Muslim99Muslim99
← Tafsir library

15. Al-Hijr

The Rock · Meccan · 99 ayahs

سُورَةُ الحِجۡرِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 99

51

وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْرَٰهِيمَ

இன்னும், இப்றாஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!

இப்ராஹீமின் விருந்தினர்களாக வருகை தந்த வானவர்களின் தகவலை அவர்களுக்கு அறிவிப்பீராக. அவர்கள் அவருக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறவும் லூத்தின் சமூகத்தினருடைய அழிவைக் கொண்டு அறிவிக்கவும் வந்தவர்களாவர்.

52

إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ

அவர்கள் அவரிடம் வந்து, "உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!" என்று சொன்ன போது அவர், "நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்" என்று கூறினார்.

அவர்கள் அவரிடம் வந்த போது அவருக்கு சலாம் கூறினர். அவர்களது வாழ்த்து முறையை விட அழகிய முறையில் அவர்களுக்கு அவர் பதில் கூறினார். அவர்கள் உண்பதற்காக பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். ஏனெனில் அவர் அவர்களை மனிதர்கள் என்று எண்ணினார். அவர்கள் அதிலிருந்து உண்ணாததைக் கண்ட அவர், “நாங்கள் உங்களைக் கண்டு அஞ்சுகிறோம்” என்று கூறினார்.

53

قَالُوا۟ لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ عَلِيمٍۢ

அதற்கு அவர்கள், "பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்" என்று கூறினார்கள்.

தூதர்களாக வந்த வானவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக உமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக விரைவில் உமக்கு அறிவு மிக்க ஆண்மகன் பிறப்பான்.”

54

قَالَ أَبَشَّرْتُمُونِى عَلَىٰٓ أَن مَّسَّنِىَ ٱلْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ

அதற்கவர், "என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?" எனக் கேட்டார்.

பிள்ளை கிடைக்கும் என்ற அவர்களின் நற்செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இப்ராஹீம் அவர்களிடம் கூறினார்: “இந்த தள்ளாத வயதிலும் எனக்கு குழந்தை பிறக்கும் என்று நற்செய்தி கூறுகிறீர்களா? எந்த அடிப்படையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்கள்?

55

قَالُوا۟ بَشَّرْنَٰكَ بِٱلْحَقِّ فَلَا تَكُن مِّنَ ٱلْقَٰنِطِينَ

அதற்கவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!" என்று கூறினார்கள்.

தூதர்களாக வந்த வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். எனவே நாம் உமக்குக் கூறிய நற்செய்தியை விட்டும் நம்பிக்கையிழந்தவர்களில் ஒருவராகிவிடாதீர்.

56

قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِۦٓ إِلَّا ٱلضَّآلُّونَ

"வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசைக் கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,

இப்ராஹீம் கூறினார்: “தன் இறைவனின் அருளிலிருந்து நேரான பாதையை விட்டும் விலகி விட்டவர்கள்தாம் நம்பிக்கை இழப்பார்கள்.”

57

قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ

"(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?" என்று (இப்றாஹீம்) கேட்டார்.

அவர் கேட்டார்: “அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்களே! எதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள்?”

58

قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ

அதற்கவர்கள், "குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.

தூதர்களாக வந்த வானவர்கள் கூறினார்கள்: “பெரும் குழப்பக்காரர்களும், பெரும் தீயவர்களுமான லூத்தின் சமூகத்தை அழிப்பதற்காக எம்மை அல்லாஹ் அனுப்பியுள்ளான்.”

59

إِلَّآ ءَالَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ

"லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.

ஆயினும் லூத்தின் குடும்பத்தினரையும் நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றியவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் பாதுகாத்திடுவோம். அவர்கள் அழிக்கப்பட மாட்டார்கள்.

60

إِلَّا ٱمْرَأَتَهُۥ قَدَّرْنَآ ۙ إِنَّهَا لَمِنَ ٱلْغَٰبِرِينَ

ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்" என்று (வானவர்கள்) கூறினார்கள்.

ஆனால் அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவளும் அழிக்கப்படுபவர்களுடன் சேர்ந்து அழிக்கப்படுவாள் என்று நாம் தீர்மானித்துவிட்டோம்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.