Muslim99Muslim99
← Tafsir library

16. An-Nahl

The Bee · Meccan · 128 ayahs

سُورَةُ النَّحۡلِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 128

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

أَتَىٰٓ أَمْرُ ٱللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ ۚ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.

அல்லாஹ் தீர்மானித்துள்ள உங்கள் தண்டனை நெருங்கி விட்டது. -நிராகரிப்பாளர்களே!- வேதனைக்குரிய நேரம் வரமுன் அதனை விரைவுபடுத்துமாறு வேண்டாதீர்கள். இணைவைப்பாளர்கள் ஆக்கும் இணையாளர்களை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

2

يُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ بِٱلرُّوحِ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ أَنْ أَنذِرُوٓا۟ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱتَّقُونِ

அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.

“தூதர்களே!- அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்யுங்கள். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை" என வஹியைக் கொடுத்து வானவர்களை தான் நாடிய தூதர்கள் மீது அல்லாஹ் இறக்குகிறான். எனவே -மனிதர்களே!- என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னை அஞ்சுங்கள்.”

3

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ تَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையாக முன்மாதிரியின்றி படைத்துள்ளான். அவையிரண்டையும் அவன் வீணாகப் படைக்கவில்லை. மாறாக தன்னுடைய வல்லமையை, மகத்துவத்தை அறிவிப்பதற்காக அவையிரண்டையும் படைத்துள்ளான். அவனுடன் அவர்கள் அவன் அல்லாதவைகளை இணைவைப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.

4

خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن نُّطْفَةٍۢ فَإِذَا هُوَ خَصِيمٌۭ مُّبِينٌۭ

அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.

அவன் மனிதனை அற்ப விந்துத் துளியிலிருந்து படைத்தான். ஒவ்வொரு கட்டமாக அது வளர்ந்தது. அப்போது மனிதன் சத்தியத்தை அழிப்பதற்காக அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் புரிபவனாக இருக்கின்றான். தான் தர்க்கம் புரிபவற்றில் தெளிவானவனாகவும் உள்ளான்.

5

وَٱلْأَنْعَٰمَ خَلَقَهَا ۗ لَكُمْ فِيهَا دِفْءٌۭ وَمَنَٰفِعُ وَمِنْهَا تَأْكُلُونَ

கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.

மக்களே!- ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை அவன் உங்களின் நலன்களுக்காகவே படைத்துள்ளான். அவற்றின் தோல்கள் மற்றும் ரோமங்களின் மூலம் சூட்டைப் பெறுவதும் அந்த நலன்களில் ஒன்றே. அவற்றின் தோல்களிலும், பாலிலும், முதுகுகளிலும் உங்களுக்கு இன்னபிற நலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்தே நீங்கள் உண்ணுகிறீர்கள்.

6

وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ

அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது.

மாலையில் அவை வரும் போதும் காலையில் மேய்ச்சலுக்காக நீங்கள் அவற்றை ஓட்டிச் செல்லும் போதும் உங்களுக்கு அவற்றில் அலங்காரம் இருக்கின்றது.

7

وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍۢ لَّمْ تَكُونُوا۟ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلْأَنفُسِ ۚ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌۭ رَّحِيمٌۭ

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

நாம் உங்களுக்காக படைத்த இந்த கால்நடைகள் உங்களின் பயணங்களில் நீங்கள் கடும் சிரமத்துடனேயன்றி அடைய முடியாத இடங்களுக்கும் உங்களின் பாரமான பொருள்களை சுமந்து செல்கிறது. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் இறைவன் பரிவு மிக்கவனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் உங்களுக்காக இந்த கால்நடைகளை வசப்படுத்தித் தந்துள்ளான்.

8

وَٱلْخَيْلَ وَٱلْبِغَالَ وَٱلْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةًۭ ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

நீங்கள் பயணம் செய்வதற்காகவும் உங்களின் பொருள்களை சுமந்து செல்வதற்காகவும் உங்களுக்கு அலங்காரமாக அமையும் பொருட்டும் அவன் குதிரை, கோவேரு கழுதை, கழுதை ஆகிய கால்நடைகளை உங்களுக்காக படைத்துள்ளான். தான் படைப்பதற்கு நாடியவற்றில் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.

9

وَعَلَى ٱللَّهِ قَصْدُ ٱلسَّبِيلِ وَمِنْهَا جَآئِرٌۭ ۚ وَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.

தனது திருப்பொருத்தத்திற்கு இட்டுச்செல்லும் இஸ்லாம் என்னும் நேரான வழியைத் தெளிவுபடுத்துவது அல்லாஹ்வின் கடமையாகும். வழிகளில் சத்தியத்தை விட்டும் கோணலான ஷைத்தானிய வழிகளும் இருக்கின்றன. இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து வழிகளும் கோணலானவையே. அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஈமானை வழங்க வேண்டும் என நாடியிருந்தால் அவ்வாறு ஈமானை வழங்கியிருப்பான்.

10

هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ ۖ لَّكُم مِّنْهُ شَرَابٌۭ وَمِنْهُ شَجَرٌۭ فِيهِ تُسِيمُونَ

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.

அவனே உங்களுக்காக மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அந்த நீரிலிருந்தே நீங்கள் பருகுகிறீர்கள்; உங்கள் கால்நடைகளுக்கும் நீர் புகட்டுகிறீர்கள். அந்த நீரிலிருந்து உங்கள் கால்நடைகள் மேயும் புற்பூண்டுகளும் உண்டாகின்றன.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.