Muslim99Muslim99
← Tafsir library

9. At-Tawba

The Repentance · Medinan · 129 ayahs

سُورَةُ التَّوۡبَةِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 121–129 of 129

121

وَلَا يُنفِقُونَ نَفَقَةًۭ صَغِيرَةًۭ وَلَا كَبِيرَةًۭ وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ ٱللَّهُ أَحْسَنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப்பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.

அவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் எந்த பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கும் பொருட்டு அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் பயணத்திற்கும் தகுந்த கூலியை அல்லாஹ் அவர்களுக்கு எழுதிவிடுகிறான். மறுமை நாளில் அவர்கள் செய்துகொண்டிருந்த சிறந்த செயல்களுக்குரிய கூலியை வழங்கிடுவான்.

At-Tawba 9:121Listen in Qur'an →
122

۞ وَمَا كَانَ ٱلْمُؤْمِنُونَ لِيَنفِرُوا۟ كَآفَّةًۭ ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍۢ مِّنْهُمْ طَآئِفَةٌۭ لِّيَتَفَقَّهُوا۟ فِى ٱلدِّينِ وَلِيُنذِرُوا۟ قَوْمَهُمْ إِذَا رَجَعُوٓا۟ إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

நம்பிக்கையாளர்கள் அனைவரும் போருக்குப் புறப்படுவது உகந்ததல்ல. ஏனெனில் எதிரிகளின் ஆதிக்கத்தால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களில் ஒரு பிரிவினர் போருக்குப் புறப்பட்டு, ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து செவிமடுக்கும் குர்ஆன் மார்க்க சட்ட திட்டங்கள் மூலம் மார்க்கத்தில் தெளிவு பெற்று தங்களின் சமூகத்தார் திரும்பி வரும்போது தாம் கற்றவற்றைக் கொண்டு அவர்களை எச்சரிப்பதற்கு நபியவர்களுடன் தங்கிவிடக்கூடாதா? அல்லாஹ்வின் வேதனையை விட்டு எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் அது வழிவகுக்கலாம். இது நபியவர்கள் அனுப்பிய சிறுசிறு படைகள் தொடர்பாக இறக்கப்பட்ட கட்டளையாகும். அவர்கள் தனது தோழர்களில் ஒரு பிரிவினரை தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்பார்கள்.

At-Tawba 9:122Listen in Qur'an →
123

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَٰتِلُوا۟ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلْكُفَّارِ وَلْيَجِدُوا۟ فِيكُمْ غِلْظَةًۭ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அருகில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவர்களுடன் போரிடும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதேபோன்று அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் பலத்தை அவர்களிடம் வெளிப்படுத்தும்படியும் கட்டளையிடுகிறான். அல்லாஹ் உதவி செய்வதன் மூலம், அவர்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தன்னை அஞ்சக்கூடிய நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.

At-Tawba 9:123Listen in Qur'an →
124

وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌۭ فَمِنْهُم مَّن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِۦٓ إِيمَٰنًۭا ۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَزَادَتْهُمْ إِيمَٰنًۭا وَهُمْ يَسْتَبْشِرُونَ

ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், "இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அல்லாஹ் தன் தூதர் மீது ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் நயவஞ்சகர்களில் சிலர் சிலரிடம், “உங்களில் இந்த அத்தியாயம் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தியவர்களுக்கு இறக்கப்பட்ட அத்தியாயம் அவர்களின் நம்பிக்கையோடு இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் இறக்கப்பட்ட வஹியால் அதில் அடங்கியுள்ள உலக மற்றும் மறுமை ரீதியான பயன்களால் மகிழ்ச்சியடைகிறார்கள்.

At-Tawba 9:124Listen in Qur'an →
125

وَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَىٰ رِجْسِهِمْ وَمَاتُوا۟ وَهُمْ كَٰفِرُونَ

ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.

ஆனால் நயவஞ்சகர்களுக்கோ குர்ஆன் இறங்குவது - அவர்களின் நிராகரிப்பினால் - அவர்களின் நோயையும் உளரீதியான அழுக்குகளையுமே அதிகப்படுத்துகிறது. இறக்கப்பட்ட குர்ஆனின்மூலம் அவர்களின் உள்ளங்களில் இருந்த நோய் இன்னும் அதிமாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் குர்ஆனிலிருந்து எந்தவொன்று இறங்கினாலும் அதில் சந்தேகம் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.

At-Tawba 9:125Listen in Qur'an →
126

أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِى كُلِّ عَامٍۢ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ

ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்" என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை (அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.

ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ அல்லாஹ் அவர்களின் நிலமையை அம்பலப்படுத்தி நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி அவர்களை சோதனைக்குள்ளாக்குவதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறவில்லையா? அல்லாஹ்தான் இவ்வாறு செய்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்களின் நிராகரிப்பிலிருந்து மீளாமலும் நயவஞ்சத்திலிருந்து விடுபடாமலும் உள்ளனர்! அவர்களுக்கு இறங்கிய சோதனையையும், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருப்பதும் இல்லை!

At-Tawba 9:126Listen in Qur'an →
127

وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌۭ نَّظَرَ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ هَلْ يَرَىٰكُم مِّنْ أَحَدٍۢ ثُمَّ ٱنصَرَفُوا۟ ۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَفْقَهُونَ

யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி' "உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.

நயவஞ்சகர்களைக் குறித்து கூறப்படும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கினால் நயவஞ்சகர்கள், “உங்களை யாராவது பார்க்கிறார்களா?” என்று கூறியவர்களாக அவர்களில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். யாரும் அவர்களைப் பார்க்கவில்லையெனில் அவையை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை நேர்வழி மற்றும் நலவை விட்டும் திருப்பி விட்டான், அவர்களைக் கைவிட்டு விட்டான். ஏனெனில் அவர்கள் விளங்கிக் கொள்ளாத மக்களாக இருக்கிறார்கள்.

At-Tawba 9:127Listen in Qur'an →
128

لَقَدْ جَآءَكُمْ رَسُولٌۭ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌۭ رَّحِيمٌۭ

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

அரபுக்களே! உங்கள் இனத்திலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் உங்களைப் போன்ற அரபியாவார். உங்களுக்கு சிரமம் ஏற்படுவது அவருக்கு சிரமமாக இருக்கின்றது. உங்களுக்கு வழிகாட்டுவதிலும் உங்களின் மீது அக்கறை காட்டுவதிலும் அவர் மிகவும் ஆசையுடையவர். குறிப்பாக நம்பிக்கையாளர்களின் மீது பரிவுடையவராகவும் கருணையாளராகவும் அவர் இருக்கின்றார்.

At-Tawba 9:128Listen in Qur'an →
129

فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ

(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!

தூதரே!- அவர்கள் உம்மைப் புறக்கணித்து நீர் கொண்டு வந்துள்ளதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லையெனில் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் மகத்தான அரியணையின் அதிபதியாவான்.

At-Tawba 9:129Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.