Muslim99Muslim99
← Tafsir library

16. An-Nahl

The Bee · Meccan · 128 ayahs

سُورَةُ النَّحۡلِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 111–120 of 128

111

۞ يَوْمَ تَأْتِى كُلُّ نَفْسٍۢ تُجَٰدِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍۢ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

தூதரே!- ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாதிடும் அந்த நாளை நினைவு கூர்வீராக. அவன் அந்த நாளின் கடுமையினால் வேறு எவருக்காகவும் வாதாட மாட்டான். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த நன்மை தீமைக்கேற்ப முழுமையாக கூலி வழங்கப்படும். நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.

An-Nahl 16:111Listen in Qur'an →
112

وَضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا قَرْيَةًۭ كَانَتْ ءَامِنَةًۭ مُّطْمَئِنَّةًۭ يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًۭا مِّن كُلِّ مَكَانٍۢ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.

அல்லாஹ் ஒரு ஊரை - மக்காவை - உதாரணமாகக் கூறுகிறான். மக்காவைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அங்கு வசிப்பவர்களோ அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரம் எல்லா இடங்களிலிருந்தும் இலகுவாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களோ அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டார்கள். எனவே அவர்கள் பொய்பித்து நிராகரித்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களை அவர்களின் உடம்பில் மெலிவை ஏற்படுத்தும் கடும் பசியாலும் கடும் பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அசய்துகொண்டிருந்த நிராகரிப்பான காரியங்களினால் பசியும், பயமும் அவர்கள் அணியும் ஆடையைப் போல் அவர்களுக்கு ஆகிவிட்டன.

An-Nahl 16:112Listen in Qur'an →
113

وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَٰلِمُونَ

இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறை) தூதர் வந்தார் ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செயதவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.

மக்காவாசிகளிடம் உண்மையானவர், நம்பிக்கையானவர் என்ற நற்பெயர் பெற்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்தார். அவர்தான் முஹம்மத். இறைவன் அவருக்கு இறக்கியதில் அவரை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். எனவே அல்லாஹ் அவர்களை பசியாலும், பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி அவனுடைய தூதரை பொய்பித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.

An-Nahl 16:113Listen in Qur'an →
114

فَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلًۭا طَيِّبًۭا وَٱشْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.

அடியார்களே!- அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக இருந்தால் அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்துள்ளது என ஏற்றுக்கொள்வதன் மூலமும் அவற்றை அவனது திருப்பொருத்தத்தில் செலவளிப்பதன் மூலமும் நன்றி செலுத்துங்கள்.

An-Nahl 16:114Listen in Qur'an →
115

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

(நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் அனைத்து உறுப்புகள், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பலிகொடுக்கப்பட்டவை ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்கு தடைசெய்துள்ளான். இது விருப்பத் தேர்வு உள்ள சமயத்தில் தடுக்கப்பட்டவையாகும். ஆனால் யாரேனும் மேற்கூறப்பட்டவற்றை நிர்ப்பந்தத்தினால் தடைசெய்யப்பட்டதில் விருப்பமின்றியும், தேவையான அளவை மீறாமலும் உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளன், அவ்வாறு உண்டுவிட்டவர்களை மன்னிக்கக்கூடியவன். அவன் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். எனவேதான் நிர்ப்பந்தமான சமயத்தில் அவற்றை அனுமதித்துள்ளான்.

An-Nahl 16:115Listen in Qur'an →
116

وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ ٱلْكَذِبَ هَٰذَا حَلَٰلٌۭ وَهَٰذَا حَرَامٌۭ لِّتَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۚ إِنَّ ٱلَّذِينَ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ لَا يُفْلِحُونَ

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.

இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் தடைசெய்யாததை தடைசெய்து, அவன் அனுமதித்ததை தடைசெய்து அல்லாஹ்வின் மீது புனைந்து இட்டுக்கட்டும் நோக்கத்தில் “இது அனுமதிக்கப்பட்டது, இது தடைசெய்யப்பட்டது” என்று கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவோர் வெற்றிபெறவோ அச்சத்திலிருந்து தப்பவோ முடியாது.

An-Nahl 16:116Listen in Qur'an →
117

مَتَٰعٌۭ قَلِيلٌۭ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

அவர்கள் இவ்வுலகில் தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றுவதனால் அவர்களுக்கு அற்ப இன்பங்கள்தான் கிடைக்கும். ஆனால் மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

An-Nahl 16:117Listen in Qur'an →
118

وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ ۖ وَمَا ظَلَمْنَٰهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

இன்னும் யூதர்களுக்கு, உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம்; (எனினும்) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

குறிப்பாக யூதர்கள் மீது நாம் உமக்கு ஏற்கனவே எடுத்துக்கூறியவற்றைத் தடைசெய்திருந்தோம். (பார்க்க, அல்அன்ஆம் என்ற அத்தியாயத்தின் 146 வது வசனம்) நாம் அவற்றைத் தடைசெய்து அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. ஆனால் அவர்கள்தாம் தமக்குத் தாமே அநீதி இழைத்து தண்டனைக்கான காரணிகளைத் தேடிக் கொண்டார்கள். நாம் அவர்களின் அநியாயத்திற்குத்தான் தண்டனை வழங்கினோம். அவர்களைத் தண்டிக்கும்பொருட்டே நாம் அவர்கள் மீது அவற்றைத் தடைசெய்தோம்.

An-Nahl 16:118Listen in Qur'an →
119

ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا۟ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍۢ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌ

பிறகு, நிச்சயமாக உம் இறைவன் எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

பின்பு -தூதரே!- எவர்கள் விளைவைக் குறித்து அறியாமையினால் பாவங்கள் செய்து - அவர்கள் வேண்டுமென்றே செய்திருந்தாலும் - பின்னர் அல்லாஹ்வின்பால் மீண்டு மன்னிப்புக்கோரி தங்களின் தீய செயல்களைச் சீர்படுத்திக் கொண்டவர்களை, நிச்சயமாக உம் இறைவன் அவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.

An-Nahl 16:119Listen in Qur'an →
120

إِنَّ إِبْرَٰهِيمَ كَانَ أُمَّةًۭ قَانِتًۭا لِّلَّهِ حَنِيفًۭا وَلَمْ يَكُ مِنَ ٱلْمُشْرِكِينَ

நிச்சயமாக இப்றாஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார் மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.

நிச்சயமாக இப்ராஹீம் நன்மையான பண்புகளை ஒருசேரப் பெற்றவராகவும் தம் இறைவனுக்கு தொடராக அடிபணியக்கூடியவராகவும் எல்லா மார்க்கங்களையும் விட்டுவிட்டு இஸ்லாத்தின்பால் முழுமையாக சாய்ந்தவராகவும் இருந்தார். அவர் ஒருபோதும் இணைவைப்பாளராக இருந்ததில்லை.

An-Nahl 16:120Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.