Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 121–130 of 206

121

قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ

"அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;

சூனியக்காரர்கள் கூறினார்கள்: “அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம்.

Al-A'raaf 7:121Listen in Qur'an →
122

رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ

"அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள்.

அவன்தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவன். போலியான தெய்வங்கள் அல்லாமல் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.”

Al-A'raaf 7:122Listen in Qur'an →
123

قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّ هَٰذَا لَمَكْرٌۭ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ

அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!

அவர்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கை கொண்ட பிறகு பிர்அவ்ன் அவர்களை மிரட்டியவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? மூஸா கொண்டுவந்ததன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கை மக்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்று வேலைதான். இந்த நகர மக்களை வெளியேற்றுவதற்காக நீங்களும் மூஸாவும் போட்ட இரகசிய திட்டமே இது. சூனியக்காரர்களே! உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

Al-A'raaf 7:123Listen in Qur'an →
124

لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

"நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்ற கூறினான்.

உங்களில் ஒவ்வொருவரின் வலது கையையும் அவரின் இடது காலையும், அல்லது அவரின் இடது கையையும் அவரின் வலது காலையும் வெட்டிவிடுவேன். பின்னர் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் தண்டனையாக அமையும் பொருட்டும் இந்நிலைமையில் உங்களைப் பார்ப்பவர்களுக்கு பயமுறுத்தும் விதமாகவும் உங்கள் அனைவரையும் பேரீச்சை மரத்தின் தண்டுகளில் தொங்கவிடுவேன்.

Al-A'raaf 7:124Listen in Qur'an →
125

قَالُوٓا۟ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ

அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள்.

சூனியக்காரர்கள் பிர்அவ்னின் மிரட்டலுக்குப் பதிலளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவனின் பக்கமே நாங்கள் திரும்பக் கூடியவர்கள். உம்முடைய மிரட்டலை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்.

Al-A'raaf 7:125Listen in Qur'an →
126

وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.)

பிர்அவ்னே! அல்லாஹ்வின் சான்றுகள் மூஸாவின் மூலமாக எங்களிடம் வந்த போது நாங்கள் அவற்றின் மீது நம்பிக்கை கொண்ட எமது செயலைத்தான் நீ எங்களிடம் தவறாகக் காண்கிறாய். அது பழிக்கப்படும் குற்றமாக இருந்தால் அது நாங்கள் செய்த குற்றம்தான். பின்னர் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்தார்கள்: இறைவா “எங்களை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்துவதற்காக எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக, உன் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக, உன் தூதரைப் பின்பற்றியவர்களாக எங்களை மரணிக்கச் செய்வாயாக.”

Al-A'raaf 7:126Listen in Qur'an →
127

وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُۥ لِيُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَآءَهُمْ وَنَسْتَحْىِۦ نِسَآءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَٰهِرُونَ

அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) "மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொண்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆகிக்கம் பெற்றுள்ளோம்" என்று கூறினான்.

பிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பெரியவர்களும் பிர்அவ்னை மூஸாவுக்கும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களுக்கும் எதிராகத் தூண்டியவர்களாகக் கூறினார்கள்: பிர்அவ்னே! மூஸாவையும் அவரது சமூகத்தையும் பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும் உம்மையும் உம்தெய்வங்களையும் விட்டுவிடுவதற்கும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைப்பதற்கும் விட்டுவிடுகிறீரா?” பிர்அவ்ன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம். அவர்களின் பெண்களை பணிவிடை செய்வதற்காக விட்டுவைப்போம். நிச்சயமாக நாம் அடக்குமுறையினாலும் அதிகாரத்தினாலும் அவர்களை மிகைத்தவர்களாவோம்.”

Al-A'raaf 7:127Listen in Qur'an →
128

قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ

மூஸா தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்.

மூஸா தம் சமூகத்தாருக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “என் சமூகமே! உங்களை விட்டு தீங்கை அகற்றி நன்மையைக் கொண்டுவர அல்லாஹ்விடமே உதவிதேடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையில் பொறுமையாக இருங்கள். பூமி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பிர்அவ்ன் தான் நினைத்தவாறு அதில் இயங்க அதுவொன்றும் அனுக்கோ ஏனையோருக்கோ சொந்தமானதல்ல. அல்லாஹ் மக்களிடையே தன் நாட்டப்படி மாறிமாறி வழங்குகிறான். ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பூமியில் நல்ல முடிவு காத்திருக்கின்றது. அவர்கள் சோதனைகளாலும் கஷ்டங்களாலும் பாதிக்கப்பட்டாலும் பூமி அவர்களுக்குச் சொந்தமானதே.”

Al-A'raaf 7:128Listen in Qur'an →
129

قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ

"நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்; "உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்."

மூஸாவின் சமூகத்தவரான இஸ்ரவேலர்கள் அவரிடம் கூறினார்கள்: “மூசாவே! நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும் பின்பும் எங்களின் ஆண்மக்கள் கொல்லப்பட்டு பெண்மக்கள் உயிருடன் விடப்பட்டு பிர்அவ்னால் நாங்கள் சோதிக்கப்பட்டோம்.” மூஸா அவர்களுக்கு அறிவுரை வழங்கியவராக, விடுதலையைக் கொண்டு நற்செய்தி வழங்கியவராகக் கூறினார்: “உங்களின் இறைவன் உங்களின் எதிரியான பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் அழித்துவிடலாம். அதன்பிறகு பூமியில் உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கி, அதன் பின் நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறீர்களா என்பதைப் பார்ப்பான்.

Al-A'raaf 7:129Listen in Qur'an →
130

وَلَقَدْ أَخَذْنَآ ءَالَ فِرْعَوْنَ بِٱلسِّنِينَ وَنَقْصٍۢ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.

பிர்அவ்னைச் சார்ந்தவர்களை பஞ்சத்தாலும் வரட்சியாலும் தண்டித்தோம். விளைச்சல்களில் குறைவை ஏற்படுத்தி அவர்களைச் சோதித்தோம். இது, தங்களுக்குக் கிடைத்த இந்த தண்டனை தங்கள் நிராகரிப்பினால்தான் ஏற்பட்டது என்பதை உணர்ந்து அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதற்காகத்தான்.

Al-A'raaf 7:130Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.