Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 161–170 of 206

161

وَإِذْ قِيلَ لَهُمُ ٱسْكُنُوا۟ هَٰذِهِ ٱلْقَرْيَةَ وَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا۟ حِطَّةٌۭ وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًۭا نَّغْفِرْ لَكُمْ خَطِيٓـَٰٔتِكُمْ ۚ سَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ

இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது

தூதரே! அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “நீங்கள் பைத்துல் முகத்தஸில் நுழையுங்கள். அந்த ஊரின் விளைச்சல்களில் எந்த இடத்திலிருந்து, எந்த நேரத்தில் விரும்பினாலும் உண்ணுங்கள். “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக” என்று கூறுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக வாயிலில் நுழையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் நாம் உங்கள் பாவங்களை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு இவ்வுலக மறுவுலக நன்மைகளை அதிகரித்து வழங்குவோம்.

Al-A'raaf 7:161Listen in Qur'an →
162

فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًۭا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَظْلِمُونَ

அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.

அவர்களில் அநியாயக்காரர்கள் தங்களுக்கு ஏவப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். மன்னிப்பு வேண்டுவதற்குப் பதிலாக பரிகாசமாக ‘தானியத்திற்குள் விதை’ என்றார்கள். கட்டளையிடப்பட்ட செயலையும் மாற்றிவிட்டார்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக தலை குனிந்தவாறு நுழைவதற்குப் பதிலாக தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.

Al-A'raaf 7:162Listen in Qur'an →
163

وَسْـَٔلْهُمْ عَنِ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَتْ حَاضِرَةَ ٱلْبَحْرِ إِذْ يَعْدُونَ فِى ٱلسَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًۭا وَيَوْمَ لَا يَسْبِتُونَ ۙ لَا تَأْتِيهِمْ ۚ كَذَٰلِكَ نَبْلُوهُم بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம்.

தூதரே! சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பின் மீன் பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய தமது முன்னோர்களை அல்லாஹ் தண்டித்ததை நினைவுபடுத்தும் விதமாக யூதர்களிடம் கேட்பீராக: மீன் பிடிப்பதற்கு தடுக்கப்பட்ட தினமான சனிக் கிழமையில் மீன்கள் கடலுக்கு மேல் மட்டத்தில் வரும் அதே வேளை ஏனைய நாட்களில் வராமலிருக்கச் செய்வதன் மூலம் அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிந்ததனால்தான் அவன் அவர்களை இவ்வாறு சோதித்தான். தந்திரமாக அவர்கள் சனிக் கிழமைக்கு முன்னரே வலையை வீசி கிடங்குகளைத் தோண்டி வைத்தார்கள். சனிக்கிழமை மீன்கள் அதில் மாட்டிக் கொண்டன. ஞாயிற்றுக்கிழமை அவற்றை எடுத்து உண்டார்கள்.

Al-A'raaf 7:163Listen in Qur'an →
164

وَإِذْ قَالَتْ أُمَّةٌۭ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًۭا شَدِيدًۭا ۖ قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்."

தூதரே! அவர்களில் ஒரு கூட்டம் இத்தீமையை விட்டும் அவர்களைத் தடுத்து அவர்களை எச்சரித்த சந்தர்ப்பத்தை நினைவு கூறுவீராக! அப்போது அவர்களைப் பார்த்து வேறோரு குழுவினர் கூறினார்கள்: “இவர்களுக்கு ஏன் அறிவுரை வழங்குகிறீர்கள்? இவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான் அல்லது மறுமை நாளில் இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பான்.” அறிவுரை கூறுபவர்கள் கூறினார்கள்: “எங்களின் இந்த அறிவுரையின் நோக்கம், எமக்கு ஏவப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தை விட்டதற்காக அல்லாஹ் தண்டித்துவிடாமல் இருக்க, அதனைச் செய்து அல்லாஹ்விடம் காரணம் கூற வேண்டும் என்பதற்காகவும் அறிவுரையினால் அவர்கள் பயனடைந்து பாவங்களை விட்டொழிப்பதற்காகவும்தான்.”

Al-A'raaf 7:164Listen in Qur'an →
165

فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦٓ أَنجَيْنَا ٱلَّذِينَ يَنْهَوْنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذْنَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ بِعَذَابٍۭ بَـِٔيسٍۭ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ

அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.

பாவிகள் தமக்கு அறிவுரை கூறுவோர் ஞாபகமூட்டியதைப் புறக்கணித்து, தவிர்ந்து கொள்ளாத போது தீமையைத் தடுத்த கூட்டத்தினரை வேதனையிலிருந்து நாம் காப்பாற்றி சனிக்கிழமையில் மீன்பிடித்து வரம்புமீறிக் கொண்டிருந்தவர்களை, அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் பாவங்களில் நிலைத்திருந்ததனால் கடுமையான வேதனையால் தண்டித்தோம்.

Al-A'raaf 7:165Listen in Qur'an →
166

فَلَمَّا عَتَوْا۟ عَن مَّا نُهُوا۟ عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَٰسِـِٔينَ

தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

அவர்கள் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு வரம்புமீறி, அறிவுரை பெறாத போது "பாவிகளே நீங்கள் இழிந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்." என நாம் கூறினோம். நாம் நாடியவாறு அவர்கள் மாறிவிட்டனர். ” நாம் ஏதேனும் ஒன்றை செய்ய நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுவோம். அது ஆகிவிடும்.

Al-A'raaf 7:166Listen in Qur'an →
167

وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ ۖ وَإِنَّهُۥ لَغَفُورٌۭ رَّحِيمٌۭ

(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

தூதரே! மறுமை நாள் வரை இந்த உலக வாழ்வில் யூதர்களை இழிவுபடுத்துவோரை அவர்கள் மீது சாட்டிக்கொண்டே இருப்போம் என்ற சந்தேகமற்ற தெளிவான அல்லாஹ்வின் பிரகடனத்தை நினைவுகூர்வீராக. தூதரே! உம் இறைவன் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை கடுமையாக தண்டிக்கக்கூடியவன். சில வேளை இவ்வுலகிலேயே அவர்களுக்குத் தண்டனை அளித்துவிடுகிறான். ஆயினும் அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Al-A'raaf 7:167Listen in Qur'an →
168

وَقَطَّعْنَٰهُمْ فِى ٱلْأَرْضِ أُمَمًۭا ۖ مِّنْهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ ۖ وَبَلَوْنَٰهُم بِٱلْحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கின்றார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.

அவர்கள் ஒற்றுமையாக இருந்தபின்னர் நாம் அவர்களை பூமியில் பல பிரிவினராகப் பிரித்து சிறு சிறு கூட்டமாகச் சிதறடித்துவிட்டோம். அவர்களில் அல்லாஹ்வின் கடமைகளையும் அடியார்களின் கடமைகளையும் நிறைவேற்றும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட வரம்புமீறியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு இலகுவைக் கொண்டும் கஷ்டத்தைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.

Al-A'raaf 7:168Listen in Qur'an →
169

فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌۭ وَرِثُوا۟ ٱلْكِتَٰبَ يَأْخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌۭ مِّثْلُهُۥ يَأْخُذُوهُ ۚ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَٰقُ ٱلْكِتَٰبِ أَن لَّا يَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ وَدَرَسُوا۟ مَا فِيهِ ۗ وَٱلدَّارُ ٱلْءَاخِرَةُ خَيْرٌۭ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ

அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்;. இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், "அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப் படவில்லையா?" (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?

இவர்களுக்குப் பின்னர் தீயவர்கள் இவர்களின் வாரிசுகளானார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து தவ்ராத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதனைப் படித்தார்கள். ஆனால் அதன்படி செயல்படவில்லை. அல்லாஹ்வின் வேதத்தை திரிப்பதற்காகவும் அல்லாஹ் இறக்காததன்படி தீர்ப்பளிக்கவும், அற்ப ஆதாயத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு செய்து விட்டு அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னித்துவிடுவான் என்று ஆசைகொண்டார்கள். அவர்கள் உலகின் அற்ப ஆதாயம் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். வேதத்தை திரிக்காமல், மாற்றாமல் அல்லாஹ்வின் மீது உண்மை கூற வேண்டும் என்று அல்லாஹ் இவர்களிடம் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பெறவில்லையா? அவர்கள் அறியாமையினால் வேத்ததின்படி செயல்படாமல் இருக்கவில்லை. மாறாக அறிந்துகொண்டே அவ்வாறு செய்தார்கள். வேதத்திலுள்ளதை அவர்கள் கற்றார்கள், அறிந்து கொண்டார்கள். எனவே அவர்களது பாவம் மிகக் கடுமையானது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களைவிட நிலையான மறுமையும் அதன் நிரந்தர இன்பங்களுமே சிறந்தவையாகும். அற்ப ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தயார்படுத்தியுள்ளவை மிகச்சிறந்ததும் நிலையானதும் ஆகும் என்பதைச் சிந்திக்க மாட்டார்களா?

Al-A'raaf 7:169Listen in Qur'an →
170

وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلْكِتَٰبِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ ٱلْمُصْلِحِينَ

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.

வேதத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதன்படி செயல்பட்டு தொழுகையை அதற்குரிய நேரங்கள், நிபந்தனைகள், வாஜிபுகள் மற்றும் சுன்னத்துகளுடன் முறையாக நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான். நற்செயல் புரிபவர்களின் கூலியை அவன் வீணாக்க மாட்டான்.

Al-A'raaf 7:170Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.