Muslim99Muslim99
← Tafsir library

7. Al-A'raaf

The Heights · Meccan · 206 ayahs

سُورَةُ الأَعۡرَافِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 101–110 of 206

101

تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَٰفِرِينَ

(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.

தூதரே! மேலே குறிப்பிடப்பட்ட நூஹ், ஹூத், ஸாலிஹ், லூத், ஸுஐப் ஆகியோரின் சமூகங்கள் வசித்த ஊர்களைக் குறித்தும் அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அழிவைக் குறித்தும் நாம் உமக்கு எடுத்துரைப்பது, படிப்பினை பெறக்கூடியவர்களுக்கு படிப்பினையாகவும் அறிவுரை பெறக்கூடியவர்களுக்கு அறிவுரையாக இருப்பதற்காகவும்தான். இந்த ஊர்வாசிகளிடம் அவர்களின் தூதர்கள் தாம் உண்மையாளர்கள் என்பதற்கு தெளிவான ஆதாரங்களைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவரை நிராகரிப்பார்கள் என அவன் முன்பே அறிந்து வைத்திருந்ததனால் தூதர்கள் வந்தபொழுது அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. தங்களின் தூதர்களை நிராகரித்த இந்த ஊர்வாசிகளின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டது போன்றே முஹம்மதை நிராகரித்தவர்களின் உள்ளங்களிலும் முத்திரையிட்டு விடுவான். எனவே அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

Al-A'raaf 7:101Listen in Qur'an →
102

وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِم مِّنْ عَهْدٍۢ ۖ وَإِن وَجَدْنَآ أَكْثَرَهُمْ لَفَٰسِقِينَ

அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாரோரைப் பாவிகளாகவே கண்டோம்.

அல்லாஹ் வழங்கிய அறிவுரைகளைக் கடைப்பிடிப்பவர்களாக, தூதர்கள் அனுப்பப்பட்ட பெரும்பாலான சமூகங்களை நாம் காணவில்லை. அவர்களிடத்தில் அல்லாஹ்வின் ஏவல்களுக்கு அடிபணிதலையும் நாம் காணவில்லை. அல்லாஹ்வுக்கு அடிபணிய மறுப்பவர்களாகவே அவர்களில் பெரும்பாலானோரைக் கண்டோம்.

Al-A'raaf 7:102Listen in Qur'an →
103

ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ

அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!

அந்த தூதர்களுக்குப் பிறகு நாம் மூஸாவை அவரை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளுடன் பிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்திடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சான்றுகளை மறுத்து நிராகரித்தார்கள். -தூதரே-! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை மூழ்கடித்து அழித்து விட்டான். இவ்வுலகிலும் மறுவுலகிலும் சாபம் அவர்களைப் பின்தொடருமாறு செய்தான்.

Al-A'raaf 7:103Listen in Qur'an →
104

وَقَالَ مُوسَىٰ يَٰفِرْعَوْنُ إِنِّى رَسُولٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ

"ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார்.

மூஸாவை அல்லாஹ் பிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவர் அவனிடம் வந்து கூறினார்: “பிர்அவ்னே! படைப்புகள் அனைத்தையும் படைத்து அவர்களின் உரிமையாளனும் அவர்களின் விவகாரங்களை நிர்வகிப்பவனின் புறத்திலிருந்து நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”

Al-A'raaf 7:104Listen in Qur'an →
105

حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍۢ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِىَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

"அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை" (என்றும் அவர் கூறினார்).

மூஸா கூறினார்: “நான் அவனது தூதராக இருப்பதால் அவன் மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறாமல் இருப்பதற்கு உகந்தவனாவேன். நான் உண்மையாளன், அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களின்பால் அனுப்பப்பட்டுள்ள தூதர் என்பதற்கான தெளிவான ஆதாரத்துடன் நான் உங்களிடம் வந்துள்ளேன். இஸ்ராயீலின் மக்களை சிறையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுவித்து என்னுடன் அனுப்பிவிடுங்கள்.”

Al-A'raaf 7:105Listen in Qur'an →
106

قَالَ إِن كُنتَ جِئْتَ بِـَٔايَةٍۢ فَأْتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

அதற்கு அவன், "நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்" என்று கூறினான்.

பிர்அவ்ன் மூஸாவிடம் கூறினான்: “நீர் கூறுவது போல் அத்தாட்சியைக் கொண்டுவந்திருந்தால் உமது வாதத்திலும் உண்மையாளராக இருந்தால் நீர் கூறியவாறு சான்றினைக் கொண்டு வாரும்.”

Al-A'raaf 7:106Listen in Qur'an →
107

فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ

அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.

மூஸா தம் கைத்தடியை எறிந்தார். அது பார்க்கக்கூடியவர்களுக்கு தெளிவான மிகப் பெரிய பாம்பாக மாறியது.

Al-A'raaf 7:107Listen in Qur'an →
108

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ

மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.

தம் நெஞ்சுப் பகுதியிலுள்ள சட்டையின் உள்ளிருந்து அல்லது தம் அக்குளுக்குக் கீழிலிருந்து கையை வெளியே எடுத்ததும் அது வெண்குஷ்டமற்ற வெண்மையாகக் காணப்பட்டது. அதன் அதீத வெண்மையினால் பார்ப்பவர்களுக்கு அது மின்னியது.

Al-A'raaf 7:108Listen in Qur'an →
109

قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌۭ

ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், "இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!" என்று கூறினார்கள்.

மூஸாவின் கைத்தடி பாம்பாக மாறியதையும் அவரது கையிலிருந்து வெண்குஷ்டமற்ற வெண்மை வெளிப்பட்டதையும் கண்ட தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “மூசா திறமையான சூனியக்காரரே அன்றி வேறில்லை.”

Al-A'raaf 7:109Listen in Qur'an →
110

يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ

(அதற்கு, ஃபிர்அவ்ன்), "இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?" (என்று கேட்டான்.)

தம்முடைய இச்செயலின் மூலம் உங்களை உங்கள் பூமியான இந்த எகிப்திலிருந்து வெளியேற்ற நாடுகிறார். பின்னர் பிர்அவ்ன் மூஸாவின் விஷயத்தைக் குறித்து அவர்களிடம், நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? என்று ஆலோசனை கேட்டான்.

Al-A'raaf 7:110Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.