فَإِذَا جَآءَتْهُمُ ٱلْحَسَنَةُ قَالُوا۟ لَنَا هَٰذِهِۦ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۭ يَطَّيَّرُوا۟ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ ۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمْ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், "அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்" என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
செழிப்பு, விளைச்சல், விலை குறைவு ஆகிய நன்மைகள் பிர்அவ்னின் கூட்டத்தாருக்கு ஏற்பட்ட போது, “இவையனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதென்றால் நாங்கள் அவற்றிற்குத் தகுதியானவர்கள் மற்றும் அவை எங்களுக்குரியது என்பதனால்தான்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு வறுமையோ பஞ்சமோ நோய்களோ வேறு சோதனைகளோ ஏற்பட்டால் மூஸாவினாலும் அவருடன் உள்ள இஸ்ரவேலர்களாலும் ஏற்பட்ட துர்ச்சகுனமாகக் கருதினார்கள். உண்மையில் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ் விதிப்படியே ஏற்படுகிறது. மூஸா அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை புரிந்ததைத் தவிர மூஸாவுக்கும் அவர்களின் விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவேதான் அல்லாஹ் அல்லாதவர்களின்பால் அதனைத் தொடர்புபடுத்துகிறார்கள்.