Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 206

111

قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ

அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டினங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!

அவர்கள் பிர்அவ்னிடம் கூறினார்கள்: “மூசாவுக்கும் அவரது சகோதரர் ஹாரூனுக்கும் அவகாசம் அளியுங்கள். எகிப்திலுள்ள நகரங்களுக்கு அங்குள்ள சூனியக்காரர்களை ஒன்று திரட்டக்கூடியவர்களை அனுப்புங்கள்.

Al-A'raaf 7:111Listen in Qur'an →
112

يَأْتُوكَ بِكُلِّ سَٰحِرٍ عَلِيمٍۢ

"அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள்.

சூனியக்காரர்களை ஒன்று திரட்டுவதற்காக நீங்கள் அனுப்பியவர்கள் நகரங்களிலுள்ள திறமையாக சூனியம் செய்யும் சூனியக்காரர்கள் அனைவரையும் கொண்டுவருவார்கள்.

Al-A'raaf 7:112Listen in Qur'an →
113

وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا۟ إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ

அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?" என்; று கேட்டார்கள்.

பிர்அவ்ன் சூனியக்காரர்களை ஒன்றுதிரட்டக்கூடியவர்களை அனுப்பினான். சூனியக்காரர்கள் வந்த போது அவர்கள் பிர்அவ்னிடம் கேட்டார்கள், “நாங்கள் மூஸாவை மிகைத்து அவரை வென்று விட்டால் எங்களுக்கு ஏதேனும் வெகுமதி உண்டுமா?”

Al-A'raaf 7:113Listen in Qur'an →
114

قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ ٱلْمُقَرَّبِينَ

அவன் கூறினான்; "ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்."

பிர்அவ்ன் அவர்களிடம் கூறினான்: “ஆம். நிச்சயமாக உங்களுக்கு வெகுமதியும் கூலியும் உண்டு. நீங்கள் பதவிகளின் மூலம் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”

Al-A'raaf 7:114Listen in Qur'an →
115

قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ ٱلْمُلْقِينَ

"மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

தாங்கள் மூஸாவை மிகைத்து விடுவோம் என்று உறுதியான நம்பிக்கையில் சூனியக்காரர்கள் கர்வத்துடன் அவரிடம் கூறினார்கள்: “மூஸாவே! போட விரும்புவதை நீர் முதலில் போடுவதா அல்லது நாம் முதலில் போடுவதா என்பதை நீரே முடிவு செய்வீராக.”

Al-A'raaf 7:115Listen in Qur'an →
116

قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍۢ

அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர்.

மூஸா அவர்களைப் பொருட்படுத்தாதவராக, தம் இறைவன் தமக்கு உதவி புரிவான் என்ற உறுதியான நம்பிக்கையுடையவராக அவர்களிடம் கூறினார்: “உங்களின் கயிறுகளையும் கைத்தடிகளையும் எறியுங்கள்.” அவர்கள் போட்ட போது மக்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து திருப்பி மயக்கினார்கள். அவர்களைப் பயமுறுத்தினார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு பலம்மிக்க சூனியத்தை அவர்கள் கொண்டுவந்தார்கள்.

Al-A'raaf 7:116Listen in Qur'an →
117

۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.

அல்லாஹ் தன் நபி மூஸாவுக்கு வஹி அறிவித்தான்: “மூஸாவே! உம் கைத்தடியை எறியும்.” அவர் எறிந்த போது, யதார்த்தத்தை மாற்றி ஓடுகின்ற பாம்பைப் போல் சித்தரிப்பதற்கு பயன்படுத்திய கயிறுகளையும் கைத்தடிகளையும் விழுங்கும் பாம்பாக அது மாறிவிட்டது.

Al-A'raaf 7:117Listen in Qur'an →
118

فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.

சத்தியம் வெளிப்பட்டது. மூஸா கொண்டு வந்ததே சத்தியம் என்பதும் சூனியக்காரர்கள் கொண்டுவந்த சூனியம் அசத்தியம் என்பதும் தெளிவானது.

Al-A'raaf 7:118Listen in Qur'an →
119

فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَٰغِرِينَ

அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.

அவர்கள் தோல்வியடைந்தார்கள். இந்தக் களத்தில் மூஸா அவர்களை வென்றார். தோல்வியடைந்து, இழிவடைந்தவர்களாக அவர்கள் திரும்பினார்கள்.

Al-A'raaf 7:119Listen in Qur'an →
120

وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ

அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து

சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் பெரும் வல்லமையையும், தெளிவான சான்றுகளையும் கண்ட போது அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள்.

Al-A'raaf 7:120Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.