Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 151–160 of 206

151

قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

"என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “என் இறைவா! என்னையும் என் சகோதரன் ஹாரூனையும் மன்னித்துவிடுவாயாக. உன் கருணையில் எங்களைப் பிரவேசிக்கச் செய்வாயாக. உன் கருணையால் எங்களை சூழ்ந்துகொள்வாயாக. எங்கள் இறைவா! அனைவரையும் விட நீயே கருணை காட்டக்கூடியவன்.

Al-A'raaf 7:151Listen in Qur'an →
152

إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌۭ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُفْتَرِينَ

நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்;. பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.

காளைக் கன்றை வணங்கப்படும் கடவுளாக ஆக்கிக் கொண்டவர்கள் தமது இறைவனை கோபமூட்டி அவமதித்ததால் அவனது கடுமையான கோபத்திற்கு ஆளாவதோடு இவ்வுலக வாழ்வில் இழிவுக்கும் உள்ளாவார்கள். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டக்கூடியவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்.

Al-A'raaf 7:152Listen in Qur'an →
153

وَٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِهَا وَءَامَنُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌۭ

ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி, பாவங்கள் புரிந்து தீய செயல்கள் செய்தவர்கள் அதன் பின்னர் அல்லாஹ்வின்பால் மீண்டு நம்பிக்கை கொண்டு தாங்கள் செய்துகொண்டிருந்த பாவங்களை விட்டும் அவர்கள் விலகிக்கொண்டால், இணைவைப்பு மற்றும் பாவங்களை விட்டும் நீங்கி நம்பிக்கை கொண்டு வணக்கம் புரியும் போது -தூதரே!- உம் இறைவன் அவர்களின் பாவங்களை கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுபவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

Al-A'raaf 7:153Listen in Qur'an →
154

وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلْغَضَبُ أَخَذَ ٱلْأَلْوَاحَ ۖ وَفِى نُسْخَتِهَا هُدًۭى وَرَحْمَةٌۭ لِّلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ

மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.

மூஸாவை விட்டு கோபம் தணிந்த போது கோபத்தினால் தாம் எறிந்த பலகைகளை எடுத்துக் கொண்டார். அது வழிகேட்டிலிருந்து நேர்வழியையும் சத்தியத்தையும் தங்களின் இறைவனை அஞ்சி அவனது தண்டனையைப் பயப்படுவோருக்கு கருணையையும் உள்ளடக்கியதாக இருந்தது.

Al-A'raaf 7:154Listen in Qur'an →
155

وَٱخْتَارَ مُوسَىٰ قَوْمَهُۥ سَبْعِينَ رَجُلًۭا لِّمِيقَٰتِنَا ۖ فَلَمَّآ أَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّٰىَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآ ۖ إِنْ هِىَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهْدِى مَن تَشَآءُ ۖ أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَٰفِرِينَ

இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், "என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்.

தம் சமூகத்தின் மூடர்கள் காளைக் கன்றை வணங்கியதற்கு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக மூஸா அவர்களிலிருந்து சிறந்த எழுபது நபர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்காக அல்லாஹ் ஒரு நேரத்தையும் நிர்ணயம் செய்தான். அவர்கள் வந்த போது அல்லாஹ்விடமே துணிந்து அல்லாஹ்வைக் கண்முன்னால் காட்டுமாறு மூஸாவிடம் வேண்டினார்கள். அதன் காரணமாக பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதன் பயங்கரத்தால் மயங்கி விழுந்தார்கள். செத்துமடிந்தார்கள். மூஸா தம் இறைவனிடம் மன்றாடினார்: “என் இறைவா, அவர்களையும் அவர்களுடன் என்னையும் நீ அழிக்க நாடியிருந்தால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்த காரியத்திற்காகவா எங்களை அழித்தாய். என் சமூகம் காளைக் கன்றை வணங்கியது ஒரு சோதனையே. அதன் மூலம் நீ நாடியவர்களை வழிதவறச் செய்கிறாய். நீ நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்றாய். எங்களின் விவகாரங்களுக்கு நீயே பொறுப்பாளன். எனவே எங்களின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக. விசாலமான உனது கருணையின் மூலம் எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே பாவத்தை மன்னப்போரில் மிகச் சிறந்தவன்.”

Al-A'raaf 7:155Listen in Qur'an →
156

۞ وَٱكْتُبْ لَنَا فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْءَاخِرَةِ إِنَّا هُدْنَآ إِلَيْكَ ۚ قَالَ عَذَابِىٓ أُصِيبُ بِهِۦ مَنْ أَشَآءُ ۖ وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍۢ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِنَا يُؤْمِنُونَ

"இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், "என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்" என்று கூறினான்.

நீ இந்த உலக வாழ்வில் அருட்கொடையையும் ஆரோக்கியத்தையும் வழங்கி, நற்செயல்கள் புரிவதற்கு பாக்கியம் அளித்து கண்ணியப்படுத்தியவர்களில் எங்களையும் ஆக்குவாயாக. மறுமையில் நீ சொர்க்கத்தை தயார்படுத்தி வைத்துள்ள நல்லடியார்களுடனும் எங்களை ஆக்குவாயாக. நாங்கள் எங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டு உன்பக்கம் திரும்பி விட்டோம். அதற்கு அல்லாஹ் கூறினான்: “துன்பத்துக்குரிய காரணிகளைச் செய்தவர்களில் நான் நாடியோரை என்னுடைய வேதனையினால் பிடிப்பேன். என் அருளோ இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் விட விசாலமானது. அல்லாஹ்வின் அருளும் கருணையும் உபகாரமும் படைப்புகள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு மறுமையில் என் அருளை எழுதி விடுவேன். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குகிறார்கள். நம் வசனங்களின் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.

Al-A'raaf 7:156Listen in Qur'an →
157

ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.

அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அவர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீ நபியாவார். அவரது இறைவன் அவருக்கு வஹி அறிவிக்கிறான். அவர்கள் அவருடைய பெயர், பண்புகள், அவருக்கு இறக்கப்பட்ட வேதம் ஆகியவற்றைப் பற்றி, மூஸாவுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்திலும், ஈஸாவுக்கு இறக்கப்பட்ட இன்ஜீலிலும் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறார்கள். நல்லவற்றை அவர்களுக்கு ஏவுவதோடு, இயல்புக்கு முரணான, ஆரோக்கியமான அறிவுக்கு எதிரான தீய விஷயங்களை விட்டும் தடுக்கின்றார். தீங்குகளற்ற சுவையான உணவுப் பொருட்கள், குடிபானங்கள், திருமணஉறவுகள் ஆகியவற்றை அவர்களுக்கு அனுமதிக்கின்றார். அவற்றில் அசுத்தமானவற்றை அவர்கள் மீது தடைசெய்கிறார். வேண்டுமென்றோ தவறாகவோ கொலை செய்தவனையும் அவசியம் கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத கடமைகளை அவர்களை விட்டும் அகற்றுகின்றார். இஸ்ராயீலின் மக்களிலும் மற்றவர்களிலும் அவரை உண்மைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, அவரை எதிர்க்கும் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அவருக்கு உதவி புரிந்து அவர் மீது இறக்கப்பட்ட, நேர்வழி காட்டும் ஒளியான குர்ஆனைப் பின்பற்றுபவர்கள்தாம் வெற்றியாளர்கள். எதிர்பார்த்ததை அடைந்து அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்தவர்கள்.

Al-A'raaf 7:157Listen in Qur'an →
158

قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."

தூதரே! நீர் கூறுவீராக: “மனிதர்களே! நான் அரபுக்கள் அரபி அல்லாதவர்கள் என உங்கள் அனைவரின்பாலும் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். எனவே -மனிதர்களே-, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் எழுதவோ படிக்கவோ தெரியாத அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். தனது இறைவன் அறிவிக்கும் செய்தியையே அவர் எடுத்து வந்துள்ளார். அவர் அல்லாஹ்வின் மீதும் தமக்கு இறக்கப்பட்டதன் மீதும் தமக்கு முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீது பாகுபாடின்றி நம்பிக்கைகொண்டுள்ளார். இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நன்மைகள் அடங்கியுள்ள நேரான வழியை நீங்கள் அடையும் பொருட்டு அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள்.

Al-A'raaf 7:158Listen in Qur'an →
159

وَمِن قَوْمِ مُوسَىٰٓ أُمَّةٌۭ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ

உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.

இஸ்ராயீலின் மக்களில் ஒரு கூட்டம் சரியான மார்க்கத்தில் நிலைத்து நிற்பதுடன் மக்களுக்கும் அதன் பக்கம் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் அநீதியிழைக்காது நீதியாக தீர்ப்பளிக்கின்றனர்.

Al-A'raaf 7:159Listen in Qur'an →
160

وَقَطَّعْنَٰهُمُ ٱثْنَتَىْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًۭا ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسْتَسْقَىٰهُ قَوْمُهُۥٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنۢبَجَسَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًۭا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍۢ مَّشْرَبَهُمْ ۚ وَظَلَّلْنَا عَلَيْهِمُ ٱلْغَمَٰمَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ ۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து "நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்" (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவிலலை தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

நாம் இஸ்ராயீலின் மக்களை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமூகத்தினர் அவரிடம் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தியுங்கள் எனக் கேட்டுக் கொண்ட பொழுது, “மூஸாவே! உம்முடைய கைத்தடியால் பாறையை அடிப்பீராக.” என நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். மூஸா தடியை அடித்தார். பன்னிரண்டு குலங்களுக்கேற்ப அதிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி வழிந்தன. ஒவ்வொரு குலத்தாரும் தாம் அருந்தும் பகுதியை அறிந்து கொண்டனர். ஒரு குலத்தார் அருந்தவேண்டிய பகுதியில் மற்றொரு குலத்தார் அருந்தவில்லை. நாம் அவர்களுக்கு மேகங்களைக் கொண்டு நிழலிடச் செய்தோம். அவை அவர்கள் செல்லும் இடமெல்லாம் சென்றன. அவர்கள் நிற்கும் இடத்தில் நின்றன. அவர்கள் மீது எங்களுடைய அருட்கொடையான தேன் போன்ற இனிப்புப் பானத்தையும், காடை போன்ற சுவையான மாமிசத்தையுடைய சிறு பறவையையும் இறக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள்.” அநியாயம், அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளுதல், அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்காமலிருத்தல் போன்ற அவர்கள் மூலம் நிகழ்ந்தவற்றினால் நமக்கு எவ்வித குறையும் ஏற்படவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாகச் செயல்பட்டு அவனது அருட்கொடைகளுக்கு நன்றி கெட்ட முறையில் நடந்து அழிவின் காரணங்களைத் தேடிய போது தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

Al-A'raaf 7:160Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.