يُنۢبِتُ لَكُم بِهِ ٱلزَّرْعَ وَٱلزَّيْتُونَ وَٱلنَّخِيلَ وَٱلْأَعْنَٰبَ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
அந்த நீரைக்கொண்டு நீங்கள் உண்ணும் பயிர்களையும் ஸைதூன், பேரீச்சை, திராட்சை இன்னும் எல்லா வகையான பழங்களையும் அல்லாஹ் உங்களுக்காக முளைக்கச் செய்கிறான். அந்த நீரிலும் அதிலிருந்து விளையக் கூடியவைகளிலும் அல்லாஹ்வின் படைப்பைச் சிந்தித்து அதன் மூலம் அவனது மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் மக்களுக்கு அவனது வல்லமையை அறிவிக்கக்கூடிய அத்தாட்சிகள் இருக்கின்றன.