Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 131–140 of 206

131

فَإِذَا جَآءَتْهُمُ ٱلْحَسَنَةُ قَالُوا۟ لَنَا هَٰذِهِۦ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۭ يَطَّيَّرُوا۟ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ ۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمْ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், "அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்" என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

செழிப்பு, விளைச்சல், விலை குறைவு ஆகிய நன்மைகள் பிர்அவ்னின் கூட்டத்தாருக்கு ஏற்பட்ட போது, “இவையனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதென்றால் நாங்கள் அவற்றிற்குத் தகுதியானவர்கள் மற்றும் அவை எங்களுக்குரியது என்பதனால்தான்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு வறுமையோ பஞ்சமோ நோய்களோ வேறு சோதனைகளோ ஏற்பட்டால் மூஸாவினாலும் அவருடன் உள்ள இஸ்ரவேலர்களாலும் ஏற்பட்ட துர்ச்சகுனமாகக் கருதினார்கள். உண்மையில் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ் விதிப்படியே ஏற்படுகிறது. மூஸா அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை புரிந்ததைத் தவிர மூஸாவுக்கும் அவர்களின் விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவேதான் அல்லாஹ் அல்லாதவர்களின்பால் அதனைத் தொடர்புபடுத்துகிறார்கள்.

Al-A'raaf 7:131Listen in Qur'an →
132

وَقَالُوا۟ مَهْمَا تَأْتِنَا بِهِۦ مِنْ ءَايَةٍۢ لِّتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ

அவர்கள் மூஸாவிடம், "நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை" என்று கூறினார்கள்.

பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் சத்தியத்தை விட்டு பிடிவாதமாகக் கூறினார்கள்: “நீர் எங்களிடம் எத்தகைய சான்றுகளையம், ஆதாரங்களையும் கொண்டுவந்தாலும், எங்களிடமுள்ளவற்றை விட்டும் எம்மைத் திருப்புவதற்கு அவை அசத்தியம், நீர் கொண்டுவந்ததே உண்மை என்பதை நிரூபிக்க எத்தகைய ஆதாரங்களை நீர் கொண்டுவந்தாலும் நாங்கள் ஒருபோதும் உம்மை உண்மைப்படுத்த மாட்டோம்.

Al-A'raaf 7:132Listen in Qur'an →
133

فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٍۢ مُّفَصَّلَٰتٍۢ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًۭا مُّجْرِمِينَ

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.

அவர்களின் நிராகரிப்பு மற்றும் பிடிவாதத்தின் காரணமாக அவர்கள் மீது பெருமழையைத் தண்டனையாக அனுப்பினோம். அது அவர்களின் வயல்களையும் விளைச்சல்களையும் மூழ்கடித்தது. அவர்களின் மீது வெட்டுக்கிளிகளை அனுப்பினோம். அவை அவர்களின் விளைச்சல்களை தின்றுவிட்டன. அவர்களது பயிர்களைத் தாக்கும் அல்லது அவர்களது முடியில் தொந்தரவு கொடுக்கும் பேன்களை அனுப்பினோம். இன்னும் தவளைகளையும் அவர்களின் மீது அனுப்பினோம். அவை அவர்களின் பாத்திரங்களில் நிரம்பி, உணவுப் பொருள்களை நாசமாக்கி விட்டன. தூக்கத்தைக் கெடுத்துவிட்டன. அவர்களின் மீது இரத்தத்தை அனுப்பி கிணறுகளையும் ஆறுகளையும் இரத்தமாக மாற்றினோம். அனைத்தையும் தனித் தனியான தெளிவான சான்றுகளாக,ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பினோம். இத்தனை தண்டனைகளைக் கண்ட பின்னரும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல், மூஸா கொண்டுவந்ததை உண்மைப்படுத்தாமல் கர்வம் கொண்டார்கள். பாவங்கள் புரியும், அசத்தியத்தை விட்டும் விலகாத, நேர்வழிபெறாத மக்களாக அவர்கள் இருந்தார்கள்.

Al-A'raaf 7:133Listen in Qur'an →
134

وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ ٱلرِّجْزُ قَالُوا۟ يَٰمُوسَى ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ ۖ لَئِن كَشَفْتَ عَنَّا ٱلرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்" என்று கூறினார்கள.

இந்த வேதனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்ட போது மூஸாவிடம் வந்து, “மூஸாவே! உமக்கு இறைவன் வழங்கிய தூதுத்துவத்தைக் கொண்டு, தவ்பாவின் மூலம் வேதனையை நீக்குவதாக உமக்கு அவன் வழங்கிய வாக்குறுதியைக் கொண்டு எங்களை விட்டும் வேதனையை அகற்றும்படி எங்களுக்காக பிரார்த்தனை புரிவீராக. எங்களை விட்டும் வேதனையை நீர் அகற்றினால் நாங்கள் உம்மீது நம்பிக்கைகொள்வோம்; இஸ்ராயீலின் மக்களுக்கும் விடுதலையளித்து உம்முடன் அனுப்புவோம்.

Al-A'raaf 7:134Listen in Qur'an →
135

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلرِّجْزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمْ يَنكُثُونَ

அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.

அவர்களை மூழ்கடித்து அழிப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட காலகட்டம் வரை அவர்களை விட்டும் வேதனையை அகற்றியபோது, ஏற்றுக் கொள்வதாகவும் இஸ்ரவேலர்களை விடுதலை செய்வதாகவும் அளித்த தமது வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டார்கள். அவர்கள் தமது நிராகரிப்பில் நிலைத்திருந்து, இஸ்ராயீலின் மக்களை மூஸாவுடன் அனுப்பாமல் தடுத்துக் கொண்டார்கள்.

Al-A'raaf 7:135Listen in Qur'an →
136

فَٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَٰهُمْ فِى ٱلْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَٰفِلِينَ

ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.

அவர்களை அழிப்பதற்கான குறிப்பிட்ட தவணை நெருங்கிய போது, சந்தேகமற்ற சத்தியத்தை புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்ததனாலும் அவர்களைக் கடலில் மூழ்கடித்து நம்முடைய வேதனையை அவர்கள் மீது இறக்கினோம்.

Al-A'raaf 7:136Listen in Qur'an →
137

وَأَوْرَثْنَا ٱلْقَوْمَ ٱلَّذِينَ كَانُوا۟ يُسْتَضْعَفُونَ مَشَٰرِقَ ٱلْأَرْضِ وَمَغَٰرِبَهَا ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ ٱلْحُسْنَىٰ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ بِمَا صَبَرُوا۟ ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُۥ وَمَا كَانُوا۟ يَعْرِشُونَ

எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.

பிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அடிமைப்படுத்தி வைத்திருந்த இஸ்ராயீலின் மக்களை பூமியின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உரிமையாளர்களாக்கினோம். இங்கு பூமி என்பது ஷாம் தேசத்தைக் குறிக்கும். அங்கு பயிர்களையும் பழங்களையும் முழுமையாக விளையச் செய்து அல்லாஹ் அருள் செய்திருந்தான். தூதரே! (“பூமியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நாம் கிருபை செய்து அவர்களை வழிகாட்டிகளாக்கவும், வாரிசுகளாக்கவும் நாடுகிறோம்”) (28:5) என்ற உம் இறைவனின் அழகிய வார்த்தை நிறைவேறிவிட்டது. பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையாக எதிர்கொண்டதனால் அவர்களுக்கு அல்லாஹ் பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். பிர்அவ்ன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பயிர் நிலங்களையும் வசிப்பிடங்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிந்த மாளிகைகளையும் நாம் அழித்துவிட்டோம்.

Al-A'raaf 7:137Listen in Qur'an →
138

وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍۢ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍۢ لَّهُمْ ۚ قَالُوا۟ يَٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَٰهًۭا كَمَا لَهُمْ ءَالِهَةٌۭ ۚ قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ تَجْهَلُونَ

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.

மூஸா தம் கைத்தடியால் கடலை அடித்து அது பிளந்த போது இஸ்ராயீலின் மக்களை நாம் அதனை கடக்கச் செய்தோம். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை கடந்து சென்ற போது மூஸாவிடம் கூறினார்கள்: “மூஸாவே! இவர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வணங்கும் சிலைகள் இருப்பதைப் போல எங்களுக்கும் ஒரு வணங்கும் சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வுக்குரிய மகத்துவத்தையும் ஏகத்துவத்தையும் அவனுக்குப் பொருந்தாத இணைவைப்பையும், மற்றவர்களை வணங்குtதையும் அறியாத கூட்டமாக உள்ளீர்கள்.”

Al-A'raaf 7:138Listen in Qur'an →
139

إِنَّ هَٰٓؤُلَآءِ مُتَبَّرٌۭ مَّا هُمْ فِيهِ وَبَٰطِلٌۭ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ

"நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே" (என்றும் கூறினார்).

சிலை வணக்கத்தில் ஈடுபடும் இவர்களிள் வழிபாடு அழிவுக்குள்ளாகிவிடும். அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணக்கத்தில் இணையாக்கியதால் அவர்கள் செய்து கொண்டிருந்த அனைத்து நல்ல விடயங்களும் அழிந்துவிடும்.

Al-A'raaf 7:139Listen in Qur'an →
140

قَالَ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِيكُمْ إِلَٰهًۭا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى ٱلْعَٰلَمِينَ

"அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்" என்றும் அவர் கூறினார்.

மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வின் மிகப் பெரிய சான்றுகளைப் பார்த்து விட்டீர்கள். உங்களின் எதிரிகளை அழித்து, பூமியில் உங்களுக்கு அதிகாரம் வழங்கி, இக்காலத்திலுள்ள உலகமக்களை விடவும் உங்களைச் சிறப்பித்துள்ளான். இவ்வாறிருக்கும் போது, என் சமூகமே! நீங்கள் வணங்குவதற்கு அல்லாஹ் அல்லாத ஒரு இறைவனை நான் எவ்வாறு தேடுவேன்?

Al-A'raaf 7:140Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.