Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 191–200 of 206

191

أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!

வணக்கத்திலே இந்த சிலைகளையும் மற்றவற்றையும் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குகிறார்களா? இந்த சிலைகள் வணங்கப்படும் தகுதியைப் பெற, நிச்சயமாக அவை எதையும் படைக்கவில்லை. மாறாக அவையே படைக்கப்பட்டவைதாம், என்பதை அவர்கள் அறிந்தேயுள்ளார்கள். பின்னர் எவ்வாறு இவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.

Al-A'raaf 7:191Listen in Qur'an →
192

وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًۭا وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ

அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.

வணங்கப்படும் இவைகள் தங்களை வணங்கியவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெறாது. ஏன் அவற்றால் தமக்குத் தாமே கூட உதவி செய்துகொள்ள முடியாது. எனவே எவ்வாறு அதனை அவர்கள் வணங்குகின்றனர்!?

Al-A'raaf 7:192Listen in Qur'an →
193

وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَآءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَٰمِتُونَ

(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.

இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வை விடுத்து நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட சிலைகளை நேர்வழியின் பக்கம் அழைத்தால் அவற்றால் உங்களுக்குப் பதிலளிக்கவோ உங்களைப் பின்பற்றவோ முடியாது. நீங்கள் அவற்றை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் ஒன்றுதான். ஏனெனில் அவை புரிந்துகொள்ளவோ செவியேற்கவோ பேசவோ முடியாத வெறும் திண்மப் பொருள்கள்தாம்.

Al-A'raaf 7:193Listen in Qur'an →
194

إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!

இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கக்கூடியவை அல்லாஹ்வின் படைப்புகள்தாம்; அவனுக்குக் கட்டுப்பட்டவைதாம். இந்த விஷயத்தில் அவர்கள் உங்களைப் போன்றவர்கள். அவர்களை விட நீங்கள் சிறந்தவர்கள். ஏனெனில் நீங்கள் உயிருள்ளவர்கள். பேசுகிறீர்கள், நடக்கிறீர்கள், கேட்கிறீர்கள், பார்க்கிறீர்கள். உங்களின் சிலைகளோ இவ்வாறுகூட இல்லை. அவர்களுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக நீங்கள் கூறும் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழையுங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.

Al-A'raaf 7:194Listen in Qur'an →
195

أَلَهُمْ أَرْجُلٌۭ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍۢ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌۭ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌۭ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ

அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.

நீங்கள் தெய்வங்களாக ஆக்கிக் கொண்ட இந்த சிலைகளுக்கு உங்களுடைய தேவைகளுக்காக நடந்து செல்லத்தக்க கால்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களை விட்டும் தீங்கைத் வலிமையிடன் தடுக்கும் கைகள் இருக்கின்றனவா? அல்லது உங்களால் பார்க்க முடியாதவற்றைப் பார்த்து உங்களுக்கு அறிவிக்கத்தக்க கண்கள் இருக்கின்றனவா? அல்லது உங்களுக்கு மறைவானவற்றைக் கேட்டு அதனை உங்களுக்கு எத்திவைக்கத்தக்க காதுகள் இருக்கின்றனவா? இவற்றில் எதையும் அவை பெறவில்லையெனில், எவ்வாறு அவற்றை நன்மையளித்து தீமையை அகற்றுவதற்காக வணங்குகிறீர்கள்? தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்கியவற்றை அழையுங்கள். பின்னர் நீங்களும் அவர்களும் சேர்ந்து எனக்குக் கேடு விளைவிக்க திட்டம் தீட்டுங்கள். எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்.

Al-A'raaf 7:195Listen in Qur'an →
196

إِنَّ وَلِۦِّىَ ٱللَّهُ ٱلَّذِى نَزَّلَ ٱلْكِتَٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّٰلِحِينَ

"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.

நிச்சயமாக எனது உதவியாளன் என்னைப் பாதுகாக்கும் அல்லாஹ்வே. அவனைத் தவிர வேறு யாரையும் ஆதரவு வைக்க மாட்டேன். உங்களின் சிலைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன். அவனே மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக என்மீது குர்ஆனை இறக்கினான். அவனே தன் நல்லடியார்களைப் பொறுப்பெடுத்து பாதுகாத்து, உதவி செய்கிறான்.

Al-A'raaf 7:196Listen in Qur'an →
197

وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ

அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.

இணைவைப்பாளர்களே!- நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் உங்களுக்கு உதவி புரியவோ தமக்குத்தாமே உதவி புரியவோ சக்திபெற மாட்டா. அவை எதற்கும் இயலாதவையாகும். அல்லாஹ்வை விடுத்து எவ்வாறு நீங்கள் அவற்றை வணங்குகிறீர்கள்?

Al-A'raaf 7:197Listen in Qur'an →
198

وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَسْمَعُوا۟ ۖ وَتَرَىٰهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ

நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளை நீங்கள் நேர்வழியின் பக்கம் அழைத்தாலும் உங்களின் அழைப்பை அவை செவியுற மாட்டா. அவை உங்களைப் பார்ப்பது போல் தோன்றும். ஆனால் அவை பார்க்கமுடியாத திண்மப் பொருளாகும். அவர்கள் மனித தோற்றத்தில் அல்லது பிற விலங்குகளின் தோற்றத்தில் சிலைகளைச் செய்பவர்களாக இருந்தனர். அவற்றிற்கு கைகள், கால்கள், கண்கள் இருந்தன. ஆனால் அவை உயிரோ அசைவோ அற்ற திண்மப்பொருளாக இருந்தன.

Al-A'raaf 7:198Listen in Qur'an →
199

خُذِ ٱلْعَفْوَ وَأْمُرْ بِٱلْعُرْفِ وَأَعْرِضْ عَنِ ٱلْجَٰهِلِينَ

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

தூதரே!- மக்களிடமிருந்து அவர்கள் மனமுவந்து செய்பவற்றையும் அவர்களுக்கு இயலுமான பண்புகளையும் செயல்களையும் பொருந்திக்கொள்வீராக! அவர்களின் இயல்புக்கு முரணானவற்றை அவர்கள் மீது திணித்துவிடாதீர். அது அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி விடும். அழகிய சொல்லையும் செயலையும் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிடுவீராக. மூடர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்களின் மூடத்தனத்தால் அவர்களை எதிர்கொண்டு விடாதீர். உமக்குத் தீங்கிழைத்தவருக்கு நீரும் தீங்கிழைக்க வேண்டாம். உமக்குத் வழங்காதவருக்கு நீரும் வழங்காமல் இருக்க வேண்டாம்.

Al-A'raaf 7:199Listen in Qur'an →
200

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَٰنِ نَزْغٌۭ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

தூதரே!- ஷைத்தான் உமக்கு ஏதேனும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விட்டதாக நீர் உணர்ந்தால் அல்லது நன்மையான செயலை விட்டும் உம்மைத் தடுத்தால் அல்லாஹ்வின்பால் அடைக்கலம் பெற்றுக் கொள்வீராக. அவனைப் பற்றிக் கொள்வீராக. ஏனெனில் நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவன் பக்கம் நீர் அடைக்கலம் தேடுவதை அவன் நன்கறிந்தவன். அவன் ஷைத்தானிடமிருந்து உம்மைப் பாதுகாப்பான்.

Al-A'raaf 7:200Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.