Muslim99Muslim99
← Tafsir library

16. An-Nahl

The Bee · Meccan · 128 ayahs

سُورَةُ النَّحۡلِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 21–30 of 128

21

أَمْوَٰتٌ غَيْرُ أَحْيَآءٍۢ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ

அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர் மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.

அவற்றை வணங்கியோரே தமது கைகளால் அவற்றைச் செதுக்கியது மாத்திரமின்றி அவை உயிரோ அறிவோ அற்ற ஜடங்களாகவும் உள்ளன. அவை மறுமை நாளில் தங்களை வணங்கியவர்களுடன் நரக நெருப்பில் எறியப்படுவதற்காக எப்போது எழுப்பப்படும் என்பதைக்கூட அறியாது.

22

إِلَٰهُكُمْ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ ۚ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌۭ وَهُم مُّسْتَكْبِرُونَ

உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

உங்களின் உண்மையான வணக்கத்திற்குரியவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். மறுமையில் கூலி கொடுக்கப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்களின் உள்ளங்கள் அல்லாஹ் ஒருவனே என்பதை மறுக்கின்றன. ஏனெனில் அவைகள் அஞ்சுவதில்லை, கூலி கொடுக்கப்படுவதையோ விசாரணை செய்யப்படுவதையோ நம்புவதில்லை. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத, அதற்கு அடிபணியாத கர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

23

لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْتَكْبِرِينَ

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.

நிச்சயமாக இவர்கள் இரகசியமாகச் செய்வதையும் வெளிப்படையாகச் செய்வதையும் உண்மையாக அல்லாஹ் அறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். தன்னை வணங்குவதை விட்டும், தனக்குக் கட்டுப்படுவதை விட்டும் கர்வம் கொள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவன் அவர்களை கடுமையாக வெறுக்கிறான்.

24

وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۙ قَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ

"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.

படைத்தவனின் ஏகத்துவத்தையும் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் பொய்பிக்கும் இவர்களிடம், “உங்கள் இறைவன் முஹம்மதின் மீது எதை இறக்கினான்?” என்று கேட்கப்பட்டால், “அவன் அவர் மீது எதையும் இறக்கிவைக்கவில்லை. நிச்சயமாக அவர் முன்னோர்களின் கட்டுக்கதைகளை சுயமாக புனைந்து கூறுகிறார்” என்று கூறுகிறார்கள்.

25

لِيَحْمِلُوٓا۟ أَوْزَارَهُمْ كَامِلَةًۭ يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۙ وَمِنْ أَوْزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ ۗ أَلَا سَآءَ مَا يَزِرُونَ

கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.

அவர்களின் பாவங்களை அவர்கள் குறைவின்றி சுமப்பதற்காகவும் அறியாமை, கண்மூடித்தனமான பின்பற்றுதல் ஆகியவற்றால் இஸ்லாத்தை விட்டு அவர்கள் யாரை வழிகெடுத்தார்களோ அவர்களின் பாவங்களையும் சுமப்பதே அவர்களின் முடிவாக அமையும். தங்களின் பாவங்களையும் தங்களைப் பின்பற்றியவர்களின் பாவங்களையும் சுமக்கும் இவர்களின் சுமைகள் எத்துணை மோசமானது!

26

قَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى ٱللَّهُ بُنْيَٰنَهُم مِّنَ ٱلْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ ٱلسَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.

இவர்களுக்கு முன்னால் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் கட்டடங்களை அடியோடு தகர்த்து விட்டான். மேலிருந்து முகடுகள் அவர்களின் மீது விழுந்து விட்டன. அவர்கள் எதிர்பார்க்காத புறத்திலிருந்து வேதனை அவர்களிடம் வந்தது. அவர்களின் கட்டடங்கள் அவர்களைப் பாதுகாக்கும் என்றே அவர்கள் எண்ணியிருந்தார்கள். எனவே அவற்றைக் கொண்டே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

27

ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تُشَٰٓقُّونَ فِيهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ إِنَّ ٱلْخِزْىَ ٱلْيَوْمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلْكَٰفِرِينَ

பின்னர், கியாம நாளில் அவன் அவர்களை இழிவு படுத்துவான்; "எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப்பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்; "நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்" என்று கூறுவார்கள்.

பின்னர் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களை வேதனையால் இழிவுபடுத்துவான். அவன் அவர்களிடம் கேட்பான்: “நீங்கள் வணக்கத்தில் எனக்கு இணையாக்கிக் கொண்டிருந்த எனக்கு நிகரானவர்கள் எங்கே? அவற்றினால்தானே என் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்தீர்கள்?” இறைவனுக்குக் கட்டுப்பட்ட அறிஞர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் இழிவும் வேதனையும் நிராகரிப்பாளர்களைத் தாக்கியே தீரும்.”

28

ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوٓءٍۭ ۚ بَلَىٰٓ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், "நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!" என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; "அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)

மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது தங்களைத் தாக்கும் மரணத்தைக் கண்டு அவர்கள் முழுமையாக சரணடைந்து விடுவார்கள். தமது நிராகரிப்பையும் பாவங்களையும் மறுப்பது தமக்குப் பயனளிக்கும் என நினைத்து அவற்றை அவர்கள் மறுப்பார்கள். அப்போது அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். பாவங்கள் புரியும் நிராகரிப்பாளர்களாக இருந்தீர்கள். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

29

فَٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَا ۖ فَلَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ

"ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்" (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

அவர்களிடம் கூறப்படும்: “உங்களின் செயல்களுக்கேற்ப நரகத்தின் வாயில்களில் நுழைந்து என்றும் அதிலே நிரந்தரமாக தங்கிவிடுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அவனை மாத்திரம் வணங்காமல் கர்வம் கொண்டவர்களின் தங்குமிடமான அது மிகவும் மோசமானது.

30

۞ وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ مَاذَآ أَنزَلَ رَبُّكُمْ ۚ قَالُوا۟ خَيْرًۭا ۗ لِّلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌۭ ۚ وَلَدَارُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ ۚ وَلَنِعْمَ دَارُ ٱلْمُتَّقِينَ

பயபக்தியுள்ளவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது "நன்மையையே (அருளினான்)" என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!

தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களிடம், “உங்களின் இறைவன் உங்களின் தூதர் முஹம்மது மீது எதனை இறக்கினான்?” என்று கேட்கப்பட்டால், “அவன் அவர் மீது மிகப் பெரும் நன்மைமைகளை இறக்கியுள்ளான்” என்று விடையளிப்பர்கள். இவ்வுலகில் அல்லாஹ்வை சிறந்த முறையில் வணங்கி அவனுடைய படைப்புகளுடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர்களுக்கு வெற்றி, விசாலமான வாழ்வாதாரம் உட்பட நற்கூலி உண்டு. அல்லாஹ் அவர்களுக்காக மறுமையில் ஏற்பாடு செய்துள்ள கூலி இவ்வுலகில் அவர்களுக்கு உடனடியாக வழங்கியதை விட சிறந்ததாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு கிடைக்கும் மறுமையின் வீடு மிகவும் சிறப்பானது.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.