ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
அவர்கள் குர்ஆனை பல பிரிவுகளாக மாற்றினார்கள். இவை சூனியம், இவை ஜோதிடம், இவை கவிதை என்றும் அவர்கள் கூறினார்கள்.
سُورَةُ الحِجۡرِ
Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies
Ayahs 91–99 of 99
ٱلَّذِينَ جَعَلُوا۟ ٱلْقُرْءَانَ عِضِينَ
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
அவர்கள் குர்ஆனை பல பிரிவுகளாக மாற்றினார்கள். இவை சூனியம், இவை ஜோதிடம், இவை கவிதை என்றும் அவர்கள் கூறினார்கள்.
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ أَجْمَعِينَ
உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
தூதரே!- உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக மறுமை நாளில் அதனைக் கூறுபோட்ட அனைவரிடமும் கேட்டே தீருவோம்.
عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவை குறித்தும் அவர்களிடம் நாம் விசாரித்தே ஆகுவோம்.
فَٱصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
தூதரே!- எதன் பக்கத் அழைப்பு விடுக்குமாறு அல்லாஹ் உமக்கு கட்டளையிட்டானோ அதனை எடுத்துரைப்பீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதையும் செய்வதையும் பொருட்படுத்தாதீர்.
إِنَّا كَفَيْنَٰكَ ٱلْمُسْتَهْزِءِينَ
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
அவர்களைக் கண்டு நீர் அஞ்சாதீர். பரிகாசம் செய்யக்கூடிய நிராகரிக்கும் குறைஷித் தலைவர்கள் விஷயத்தில் நாமே உமக்குப் போதுமானவர்கள்.
ٱلَّذِينَ يَجْعَلُونَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் இணைவைப்பின் மோசமான விளைவை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
தூதரே!- அவர்கள் உம்மை பொய்பிப்பதனால், பரிகாசம் செய்வதனால் நிச்சயமாக உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதை நாம் நன்கு அறிவோம்.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனை தூய்மைப்படுத்தி, அவனுடைய பரிபூரணமான பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்ந்து அவன் பக்கமே தஞ்சம் புகுந்து கொள்வீராக. அல்லாஹ்வை வணங்கி தொழுகையில் ஈடுபடுபவர்களில் ஒருவராக ஆகிவிடுவீராக. இதனால் உமது உள்ளம் உணரும் நெருக்கடியிலிருந்து நீர் விடுபடலாம்.
وَٱعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ ٱلْيَقِينُ
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
மரணம் உம்மை அடையும் வரை உம் இறைவனை வணங்குவதில் நிலைத்திருப்பீராக.
Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.