Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 171–180 of 206

171

۞ وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌۭ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍۢ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்" (என்று கூறினோம்).

தூதரே! இஸ்ராயீலின் மக்கள் தவ்ராத்தில் உள்ளவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த போது நாம் அவர்கள் மீது மலையை உயர்த்தியதை நினைவுகூர்வீராக. அது அவர்களின் தலைக்கு மேலிருக்கும் மேகம் போல ஆகிவிட்டது. அது தங்களின் மீது விழுந்து விடும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அப்போது அவர்களிடம் கூறப்பட்டது: “நாம் உங்களுக்கு வழங்கியதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் பொருட்டு அதில் அவன் கூறிய சட்டங்களை நினைவுகூர்ந்து செயல்படுத்துங்கள். அவனை மறந்து விடாதீர்கள்.”

Al-A'raaf 7:171Listen in Qur'an →
172

وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ ۛ شَهِدْنَآ ۛ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَٰفِلِينَ

உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.

தூதரே! ஆதமின் மக்களின் முதுகந்தண்டுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை உம் இறைவன் வெளியாக்கியதை நினைவுகூர்வீராக. தானே படைத்துப் பரிபாலிப்பவன் என்பதை அவர்களின் இயல்பில் அவன் வைத்ததன் மூலம் தனது தெய்வீகத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் செய்யுமுகமாக அவர்களிடம், “நான் உங்கள் இறைவன் இல்லையா?” என்று கேட்டான். அவர்கள் அனைவரும், ”ஆம். நிச்சயமாக நீதான் எங்களின் இறைவன்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்களுக்கெதிரான அல்லாஹ்வின் ஆதாரத்தை நீங்கள் மறுத்து, மறுமை நாளில் ‘இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக நாம் உங்களை சோதித்து உங்களிடம் வாக்குறுதி வாங்கிவிட்டோம்.”

Al-A'raaf 7:172Listen in Qur'an →
173

أَوْ تَقُولُوٓا۟ إِنَّمَآ أَشْرَكَ ءَابَآؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةًۭ مِّنۢ بَعْدِهِمْ ۖ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلْمُبْطِلُونَ

அல்லது, "இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?" என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

அல்லது உங்களின் முன்னோர்களே வாக்குறுதியை மீறி அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்கள். நீங்கள் வெறுமனே இணைவைப்பில் உங்கள் முன்னோர்களைப் பின்பற்றக்கூடியவர்களாகவே இருந்தீர்கள் என நீங்கள் வாதிட்டு, எங்கள் இறைவா! தங்களின் இணைவைப்பின் மூலம் தங்களின் செயல்களை வீணாக்கிய எமது முன்னோர்களின் செயலுக்காக எங்களை குற்றம்பிடித்து தண்டிக்கலாமா? எங்கள் அறியாமை, நமது முன்னோர்களைப் பின்பற்றியதனால் நம் மீது எக்குற்றமும் இல்லை, என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவும்தான்.

Al-A'raaf 7:173Listen in Qur'an →
174

وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْءَايَٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ

அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.

முன்னர் நிராகரித்த சமூகங்களின் இருப்பிடம் தொடர்பாக வசனங்களைத் தெளிவுபடுத்தியது போன்று இவர்கள் இணைவைப்பிலிருந்து நீங்கி அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக இவர்களுக்கும் அவற்றைத் தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறுதான் தாமாகவே அவர்கள் அல்லாஹ்வுக்கு வழங்கிய உறுதிமொழியில் இடம்பெற்றுள்ளது.

Al-A'raaf 7:174Listen in Qur'an →
175

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ

(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.

தூதரே! இஸ்ராயீலின் மக்களுக்கு அவர்களில் ஒரு மனிதனின் செய்தியை எடுத்துரைப்பீராக. நாம் அவனுக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். அவன் அவற்றை அறிந்து அது குறிப்பிடும் சத்தியத்தை அறிந்து கொண்டான். ஆனால் அதன்படி செயல்படாமல் அதிலிருந்து வெளியேறிவிட்டான். ஷைத்தான் அவனுடன் சேர்ந்து அவனுடைய தோழனாகிவிட்டான். நேர்வழிபெற்ற பிறகு அவன் அழியக்கூடிய வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

Al-A'raaf 7:175Listen in Qur'an →
176

وَلَوْ شِئْنَا لَرَفَعْنَٰهُ بِهَا وَلَٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

இந்த வசனங்களின் மூலம் நாம் அவனுக்குப் பயனளிக்க நாடியிருந்தால் அவனுக்கு நற்செயல் புரியும் வாய்ப்பை வழங்கி இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுடைய அந்தஸ்தை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் தனது மறுமையை விட இம்மைக்கு முன்னுரிமை வழங்கி தன் மனம் விரும்பும் அசத்தியத்தைப் பின்பற்றி இவ்வுலக இன்பங்களின்பால் சாய்ந்து தனது தோல்விக்கு வழிவகுப்பவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். உலக இன்பங்களின் மீது அவன் கொண்ட பேராசைக்கு உதாரணம் நாயைப் போன்றது. அது எல்லா நிலைகளிலும் மூச்சிறைத்துக் கொண்டே இருக்கும். அமர்ந்து இருந்தாலும் மூச்சிறைக்கும். விரட்டப்பட்டாலும் மூச்சிறைக்கும். மேற்கூறப்பட்ட உதாரணம் நம் சான்றுகளை நிராகரிக்கும் வழிகெட்ட மக்களுக்குரிய உதாரணமாகும் . தூதரே! அவர்கள் சிந்தித்து நிராகரிப்பிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் விலகுவதற்காக அவர்களுக்கு சம்பவங்களை எடுத்துரைப்பீராக.

Al-A'raaf 7:176Listen in Qur'an →
177

سَآءَ مَثَلًا ٱلْقَوْمُ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَأَنفُسَهُمْ كَانُوا۟ يَظْلِمُونَ

நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

நம்முடைய சான்றுகளையும் ஆதாரங்களையும் நம்பாமல் நிராகரித்தவர்களைவிட தீய மக்கள் வேறு யாரும் இல்லை. அதன் மூலம் அவர்கள் தம்மை அழிவில் போட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.

Al-A'raaf 7:177Listen in Qur'an →
178

مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِى ۖ وَمَن يُضْلِلْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ

அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;. யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.

அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழிபெற்றவராவார். அல்லாஹ் யாருக்கு வழிகாட்டாமல் கைவிட்டுவிடுகிறானோ, உறுதியாக அவர்கள்தாம் மறுமை நாளில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் இழந்து நஷ்டமடைந்தவர்களாவர். அறிந்துகொள்ளுங்கள், இதுதான் தெளிவான நஷ்டமாகும்.

Al-A'raaf 7:178Listen in Qur'an →
179

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًۭا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌۭ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌۭ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌۭ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.

நாம் மனிதர்களிலும் ஜின்களிலும் பெரும்பாலோரை நரகத்திற்காகவே படைத்துள்ளோம். அவர்கள் நரகவாதிகளுக்குரிய செயல்களைச் செய்வார்கள் என்பதை நாம் அறிந்திருந்ததனால்தான் அவ்வாறு செய்தோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு தங்களுக்குப் பயனளிக்கும், தீங்கிழைக்கும் விஷயங்களை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு பிரபஞ்சத்திலும் தங்களுக்குள்ளும் இருக்கும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கண்டு படிப்பினை பெற மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் சான்றுகளைச் செவிமடுத்து அதிலுள்ளவற்றைச் சிந்திக்கமாட்டார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் பகுத்தறிவின்மையில் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக கால்நடைகளை விடவும் வழிகெட்டவர்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.

Al-A'raaf 7:179Listen in Qur'an →
180

وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَا ۖ وَذَرُوا۟ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ أَسْمَٰٓئِهِۦ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.

அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பரிபூரணத்தையும் அறிவிக்கும் அழகிய பெயர்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவற்றைக் கொண்டு நீங்கள் விரும்பும் விஷயத்தை அல்லாஹ்விடம் கேளுங்கள். அவற்றின் மூலம் அவனைப் புகழுங்கள். இந்தப் பெயர்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்குதல் அல்லது இவற்றை மறுத்தல் அல்லது இவற்றின் பொருளைத் திரித்தல் அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை அவற்றுக்கு உவமையாக்குதல் ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை விட்டுப் நெறிபிறழ்ந்து செல்வோரை விட்டுவிடுங்கள். அவற்றைச் சத்தியத்தை விட்டும் திருப்பும் இவர்களுக்கு, அவர்கள் செய்துகொண்டிந்த செயல்களினால் வேதனைமிக்க தண்டனையை நாம் கூலியாக வழங்குவோம்.

Al-A'raaf 7:180Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.