Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 201–206 of 206

201

إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ إِذَا مَسَّهُمْ طَٰٓئِفٌۭ مِّنَ ٱلشَّيْطَٰنِ تَذَكَّرُوا۟ فَإِذَا هُم مُّبْصِرُونَ

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டத்தால் பாதிக்கப்பட்டு பாவங்கள் புரிந்தால் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பாவிகளுக்கு அவன் வழங்கும் தண்டனையையும் கீழ்ப்படிந்தவர்களுக்கு அவன் வழங்கும் நற்கூலியையும் நினைவுகூர்வார்கள். தங்களின் பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் திரும்பி விடுவார்கள். எனவே அவர்கள் சத்தியத்தில் நிலைத்து, தாம் செய்தவற்றிலிருந்து விழிப்படைந்து தவிர்ந்து கொள்வார்கள்.

Al-A'raaf 7:201Listen in Qur'an →
202

وَإِخْوَٰنُهُمْ يَمُدُّونَهُمْ فِى ٱلْغَىِّ ثُمَّ لَا يُقْصِرُونَ

ஆனால் ஷைத்தான்களின் சதோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.

ஷைத்தான்களின் சகோதரர்களான பாவிகள் மற்றும் நிராகரிப்பாளர்களை, ஷைத்தான்கள் ஒவ்வொரு பாவம் பாவமாக செய்ய வைத்து மென்மேலும் வழிகெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஷைத்தானும் வழிகெடுப்பதை விட்டு விடுவதில்லை. மனிதர்களில் உள்ள பாவிகளும் ஷைதான்களுக்கு வழிப்பட்டு தீங்கிழைப்பதை விட்டு விடுவதில்லை.

Al-A'raaf 7:202Listen in Qur'an →
203

وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍۢ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا ۚ قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى ۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ

நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், "நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்பார்கள்; (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.

தூதரே!- நீர் ஏதேனும் சான்றினைக் கொண்டு வந்தால் உம்மை பொய்யர் என்று கூறி அதனைப் புறக்கணித்து விடுகிறார்கள். நீர் சான்றினைக் கொண்டு வரவில்லையெனில், “உம் புறத்திலிருந்து ஏதேனும் ஒரு சான்றினை புனைந்து கொண்டுவர வேண்டாமா” என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் புறத்திலிருந்து சுயமாக என்னால் சான்றினைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்தக் குர்ஆன் உங்களைப் படைத்து உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் அல்லாஹ்விடமிருந்து சான்றுகளையும் ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது. அது நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. நம்பிக்கை கொள்ளாதவர்களோ வழிகேடர்களாகவும் துர்பாக்கியசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.

Al-A'raaf 7:203Listen in Qur'an →
204

وَإِذَا قُرِئَ ٱلْقُرْءَانُ فَٱسْتَمِعُوا۟ لَهُۥ وَأَنصِتُوا۟ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.

குர்ஆன் படித்துக் காட்டப்பட்டால் படிப்பதை செவிசாய்த்துக் கேளுங்கள். அல்லாஹ் உங்களின் மீது கருணை காட்டும் பொருட்டு படிக்கப்படும் பொழுது பேசவோ வேறு பணிகளில் ஈடுபடவோ செய்யாதீர்கள்.

Al-A'raaf 7:204Listen in Qur'an →
205

وَٱذْكُر رَّبَّكَ فِى نَفْسِكَ تَضَرُّعًۭا وَخِيفَةًۭ وَدُونَ ٱلْجَهْرِ مِنَ ٱلْقَوْلِ بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلْغَٰفِلِينَ

(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.

தூதரே!- உம் இறைவனான அல்லாஹ்வை பணிவுடனும் பயத்துடனும் நினைவுகூர்வீராக. உமது பிரார்த்தனையில் உயர்ந்த சப்தமின்றியும் தாழ்ந்த சப்தமின்றியும் நடுநிலையைக் கடைப்பிடிப்பீராக. சிறப்பான இரு நேரங்களான பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரார்த்தனை புரிவீராக. அல்லாஹ்வின் நினைவை விட்டும் அலட்சியமாக இருப்பவர்களில் ஒருவராகிவிடாதீர்.

Al-A'raaf 7:205Listen in Qur'an →
206

إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ ۩

எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களேர் அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துக்கொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.

தூதரே!- உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை. மாறாக சளைக்காமல் அவனுக்கே அடிபணிகிறார்கள். அவர்கள் இரவும் பகலும் அவனுக்குப் பொருத்தமற்ற விஷயங்களை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகிறார்கள். அவனுக்கு மட்டுமே அவர்கள் சிரம்பணிகிறார்கள்.

Al-A'raaf 7:206Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.