Muslim99Muslim99
← Tafsir library

16. An-Nahl

The Bee · Meccan · 128 ayahs

سُورَةُ النَّحۡلِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 41–50 of 128

41

وَٱلَّذِينَ هَاجَرُوا۟ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ لَنُبَوِّئَنَّهُمْ فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ ۖ وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது

நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டு நெருக்கடிக்குள்ளான பிறகு தங்களின் வீடுகளையும், செல்வங்களையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக நிராகரித்த நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்தவர்களுக்கு இவ்வுலகில் தங்குமிடத்தை வழங்குவோம். அங்கு அவர்கள் கண்ணியமிக்கவர்களாகி விடுவார்கள். மறுமையில் கிடைக்கும் கூலி அனைத்தையும்விட சிறந்ததாகும். எனெனில் அங்குதான் சுவனம் உண்டு. புலம்பெயராமல் பின்தங்கியவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையை அறிந்திருந்தால் ஒருபோதும் பின்தங்கியிருக்க மாட்டார்கள்.

42

ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்.

அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த இவர்கள்தாம் தங்களின் சமூகத்தார் அளித்த துன்பங்களையும், நாட்டையும், வீட்டையும் பிரிந்ததனால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொண்டார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் தங்கள் இறைவனையே சார்ந்திருக்கிறார்கள். எனவேதான் அல்லாஹ் அவர்களுக்கு மிகப் பெரும் இக்கூலியை வழங்கியுள்ளான்.

43

وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًۭا نُّوحِىٓ إِلَيْهِمْ ۚ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக).

தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக்கி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். வானவர்களை நாம் தூதர்களாக அனுப்பவில்லை. இதுதான் நம்முடைய வழமையான வழிமுறை. நீங்கள் இதனை மறுப்பவர்களாக இருந்தால், அவர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அறியாதவர்களாக இருந்தால் முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடம் கேட்டுப் பாருங்கள். தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள், வானவர்களாக இருக்கவில்லை என்பதை அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

44

بِٱلْبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ ۗ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

மனிதர்களிலுள்ள இந்த தூதர்களை நாம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் இறக்கப்பட்ட வேதங்களைக் கொண்டும் அனுப்பினோம். -தூதரே!- குர்ஆனில் விளக்கம் தேவையானவற்றை நீங்கள் விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தமது சிந்தனையைச் செயற்படுத்தி, அதிலுள்ளவற்றின் மூலம் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காகவும் நாம் உம் மீது அதனை இறக்கியுள்ளோம்.

45

أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخْسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ

தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?

அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக பல் வேறு சூழ்ச்சிகள் செய்தவர்கள், காரூனைப் பூமியில் புதையச் செய்தததைப் போல அவர்களையும் பூமியில் அல்லாஹ் புதையச் செய்திடுவான் அல்லது அவர்கள் அறியாத புறத்திலிருந்து வேதனை அவர்களை வந்தடையும் என்பதில் அச்சமற்று உள்ளனரா?

46

أَوْ يَأْخُذَهُمْ فِى تَقَلُّبِهِمْ فَمَا هُم بِمُعْجِزِينَ

அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறு செய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.

அல்லது வாழ்வாதாரம் தேடி அவர்கள் பயணத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களை வேதனை வந்தடையலாம். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தப்பவோ தவிர்ந்து கொள்ளவோ முடியாது.

47

أَوْ يَأْخُذَهُمْ عَلَىٰ تَخَوُّفٍۢ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌ

அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.

அல்லது அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தடையக் கூடும் என்பதைக் குறித்து அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? எல்லா நிலைகளிலும் அவர்களைத் தண்டிப்பதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். உங்களின் இறைவன் பரிவுமிக்கவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். தனது அடியார்கள் தன்னிடம் தவ்பா செய்யலாம் என்பதனால் அவன் விரைவாக தண்டிப்பதில்லை.

48

أَوَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍۢ يَتَفَيَّؤُا۟ ظِلَٰلُهُۥ عَنِ ٱلْيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدًۭا لِّلَّهِ وَهُمْ دَٰخِرُونَ

அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடதுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ் வழிபடுகின்றன.

இந்த பொய்பிப்பவர்கள் அவனுடைய படைப்புகளை ஆய்வுக்கண் கொண்டு பார்க்கவில்லையா? பகலில் சூரியனின் இயக்கத்திற்கேற்பவும் இரவில் சந்திரனின் இயக்கத்திற்கேற்பவும் அவற்றின் நிழல்கள் வலது புறமும் இடது புறமும் சாய்கின்றன; தம் இறைவனுக்கு அடிபணிந்து உண்மையாக சிரம்பணிகின்றன.

49

وَلِلَّهِ يَسْجُدُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ مِن دَآبَّةٍۢ وَٱلْمَلَٰٓئِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவாகள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.

வானங்களிலும் பூமியிலும் உள்ள உயிரினங்கள் யாவும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிகின்றன. வானவர்கள் அவனுக்கே சிரம்பணிகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை வழிப்படுவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை.

50

يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩

அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.

அவர்கள் - அவனை இடைவிடாமல் வணங்கி வழிப்பட்ட போதும் - உள்ளமையால் தமக்கு மேலிருந்து ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் தம் இறைவனை அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவன் அவர்களுக்கு வழிப்படுமாறு இடும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.