Muslim99Muslim99
← Tafsir library

16. An-Nahl

The Bee · Meccan · 128 ayahs

سُورَةُ النَّحۡلِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 101–110 of 128

101

وَإِذَا بَدَّلْنَآ ءَايَةًۭ مَّكَانَ ءَايَةٍۢ ۙ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مُفْتَرٍۭ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

நாம் குர்ஆனின் ஏதேனும் ஒரு வசனத்தின் சட்டத்தை இன்னுமொரு வசனத்தின் மூலம் மாற்றினால் - காரணத்துக்காக குர்ஆனில் எதை நீக்க வேண்டும், எதை நீக்கக் கூடாது என்பதை அவனே நன்கறிந்தவன் - அவர்கள் கூறுகிறார்கள்: -“முஹம்மதே!- நீர் அல்லாஹ்வின் மீது புனைந்து பொய் கூறுகின்றீர்.” மாறாக அவர்களில் பெரும்பாலோர் இந்த மாற்றம் இறைவன் அறிந்த உன்னதமான நோக்கத்தின்படியே நடைபெறுகிறது என்பதை அறியமாட்டார்கள்.

An-Nahl 16:101Listen in Qur'an →
102

قُلْ نَزَّلَهُۥ رُوحُ ٱلْقُدُسِ مِن رَّبِّكَ بِٱلْحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهُدًۭى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ

(நபியே!) "ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தவறுகளோ, மாற்றங்களோ, திரிவுகளோ அற்ற சத்தியத்தைக்கொண்டு ஜீப்ரீல் அல்லாஹ்விடமிருந்து இந்த குர்ஆனை இறக்கியுள்ளார். அது அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களை, புதிதாக ஒன்று இறங்கும் போதும் அதிலிருந்து ஏதேனும் ஒன்று நீக்கப்படும் போதும், அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களுக்கு அவர்கள் பெறும் சிறந்த கூலியைக் கொண்டு நற்செய்தி சொல்லக் கூடியதாகவும் இருக்கின்றது.

An-Nahl 16:102Listen in Qur'an →
103

وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٌۭ ۗ لِّسَانُ ٱلَّذِى يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِىٌّۭ وَهَٰذَا لِسَانٌ عَرَبِىٌّۭ مُّبِينٌ

"நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.

“இந்தக் குர்ஆனை ஒரு மனிதன்தான் முஹம்மதுக்குக் கற்றுக் கொடுக்கிறான்” என்று இணைவைப்பாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். தங்களின் வாதத்தில் அவர்கள் பொய்யர்கள். ஏனெனில் அவர்கள் அவருக்குக் கற்றுக்கொடுப்பதாகக் கூறும் மனிதனின் மொழி அரபி அல்லாத அந்நிய மொழியாகும். இந்தக் குர்ஆனோ தெளிவான அரபிமொழியின் உயர்ந்த இலக்கிய நடையில் இறக்கப்பட்டதாகும். இவ்வாறிருக்கும் போது அரபி அல்லாத ஒரு மனிதனிடமிருந்து அவர் இந்தக் குர்ஆனைப் பெற்றார் என்று எவ்வாறு அவர்கள் கூற முடியும்?

An-Nahl 16:103Listen in Qur'an →
104

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَا يَهْدِيهِمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.

அல்லாஹ்வின் வசனங்கள் அவனிடமிருந்தே வந்துள்ளன என்பதை உண்மைப்படுத்தாதவர்களுக்கு அவர்கள் அதில் நிலைத்திருக்கும் வரை அவன் நேர்வழிகாட்ட மாட்டான். அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய வசனங்களை பொய்பித்ததனால் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.

An-Nahl 16:104Listen in Qur'an →
105

إِنَّمَا يَفْتَرِى ٱلْكَذِبَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰذِبُونَ

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.

முஹம்மது தம் இறைவனிடமிருந்து கொண்டுவந்துள்ளதில் பொய்யர் அல்ல. அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம் பொய்யை புனைந்துகூறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் வேதனையை அஞ்சுவதுமில்லை; நன்மையை எதிர்பார்ப்பதுமில்லை. நிராகரிக்கும் இவர்கள்தாம் பொய்யர்கள்; எனெனில் பொய் கூறுவது அவர்களது வழக்கமாகும். அதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

An-Nahl 16:105Listen in Qur'an →
106

مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعْدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلْكُفْرِ صَدْرًۭا فَعَلَيْهِمْ غَضَبٌۭ مِّنَ ٱللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌۭ

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட பிறகு அவனை நிராகரிப்பவர்கள் (இரு வகையினராக இருக்கின்றனர். ஒரு வகையினர்) அவர்களின் உள்ளங்கள் நம்பிக்கையில் உறுதியாக உள்ள நிலையில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு தன் நாவினால் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறியவர்கள். (இரண்டாவது வகையினர்) நம்பிக்கையை விட நிராகரிப்பை மனதார ஏற்று அதனை மொழிந்தவர். அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர். அவர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவருக்கு கடுமையான வேதனை உண்டு.

An-Nahl 16:106Listen in Qur'an →
107

ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱسْتَحَبُّوا۟ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْءَاخِرَةِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.

அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்கான காரணம், மறுமையைவிட தமது நிராகரிப்புக்கு அன்பளிப்பாகக் கிடைக்கும் இவ்வுலகின் அற்ப இன்பங்களுக்கு முன்னுரிமை வழங்கியதாகும். நிராகரிக்கும் மக்களுக்கு அல்லாஹ் ஈமானின்பால் வழிகாட்ட மாட்டான். மாறாக அவர்களைக் கைவிட்டு விடுவான்.

An-Nahl 16:107Listen in Qur'an →
108

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَٰرِهِمْ ۖ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ

அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்.

நம்பிக்கைகொண்ட பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட இவர்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ள முடியாமல் அவர்களின் உள்ளங்களிலும், அவற்றைச் செவியுற்று பயனடைய முடியாமல் செவிகளிலும், ஈமானுக்கான சான்றுகளைக் கண்டுகொள்ள முடியாமல் பார்வைகளிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் பாக்கியம் மற்றும் துர்பாக்கியத்தின் காரணங்களையும் அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள வேதனையையும் அறியாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.

An-Nahl 16:108Listen in Qur'an →
109

لَا جَرَمَ أَنَّهُمْ فِى ٱلْءَاخِرَةِ هُمُ ٱلْخَٰسِرُونَ

சந்தேகமின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள்.

நிச்சயமாக உண்மையில் இவர்கள்தாம் மறுமை நாளில் நம்பிக்கைகொண்ட பிறகு நிராகரித்ததனால் தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருந்தால் சுவனம் சென்றிருப்பார்கள்.

An-Nahl 16:109Listen in Qur'an →
110

ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا۟ مِنۢ بَعْدِ مَا فُتِنُوا۟ ثُمَّ جَٰهَدُوا۟ وَصَبَرُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌۭ رَّحِيمٌۭ

இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

தூதரே!- இருந்தபோதிலும் உள்ளங்கள் ஈமானைக் கொண்டு திருப்தியடைந்த நிலையில், நிராகரிப்பின் வார்த்தையைக் கூறுமளவுக்கு மக்காவில் இணைவைப்பாளர்களால் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு அவர்களுடைய மார்க்கத்தை சோதித்துப் பார்த்தத பின்னர் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்த பலவீனமான நம்பிக்கையாளர்களை நிச்சயமாக உம் இறைவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்யவும் நிராகரித்தோரின் வார்த்தை ஒழிந்து விடவும் போரிட்டார்கள். அதில் ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள். சோதிக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டதனால் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறிய அவர்களை நிச்சயமாக உம் இறைவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். ஏனெனில் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதனால்தான் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறினார்கள்.

An-Nahl 16:110Listen in Qur'an →

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.