Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 181–190 of 206

181

وَمِمَّنْ خَلَقْنَآ أُمَّةٌۭ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.

நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு தாமும் நேர்வழியடைந்து, மற்றவர்களையும் இதன் பக்கம் அழைத்து அவர்களும் நேர்வழி பெற வழிவகுக்கும் ஒரு சமூகத்தினரும் இருக்கின்றார்கள். அவர்கள் நீதியுடன் தீர்ப்பு வழங்குகிறார்கள். அநியாயம் இழைக்கமாட்டார்கள்.

Al-A'raaf 7:181Listen in Qur'an →
182

وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ

எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.

நம்முடைய சான்றுகளை நம்பாமல், அவற்றைப் பொய்பித்து மறுத்தவர்களுக்கு நாம் வாழ்வாதாரத்தின் வாசல்களை திறந்துவைப்போம், அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அல்ல. மாறாக அவர்கள் தம் வழிகேட்டில் மென்மேலும் தொடருவதற்காக அவர்களை விட்டுப் பிடிப்பதற்காக. எதிர்பாராத சமயத்தில் திடீரென நம் வேதனை அவர்களைத் தாக்கி விடும்.

Al-A'raaf 7:182Listen in Qur'an →
183

وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ

(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.

அவர்கள் தண்டிக்கப்படுவோரல்ல என்று அவர்கள் கருதுமளவுக்கு நாம் அவர்களுக்குத் தண்டனையை தாமதப்படுத்துகிறோம். எனவே அவர்கள் தங்களின் வழிகேட்டிலும், நிராகரிப்பிலும் வேதனை பன்மடங்காகும் வரை நிலைத்து நிற்கிறார்கள். என் சூழ்ச்சி பலமானது. எனவேதான் அவர்களைக் கைவிட்டு விடும் நோக்கில் வெளிரங்கத்தில் அவர்களுக்கு நன்மைசெய்கிறேன்.

Al-A'raaf 7:183Listen in Qur'an →
184

أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ ۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌ

அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

அல்லாஹ்வுடைய சான்றுகளையும் அவனுடைய தூதரையும் நிராகரிக்கும் இவர்கள் சிந்திக்கமாட்டார்களா? முஹம்மது பைத்தியக்காரர் அல்ல, அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அவனால் அனுப்பப்பட்டுள்ள தூதரே என்பதைப் புரிந்துகொள்ள, அவர்களது அறிவைச் செயற்படுத்தக் கூடாதா?

Al-A'raaf 7:184Listen in Qur'an →
185

أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?

வானங்களிலும் பூமியிலும் காணப்படும் அல்லாஹ்வின் ஆட்சியை படிப்பினை பெறும் நோக்கோடு அவர்கள் சிந்திக்கவில்லையா? அவற்றில் அல்லாஹ் படைத்த உயிரினங்கள், தாவரங்கள், ஏனையவற்றை அவர்கள் பார்க்கவில்லையா? தங்களின் தவணைகள் நெருங்கிவிட்டன. அதற்குள் அல்லாஹ்வின்பால் மீண்டுவிட வேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திக்கவில்லையா? இந்த குர்ஆனின் மீதும் அதிலுள்ள வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் வேறு எந்த வேதத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?

Al-A'raaf 7:185Listen in Qur'an →
186

مَن يُضْلِلِ ٱللَّهُ فَلَا هَادِىَ لَهُۥ ۚ وَيَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ

எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.

யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டாமல் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை. அவர்கள் நேர்வழி பெறாதவாறு தங்களின் வழிகேட்டிலும் நிராகரிப்பிலும் தடுமாறித் திரியுமாறு அல்லாஹ் அவர்களை விட்டுவிடுகிறான்.

Al-A'raaf 7:186Listen in Qur'an →
187

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةًۭ ۗ يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.

இந்த பிடிவாதம் மிக்க நிராகரிப்பாளர்கள் மறுமை நாளைக் குறித்து அது எப்போது நிகழும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். முஹம்மதே! நீர் கூறுவீராக: “என்னிடமோ மற்றவர்களிடமோ அது குறித்த அறிவு இல்லை. அல்லாஹ் மட்டுமே அதனைக் குறித்து அறிவான். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அல்லாஹ்வே அதனை வெளிப்படுத்துவான். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அது தோன்றுவதை அறியமாட்டார்கள். அது திடீரென்றே உங்களிடம் வரும். நீர் மறுமையைக் குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருப்பது போல அதனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். உம் இறைவனைப் பற்றி நீர் நன்கறிந்துள்ளதால் நீர் அதனைப் பற்றி அவனிடம் கேட்க மாட்டீர் என்பதை அவர்கள் அறியவில்லை. முஹம்மதே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாள் குறித்த அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.”

Al-A'raaf 7:187Listen in Qur'an →
188

قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًۭا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ وَبَشِيرٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ

(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."

முஹம்மதே! நீர் கூறுவீராக: “எனக்கு நான் பலனளிக்கவோ என்னை விட்டும் தீங்கினை அகற்றவோ நான் சக்தி பெறமாட்டேன். ஆயினும் அல்லாஹ் நாடியவற்றைத் தவிர. அவனுக்கே அந்த ஆற்றல் உண்டு. அல்லாஹ் கற்றுத் தந்ததைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. நான் மறைவானவற்றை அறியமாட்டேன். அதனை நான் அறிந்திருந்தால் எனக்கு நன்மைகளைக் கொண்டு வரும், என்னை விட்டும் தீங்குகளை அகற்றும் விஷயங்களைச் செய்திருப்பேன். ஏனெனில் ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு முன்னும் அதன் முடிவு பற்றியும் நான் அறிந்ததனால் அவ்வாறு செய்திருப்பேன். நான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதரே தவிர வேறில்லை. அவனுடைய வேதனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். நான் அல்லாஹ்வின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டு நான் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தும் மக்களுக்கு சங்கையான நன்மை உண்டென நற்செய்தி கூறுகிறேன்.

Al-A'raaf 7:188Listen in Qur'an →
189

۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًۭا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَٰلِحًۭا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ

அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

ஆண்கள் பெண்களே!- அவன்தான் உங்களை ஆதம் என்ற ஒரு உயிரிலிருந்து படைத்தான். ஆதமிலிருந்து அவருடைய விலா எலும்பிலிருந்து அவருடைய மனைவி ஹவ்வாவை நிம்மதி பெறுவதற்காகப் படைத்தான். கணவன் மனைவியுடன் கூடிய போது அவள் இலேசாக கர்ப்பமுற்றாள். அது ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் அவளால் அதை உணர முடியவில்லை. இந்த கர்ப்பத்துடன் அவள் தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே சென்றாள். எவ்வித சுமையையும் அவள் உணரவில்லை. அவளுடைய வயிற்றில் அது பெரிதானபோது அவள் கனத்தை உணர்ந்த போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனிடம் பின்வருமாறு இறைஞ்சினார்கள்: -“எங்கள் இறைவா!- எங்களுக்கு நீ பரிபூரணமான, ஆரோக்கியமான குழந்தையை அளித்தால் நாங்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுவோம்.”

Al-A'raaf 7:189Listen in Qur'an →
190

فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحًۭا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ

அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்."

அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்கள் பிரார்த்தனை செய்தது போல் நல்ல குழந்தையை வழங்கிய போது அவன் தங்களுக்கு கொடையாக வழங்கியவற்றில் இணைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமது குழந்தையை அல்லாஹ் அல்லாதவருக்கு அடிமையாக்கி அதற்கு அப்துல் ஹாரிஸ் (விவசாயியின் அடிமை) எனப் பெயரிட்டனர். எல்லா இணைகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன்; வணக்கத்திற்குத் தகுதியானவன்.

Al-A'raaf 7:190Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.