فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
தூதர்களாக அனுப்பப்பட்ட வானவர்கள் மனித உருவில் லூத்தின் குடும்பத்தாரிடம் வந்த போது
سُورَةُ الحِجۡرِ
Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies
Ayahs 61–70 of 99
فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
தூதர்களாக அனுப்பப்பட்ட வானவர்கள் மனித உருவில் லூத்தின் குடும்பத்தாரிடம் வந்த போது
قَالَ إِنَّكُمْ قَوْمٌۭ مُّنكَرُونَ
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று (லூத்) சொன்னார்,
லூத் அவர்களிடம் “அறிமுகமற்ற கூட்டமாக உள்ளீர்களே.” எனக் கூறினார்.
قَالُوا۟ بَلْ جِئْنَٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ
(அதற்கு அவர்கள்,) "அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
தூதர்களாக வந்த வானவர்கள் லூத்திடம் கூறினார்கள்: “பயப்படாதீர். -லூத்தே!- உம் சமூகம் சந்தேகிக்கக்கூடியஅவர்களை அழிக்கும் வேதனையை நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.
وَأَتَيْنَٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَٰدِقُونَ
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
நாங்கள் வேடிக்கையற்ற சத்தியத்தைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாவோம்.
فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍۢ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌۭ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு செல்வீராக. நீர் அவர்களுக்குப் பின்னால் செல்வீராக. உங்களில் யாரும் தம் சமூகத்தினருக்கு என்ன நிகழப் போகிறது என்பதை திரும்பிப் பார்க்கக் கூடாது. அல்லாஹ் உங்களை செல்லுமாறு ஏவிய இடத்துக்கு செல்லுங்கள்.
وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰٓؤُلَآءِ مَقْطُوعٌۭ مُّصْبِحِينَ
மேலும், 'இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்'.
அதிகாலையில் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று நாம் விதித்த விஷயத்தை லுதுக்கு வஹி மூலம் அறிவித்தோம்.
وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
சதூம் வாசிகள் லூத்தின் விருந்தினரைக் கண்டு மகிழ்ச்சியடைந்து மானக்கேடான காரியத்தில் மோகம் கொண்டவர்களாக வந்தார்கள்.
قَالَ إِنَّ هَٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ
(லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;"
லூத் அவர்களிடம் கூறினார்: “இவர்கள் என் விருந்தினர்கள். எனவே அவர்களிடம் நீங்கள் விரும்புவதைத் தெரிவித்து என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்.
وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ
"அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார்.
மானக்கேடான காரியத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களின் இந்த மோசமான காரியத்தால் என்னை இழிவுபடுத்திவிடாதீர்கள்.
قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَٰلَمِينَ
அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
அவர்களின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “மக்களில் யாருக்கும் விருந்தளிக்கக் கூடாது என்று நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?
Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.