Muslim99Muslim99
← Tafsir library

15. Al-Hijr

The Rock · Meccan · 99 ayahs

سُورَةُ الحِجۡرِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 71–80 of 99

71

قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَٰعِلِينَ

அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார்.

லூத் தனது விருந்தாளிகளுக்கு முன்னால் மன்னிப்பு கேட்டவராக தனது கூட்டத்தாருக்கு கூறினார்: “இவர்கள் உங்கள் பெண்களைச் சார்ந்த என் புதல்விகள். நீங்கள் உங்களின் இச்சைகளைத் தணித்துக்கொள்ள விரும்பினால் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

72

لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ

(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.

தூதரே! உம் வாழ்க்கையின் மீது சத்தியமாக லூதுடைய சமூகம் தம் எல்லை மீறிய இச்சையினால் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

73

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ

ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.

சூரியன் உதிக்கும் சமயத்தில் அழிவை ஏற்படுத்தும் பாரியதொரு சத்தம் அவர்களைத் தாக்கியது.

74

فَجَعَلْنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن سِجِّيلٍ

பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.

நாம் அவர்களின் ஊர்களை தலை கீழாகப் புரட்டி விட்டோம். களிமண் கற்களை அவர்கள் மீது பொழியச் செய்தோம்.

75

إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْمُتَوَسِّمِينَ

நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

மேற்கூறப்பட்ட லூத்தின் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன.

76

وَإِنَّهَا لَبِسَبِيلٍۢ مُّقِيمٍ

நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.

லூத் சமூகத்தின் ஊர்கள் எல்லோராலும் காணமுடியுமான பாதையில்தான் அமைந்துள்ளன. கடந்து செல்லக்கூடிய பயணிகள் அவற்றைப் பார்த்துக் கொண்டுதான் செல்கிறார்கள்.

77

إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ

திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.

நிச்சயமாக நடந்து முடிந்த இந்த விடயத்தில் படிப்பினைபெறக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

78

وَإِن كَانَ أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ لَظَٰلِمِينَ

இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.

அடர்ந்த தோப்புகளுடைய ஷுஐபின் ஊர்வாசிகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் ஷுஐபையும் நிராகரித்ததனால் அக்கிரமக்காரர்களாக இருந்தார்கள்.

79

فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍۢ مُّبِينٍۢ

எனவே அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.

நாம் அவர்களை வேதனையால் தண்டித்தோம். லூத்தின் சமூகம் வசித்த ஊர்களும் ஷுஐபின் சமூகம் வசித்த இடங்களும் கடந்து செல்லக்கூடியவர்களுக்கு தெளிவான பாதையில்தான் அமைந்துள்ளன.

80

وَلَقَدْ كَذَّبَ أَصْحَٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ

(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

ஹிஜ்ர் வாசிகளான (ஹிஜாஸ் மற்றும் ஷாம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பகுதி) ஸமூத் சமூகத்தினரும் தமது தூதர் ஸாலிஹை நிராகரித்ததனால் அனைத்து தூதர்களையும் நிராகரித்தவர்களாக ஆகிவிட்டனர்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.