Muslim99Muslim99
← Tafsir library

15. Al-Hijr

The Rock · Meccan · 99 ayahs

سُورَةُ الحِجۡرِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 81–90 of 99

81

وَءَاتَيْنَٰهُمْ ءَايَٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ

அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டுவந்ததன் உண்மைத் தன்மைக்கு ஆதாரங்களையும் சான்றுகளையும் நாம் அவர்களுக்கு வழங்கினோம். அவற்றுள் நாம் வழங்கிய பெண் ஒட்டகமும் அடங்கும். அவர்கள் அந்த ஆதாரங்களைக் கொண்டு படிப்பினை பெறவுமில்லை; அவற்றைப் பொருட்படுத்தவுமில்லை.

82

وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.

அவர்கள் மலைகளிலுள்ள பாறைகளைக் குடைந்து தாங்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்காக வீடுகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

83

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ

ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,

அதிகாலையை அவர்கள் அடைந்த போது பயங்கர சப்தத்தை உள்ளடக்கிய வேதனை அவர்களைத் தாக்கியது.

84

فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.

அவர்கள் சம்பாதித்த செல்வங்களும், கட்டிய வசிப்பிடங்களும் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைக் காப்பாற்றவில்லை.

85

وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَءَاتِيَةٌۭ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ

நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.

வானங்களையும் பூமியையையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் நாம் நோக்கமின்றி வீணாகப் படைக்கவில்லை. நாம் அவையனைத்தையும் உண்மையாகவே படைத்துள்ளோம். நிச்சயமாக மறுமை நாள் வந்தே தீரும். -தூதரே!- உம்மை பொய்ப்பித்தவர்களை புறக்கணித்து விடும். அவர்களை அழகிய முறையில் மன்னித்து கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.

86

إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّٰقُ ٱلْعَلِيمُ

நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் எல்லாவற்றையும் படைத்தவன்; அவற்றைக் குறித்து நன்கறிந்தவன்.

87

وَلَقَدْ ءَاتَيْنَٰكَ سَبْعًۭا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.

நாம் உமக்கு ஏழு வசனங்களுடைய ஃபாத்திஹா என்னும் அத்தியாயத்தை வழங்கியுள்ளோம். அதுவே மகத்தான குர்ஆனாகும்.

88

لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ

அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.

நிராகரிப்பாளர்களில் பலதரப்பட்டவர்களுக்கு நாம் வழங்கிய அழியக்கூடிய இன்பங்களை ஏறெடுத்தும் பார்க்காதீர். அவர்களின் நிராகரிப்பிற்காக கவலை கொள்ளாதீர். நம்பிக்கையாளர்களுடன் பணிவாக நடந்து கொள்வீராக.

89

وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ

"பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்" என்று நீர் கூறுவீராக

தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் வேதனையைக் கொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்யக்கூடியவன்.

90

كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ

(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,

வேதத்தில் சிலதை ஏற்றுக்கொண்டு சிலதை மறுத்து அல்லாஹ்வின் வேதங்களை பல பகுதிகளாக கூறுபோட்டவர்கள் மீது அல்லாஹ் இறக்கியது போன்ற வேதனை உங்களுக்கும் ஏற்படும் என்பதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.