு மகிழ்ச்சியளிக்கும் வெற்றியோ போர்ச் செல்வங்களோ கிடைத்தால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள். அதற்காக கவலைப்படுகிறார்கள். உமக்கு துன்பமோ தோல்வியோ கிடைத்து விட்டால் இந்த நயவஞ்சகர்கள் கூறுகிறார்கள்: “நம்மை நாம் காத்துக் கொண்டோம் உறுதியான முடிவெடுத்து நம்பிக்கையாளர்கள் போருக்குச் சென்றது போல் நாம் போருக்குச் செல்லவில்லை. அவர்கள் சென்றதனால் கொலையுண்டு கைதுக்கும் ஆளானார்கள். ”பின்னர் இந்த நயவஞ்சகர்கள் தப்பிய மகிழ்ச்சியுடன் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்கிறார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.