Muslim99Muslim99
← Tafsir library

16. An-Nahl

The Bee · Meccan · 128 ayahs

سُورَةُ النَّحۡلِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 31–40 of 128

31

جَنَّٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ لَهُمْ فِيهَا مَا يَشَآءُونَ ۚ كَذَٰلِكَ يَجْزِى ٱللَّهُ ٱلْمُتَّقِينَ

என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.

நிலையான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இந்த சுவனங்களில் அவர்களின் மனம் விரும்பும் உணவு, குடிபானம் மற்றும் ஏனையவை அத்தனையும் கிடைக்கும். முஹம்மதின் சமூகத்திலுள்ள இறையச்சமுடையோருக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே முந்தைய சமூகத்திலுள்ள இறையச்சமுடையோரும் கூலி வழங்கப்படுவார்கள்.

32

ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ ۙ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيْكُمُ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்; "ஸலாமுன் அலைக்கும்' ("உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.

மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அவர்களின் உயிர்களை அவர்களின் உள்ளங்கள் நிராகரிப்பை விட்டும் தூய்மையாக இருக்கும் நிலையில் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் வானவர்கள் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நீங்கள் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் உலகில் கொண்டிருந்த சரியான நம்பிக்கையினாலும் செய்து கொண்டிருந்த நற்செயல்களினாலும் சுவனத்தில் நுழையுங்கள்.”

33

هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن تَأْتِيَهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ يَأْتِىَ أَمْرُ رَبِّكَ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.

பொய்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் திடீரென மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் இவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு இவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது இவ்வுலகில் அவர்களை அடியோடு அழிக்கக் கூடிய வேதனையைத் தாங்கிய அல்லாஹ்வின் கட்டளையையா? மக்காவின் இந்த இணைவைப்பாளர்கள் செய்வதைப் போன்றே முன்னர் வாழ்ந்த இணைவைப்பாளர்களும் செய்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். அவன் அவர்களை அழித்து அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

34

فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன் அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களின் தண்டனைகள் அவர்கள் மீது இறங்கின. எந்த வேதனையைக் குறித்து நினைவூட்டப்படும் போது அதனைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தனரோ அந்த வேதனை அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

35

وَقَالَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ نَّحْنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍۢ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ فَهَلْ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ

"அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்" என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).

தமது வணக்கத்தில் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கியவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் நாம் அவனுக்கு எதனையும் இணைவைக்காமல் அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென நாடியிருந்தால் நாங்களோ எங்கள் முன்னோர்களோ அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கியிருக்க மாட்டோம். அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் எதனையும் தடைசெய்யக்கூடாது என அவன் நாடியிருந்தால் நாம் எதையும் தடைசெய்திருக்க மாட்டோம்.” இந்தத் தவறான ஆதாரத்தையே இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பாளர்களும் கூறினார்கள். எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டதை தெளிவாக எடுத்துரைப்பதே தூதர்கள் மீதுள்ள கடமையாகும். அவர்கள் எடுத்துரைத்து விட்டார்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு விருப்பத்தையும் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்கி, அவர்களின்பால் தனது தூதர்களையும் அனுப்பிய பிறகு அவர்கள் விதியை தங்களுக்கு ஆதாரமாக கூறமுடியாது.

36

وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍۢ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّٰغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَٰلَةُ ۚ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

முந்தைய ஒவ்வொரு சமூகத்திற்கும் அவன் தூதர்களை அனுப்பி அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: “நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனைத் தவிர சிலைகளையோ ஷைத்தான்களையோ இன்னபிற பொருள்களையோ வணங்கக்கூடாது.” அவர்களில் அல்லாஹ்வின் அருளைப் பெற்று அவனை நம்பிக்கை கொண்டு, தங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றியவர்களும் இருந்தனர். இன்னும் சிலர் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அல்லாஹ்வின் அருளுக்கு உட்படாதோரும் இருந்தனர். எனவே அவர்களின் மீது வழிகேடு உறுதியாகி விட்டது. தண்டனை மற்றும் அழிவுக்குள்ளான நிராகரிப்பாளர்களின் கதி என்னவாயிற்று என்பதை உங்கள் கண்களால் பார்ப்பதற்காக பூமியில் பயணம் செய்யுங்கள்.

37

إِن تَحْرِصْ عَلَىٰ هُدَىٰهُمْ فَإِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَن يُضِلُّ ۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.

தூதரே!- நீர் என்னதான் முயற்சி செய்து இவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் நேர்வழியில் ஆர்வம் கொண்டு அதற்குரிய வழிகளில் ஈடுபட்டாலும், யாரை அவன் வழிகெடுத்து விட்டானோ அவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான். அல்லாஹ்வைத் தவிர வேதனையிலிருந்து அவர்களைக் காக்கும் உதவியாளர்கள் யாரும் இல்லை.

38

وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ ۙ لَا يَبْعَثُ ٱللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّۭا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.

உயிர் கொடுத்து எழுப்பப்படுவதைப் பொய்பிக்கக்கூடிய இவர்கள் உறுதியாக, எல்லை கடந்து, சத்தியமிட்டுக் கூறுகிறார்கள், “அல்லாஹ் மரணித்தவர்களை ஒருபோதும் எழுப்ப மாட்டான் என்று.” அவர்களிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவன் மரணித்தவர்களை நிச்சயம் உயிர் கொடுத்து எழுப்புவான். இது அவனுடைய உறுதியான வாக்குறுதியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் மரணித்தவர்களை அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை அறியமாட்டார்கள். எனவேதான் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதை மறுக்கிறார்கள்.

39

لِيُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى يَخْتَلِفُونَ فِيهِ وَلِيَعْلَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ كَانُوا۟ كَٰذِبِينَ

(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).

அவர்கள் முரண்பட்டுக்கொண்டிருந்த ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதல் ஆகிய விஷயங்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதற்காகவும் அல்லாஹ்வுக்கு இணைகள் உண்டு என்ற தமது வாதத்திலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதை மறுத்ததிலும் அவர்கள் பொய்யர்களே என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் மறுமைநாளில் அவர்கள் அனைவரையும் அவன் உயிர்கொடுத்து எழுப்புவான்.

40

إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ إِذَآ أَرَدْنَٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ

ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.

நாம் மரணித்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்ப விரும்பினால் எதுவும் நம்மை தடுத்துவிட முடியாது. நாம் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய விரும்பினால் ’ஆகு’ என்றுதான் கூறுவோம். அது சந்தேகமில்லாமல் ஆகிவிடும்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.