Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 206

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

الٓمٓصٓ

அலிஃப், லாம், மீம், ஸாத்.

பார்க்க அல்பகரா என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனம்.

2

كِتَٰبٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِى صَدْرِكَ حَرَجٌۭ مِّنْهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.

தூதரே! கண்ணியமிக்க குர்ஆன் அல்லாஹ் உம்மீது இறக்கிய வேதமாகும். எனவே உமது நெஞ்சில் அது குறித்து இறுக்கமோ சந்தேகமோ ஏற்பட்டு விட வேண்டாம். நீர் மக்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் ஆதாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் இதனை அல்லாஹ் உம்மீது இறக்கியுள்ளான். ஏனெனில் நம்பிக்கையாளர்கள்தாம் நினைவூட்டலைக் கொண்டு பயனடைவார்கள்.

3

ٱتَّبِعُوا۟ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ۗ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

மனிதர்களே! உங்கள் இறைவன் உங்கள் மீது இறக்கிய வேதத்தையும் தூதரின் வழிமுறையையும் பின்பற்றுங்கள். ஷைத்தான்கள் அல்லது தீய பாதிரிகள் ஆகியோரில் நீங்கள் நண்பர்களாகக் கருதுவோரின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவர்களது மன இச்சைகள் கூறுவதற்காக அல்லாஹ் இறக்கியதை விட்டு விட்டு அவர்களை நேசம் கொள்கிறீர்கள். நீங்கள் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் சத்தியத்தை விட்டு விட்டு மற்றவற்றிற்கு முன்னுரிமை அளித்திருக்க மாட்டீர்கள்; உங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டிருப்பீர்கள்; அதனைத் தவிர மற்றவற்றை விட்டிருப்பீர்கள்.

4

وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَٰهَا فَجَآءَهَا بَأْسُنَا بَيَٰتًا أَوْ هُمْ قَآئِلُونَ

(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.

நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உறுதியாக நிலைத்திருந்த எவ்வளவோ ஊர்களை நம் வேதனையால் அழித்திருக்கின்றோம். அவர்கள் இரவிலோ பகலிலோ அலட்சியத்தில் ஆழ்ந்திருந்த போது கடுமையான நம்முடைய வேதனை அவர்கள் மீது இறங்கியது. அவர்களால் வேதனையை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளவும் முடியவில்லை; அவர்களின் பொய்யான தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை.

5

فَمَا كَانَ دَعْوَىٰهُمْ إِذْ جَآءَهُم بَأْسُنَآ إِلَّآ أَن قَالُوٓا۟ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்; "நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.

வேதனை இறங்கிய பிறகு அல்லாஹ்வை நிராகரித்த தங்களின் அக்கிரமத்தை ஒத்துக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

6

فَلَنَسْـَٔلَنَّ ٱلَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْـَٔلَنَّ ٱلْمُرْسَلِينَ

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.

மறுமை நாளில், எந்தெந்த சமூகங்களின்பால் தூதர்களை அனுப்பினோமோ அவர்களிடம், ‘தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்?’ என்று நிச்சயம் விசாரிப்போம். தூதர்கள் தங்களின் தூதை நிறைவேற்றினார்களா? அவர்களது சமூகங்கள் அவர்களுக்கு என்ன பதிலளித்தன என்று தூதர்களிடமும் விசாரித்தே தீருவோம்.

7

فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍۢ ۖ وَمَا كُنَّا غَآئِبِينَ

ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.

படைப்புகள் அனைவரும், நமது அறிவுடனே இவ்வுலகில் செய்த செயல்கள் குறித்து நாம் அவர்களிடம் எடுத்துரைப்போம். அவர்களின் செயல்கள் அனைத்தையும் நாம் நன்கறிந்தவர்களாக இருந்தோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை. எந்த நேரத்திலும் நாம் அவர்களை விட்டு மறைந்தும் இருக்கவில்லை.

8

وَٱلْوَزْنُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ ۚ فَمَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

மறுமை நாளில் செயல்கள் அனைத்தும் எவ்வித அநீதியுமின்றி நீதியுடன் எடைபோடப்படும். எவர்களது நன்மையின் எடைத்தட்டு தீமையின் எடைத்தட்டை விட கனமாகி விடுமோ அவர்கள்தாம் விரும்பியதைப் பெற்று பயத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாவர்.

9

وَمَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُم بِمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَظْلِمُونَ

யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.

எவர்களது தீமையின் எடைத்தட்டு நன்மையின் எடைத்தட்டைவிட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தன் காரணமாக மறுமை நாளில் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தி இழப்படைபவார்கள்.

10

وَلَقَدْ مَكَّنَّٰكُمْ فِى ٱلْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ ۗ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.

ஆதமின் மக்களே! நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் நீங்கள் வாழ்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது உங்கள் மீது கடமையாயிருந்தது. ஆனாலும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்தினீர்கள்.

Al-A'raaf 7:10Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.