Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 71–80 of 206

71

قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُم مِّن رَّبِّكُمْ رِجْسٌۭ وَغَضَبٌ ۖ أَتُجَٰدِلُونَنِى فِىٓ أَسْمَآءٍۢ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍۢ ۚ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ

அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

ஹூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் வேதனையையும் கோபத்தையும் நீங்கள் உங்கள் மீது கடமையாக்கிக் கொண்டீர்கள். அது சந்தேகமில்லாமல் நிச்சயம் உங்களை அடைந்தே தீரும். எவ்வித யதார்த்தமும் இன்றி நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக பெயர்சூட்டிக்கொண்ட சிலைகளுக்காகவா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவைகளுக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்பதற்கு ஆதாரம் கூறும் வகையில் அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் அவசரப்படும் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது நிகழ்ந்தே தீரும்.

Al-A'raaf 7:71Listen in Qur'an →
72

فَأَنجَيْنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۖ وَمَا كَانُوا۟ مُؤْمِنِينَ

ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.

ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்தவர்களை அடியோடு அழித்துவிட்டோம். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. மாறாக நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள். வேதனைக்குத் தகுதியாகிவிட்டார்கள்.

Al-A'raaf 7:72Listen in Qur'an →
73

وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌۭ مِّن رَّبِّكُمْ ۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةًۭ ۖ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ ۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌۭ

ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.

நாம் ஸமூத் சமூகத்திற்கு அவர்களது சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதன்பால் அவர்களை அழைத்தார். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரமும் உங்களிடம் வந்துள்ளது. அது பாறையிலிருந்து வெளியான பெண் ஒட்டகமாகும். அது நீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. உங்களுக்கும் குடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் உண்டு. அதனை அல்லாஹ்வின் பூமியில் மேய விடுங்கள். அதனைப் பராமரிப்பதில் உங்கள் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள். தீங்கிழைத்தால் அதன் காரணமாக வேதனை மிக்க தண்டனை உங்களை அடையும்.

Al-A'raaf 7:73Listen in Qur'an →
74

وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ عَادٍۢ وَبَوَّأَكُمْ فِى ٱلْأَرْضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورًۭا وَتَنْحِتُونَ ٱلْجِبَالَ بُيُوتًۭا ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

இன்னும் நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).

ஆத் சமூகம் பொய் கூறி, நிராகரிப்பில் நிலைத்திருந்ததால் அவர்களை அழித்த பிறகு அவர்களுக்குப் பின் நீங்கள் தோன்றியுள்ளீர்கள். உங்களது இடத்தில் உங்களை வாழவைத்து, அதில் நீங்கள் அனுபவித்துக்கொண்டு, உங்களது தேவைகளை அடைந்துகொள்வோராக உங்களை ஆக்கி உங்களுக்கு அல்லாஹ் புரிந்த அருளை நினைத்துப்பாருங்கள். பூமியின் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். பூமியில் குழப்பம் விளைவித்துத் திரிவதை விட்டுவிடுங்கள். அது இறைவனை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிடுவதாகும்.

Al-A'raaf 7:74Listen in Qur'an →
75

قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِمَنْ ءَامَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَٰلِحًۭا مُّرْسَلٌۭ مِّن رَّبِّهِۦ ۚ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلَ بِهِۦ مُؤْمِنُونَ

அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.

அவரது சமூகத்தில் கர்வம் கொண்ட தலைவர்களும் பெரியவர்களும் தாங்கள் பலவீனர்களாகக் கருதிய நம்பிக்கையாளர்களிடம் கேட்டார்கள்: “நம்பிக்கையாளர்களே! ஸாலிஹ் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை உண்மையாகவே நீங்கள் அறிவீர்களா?” பலவீனமாக கருதப்பட்ட நம்பிக்கையாளர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் எதைக் கொண்டு எங்களிடம் அனுப்பப்பட்டாரோ அதை நாங்கள்உண்மைப்படுத்துகிறோம், ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் அடிபணிகிறோம். அதன் சட்டங்களின்படி செயல்படுவோம்.”

Al-A'raaf 7:75Listen in Qur'an →
76

قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا بِٱلَّذِىٓ ءَامَنتُم بِهِۦ كَٰفِرُونَ

அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.

அவரது சமூகத்தில் கர்வம் கொண்டவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஏற்றுக் கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். ஒருபோதும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவோ அதன்படி செயல்படவோ மாட்டோம்.”

Al-A'raaf 7:76Listen in Qur'an →
77

فَعَقَرُوا۟ ٱلنَّاقَةَ وَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا۟ يَٰصَٰلِحُ ٱئْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلْمُرْسَلِينَ

பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.

எந்த ஒட்டகத்துக்கு அவர்கள் எத்தீங்கும் இழைத்துவிடக் கூடாது என அவர் அவர்களைத் தடைசெய்தாரோ அதனை, அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் கர்வம் கொண்டு அறுத்து விட்டார்கள். பரிகாசமாகவும் ஸாலிஹ் எச்சரிக்கும் விஷயம் சாத்தியமற்றது என்று கருதியும் அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் எச்சரித்த வேதனை மிக்க தண்டனையை எங்களிடம் கொண்டுவாரும்.”

Al-A'raaf 7:77Listen in Qur'an →
78

فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَٰثِمِينَ

எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.

நிராகரிப்பாளர்கள் அவசரமாக விரும்பிய வேதனை அவர்களிடம் வந்தது. கடுமையான பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. பூமியில் முகங்குப்புற வீழ்ந்து கிடப்பவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களில் எவரும் அதிலிருந்து தப்ப முடியவில்லை.

Al-A'raaf 7:78Listen in Qur'an →
79

فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ وَلَٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّٰصِحِينَ

அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, "உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.

தனது சமூகம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கையிழந்த பிறகு ஸாலிஹ் அவர்களைப் புறக்கணித்துவிட்டார். அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டதை நான் எடுத்துரைத்துவிட்டேன். உங்களுக்கு அச்சமூட்டி, ஆர்வமூட்டி அறிவுரை கூறிவிட்டேன். ஆயினும் நன்மையின்பால் ஆர்வமூட்டி தீமையை விட்டுத் தடுப்பதில் ஆர்வமுள்ள நலம் விரும்பிகளை நீங்கள் விரும்புவதில்லை.”

Al-A'raaf 7:79Listen in Qur'an →
80

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَتَأْتُونَ ٱلْفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍۢ مِّنَ ٱلْعَٰلَمِينَ

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"

லூத் தனது சமூகத்தைக் கண்டித்தவராகக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக: “ஓரினச் சேர்க்கை என்னும் அருவருப்பான காரியத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா? நீங்கள் புதிதாகஉருவாக்கியுள்ள இந்தக் காரியத்தில் உங்களுக்கு முன் எவரும் ஈடுபடவில்லை.

Al-A'raaf 7:80Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.