Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 61–70 of 206

61

قَالَ يَٰقَوْمِ لَيْسَ بِى ضَلَٰلَةٌۭ وَلَٰكِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ

அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்.

அவர் தம் சமூகத்தின் தலைவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவதுபோல நான் வழிகெட்டவன் அல்ல. நான் என் இறைவன் காட்டிய நேரான வழியில் இருக்கின்றேன். என் இறைவனும் உங்கள் இறைவனும் அகிலுத்திலுள்ள அனைத்திற்கும் இறைவனுமான அல்லாஹ்விடமிருந்து உங்களின்பால் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

Al-A'raaf 7:61Listen in Qur'an →
62

أُبَلِّغُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَأَنصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

"நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்" (என்று கூறினார்).

அல்லாஹ் எனக்குக் கொடுத்து அனுப்பிய இறைச்செய்தியை உங்களிடம் எடுத்துரைக்கிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்கும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளிலும் உங்களுக்கு ஆர்வமூட்டுவதன் மூலமும், அவன் தடுத்துள்ளவற்றில் ஈடுபடுவதையும் அதற்குக் கிடைக்கும் தண்டனைகளைக் கொண்டு அச்சமூட்டுவதன் மூலமும் உங்களுக்கு நலவையே நான் நாடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாததை அவன் எனக்கு அறிவிக்கும் வஹியின் மூலம் நான் அறிவேன்.

Al-A'raaf 7:62Listen in Qur'an →
63

أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌۭ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍۢ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا۟ وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ

உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?

உங்களுக்கு அறிமுகமான உங்களிலுள்ள ஒரு மனிதர் வாயிலாக உங்கள் இறைவனிடமிருந்து வஹியும் அறிவுரையும் வந்துள்ளன என்பதற்காகவா ஆச்சரியப்படுகிறீர்கள்? அவர் உங்களிடையே வளர்ந்தவர்தாம். பொய்யரோ வழிகெட்டவரோ வேறொரு இனத்தைச் சேர்ந்தவரோ அல்ல. நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையைக் கொண்டு உங்களை அச்சமூட்டவும் நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை நீங்கள் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டால் உங்கள் மீது கருணை காட்டப்படலாம் என்பதற்காகவும் அவர் உங்களிடம் வந்துள்ளார்.

Al-A'raaf 7:63Listen in Qur'an →
64

فَكَذَّبُوهُ فَأَنجَيْنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِى ٱلْفُلْكِ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا عَمِينَ

அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.

அவரது சமூகத்தினர் அவர் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவரை நிராகரித்தனர். மாறாக தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்களை அழித்து விடும்படி அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். நாம் அவரையும் அவருடன் கப்பலில் ஏறிய நம்பிக்கையாளர்களையும் மூழ்காது காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்து அதில் நிலைத்திருந்தவர்களை, தண்டிப்பதற்காக இறக்கப்பட்ட வெள்ளத்தினால் மூழ்கடித்து அழித்து விட்டோம். நிச்சயமாக அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தை விட்டும் குருடாகவே இருந்தன.

Al-A'raaf 7:64Listen in Qur'an →
65

۞ وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًۭا ۗ قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ ۚ أَفَلَا تَتَّقُونَ

இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?" என்று கேட்டார்.

ஆத் சமூகத்தாரிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினோம். அவர் ஹுத் (அலை) ஆவார். அவர் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சமாட்டீர்களா?

Al-A'raaf 7:65Listen in Qur'an →
66

قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِى سَفَاهَةٍۢ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلْكَٰذِبِينَ

அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.

அவரது சமூகத்தில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி சிலைகளை விட்டு விட வேண்டும் என்று நீர் எங்களை அழைத்த போது நீர் புத்திக் கோளாறு, மடமையிலுமே இருக்கின்றீர் என்பதை நாங்கள் நன்கு அறிந்து கொண்டோம். நீர் தூதர் என்ற வாதத்தில் நீர் பொய்யர் என்பதாகவே நாம் கருதுகின்றோம்.”

Al-A'raaf 7:66Listen in Qur'an →
67

قَالَ يَٰقَوْمِ لَيْسَ بِى سَفَاهَةٌۭ وَلَٰكِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ

அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.

ஹூத் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்: “என் சமூகமே! எனக்கு புத்தி கோளாறோ, மடமையோ இல்லை. மாறாக நிச்சயமாக அகிலமனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.”

Al-A'raaf 7:67Listen in Qur'an →
68

أُبَلِّغُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَأَنَا۠ لَكُمْ نَاصِحٌ أَمِينٌ

"நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்" (என்று கூறினார்).

அல்லாஹ் எனக்கு உங்களிடம் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்ட ஏகத்துவத்தையும் சட்டதிட்டங்களையுமே நான் எடுத்துரைக்கிறேன். நான் உங்கள் எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டவற்றில் உங்களுக்கு விசுவாசம்மிக்கவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.

Al-A'raaf 7:68Listen in Qur'an →
69

أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌۭ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍۢ مِّنكُمْ لِيُنذِرَكُمْ ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ قَوْمِ نُوحٍۢ وَزَادَكُمْ فِى ٱلْخَلْقِ بَصْۜطَةًۭ ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்)

வானவர் இனத்தையோ ஜின் இனத்தையோ சாராத உங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் வாயிலாக உங்களை எச்சரிப்பதற்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்துள்ளது உங்களை ஆச்சரியமூட்டுகிறதா? பூமியில் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், தமது நிராகரிப்பினால் அழிந்துபோன நூஹ் நபியின் சமூகத்திற்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கியதற்கும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு உடல் பலத்தையும் வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து தப்பித்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த விசாலமான அருட்கொடைகளை நினைவுகூருங்கள்.

Al-A'raaf 7:69Listen in Qur'an →
70

قَالُوٓا۟ أَجِئْتَنَا لِنَعْبُدَ ٱللَّهَ وَحْدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا ۖ فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.

அவருடைய சமூகத்தார் அவரிம் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டுவிட வேண்டும் என்று கூறுவதற்காகவா எங்களிடம் வந்துள்ளீர்? உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நேரும் என நீர் எச்சரிக்கும் வேதனையைக் கொண்டுவாரும்.”

Al-A'raaf 7:70Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.