قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ
(அதற்கு இறைவன் "அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
அல்லாஹ் கூறினான்: இது என் பக்கம் கொண்டு சேர்க்கக்கூடிய நேரான பாதையாகும்.
سُورَةُ الحِجۡرِ
Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies
Ayahs 41–50 of 99
قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ
(அதற்கு இறைவன் "அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
அல்லாஹ் கூறினான்: இது என் பக்கம் கொண்டு சேர்க்கக்கூடிய நேரான பாதையாகும்.
إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَٰنٌ إِلَّا مَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْغَاوِينَ
"நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர" என்று கூறினான்.
உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர நிச்சயமாக என்னை மட்டுமே உளத் தூய்மையுடன் வணங்கக்கூடிய என் அடியார்களை வழிகெடுப்பதற்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ
நிச்சயமாக (உன்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
இப்லீஸூக்கும் அவனைப் பின்பற்றிய வழிகெட்டவர்கள் அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
لَهَا سَبْعَةُ أَبْوَٰبٍۢ لِّكُلِّ بَابٍۢ مِّنْهُمْ جُزْءٌۭ مَّقْسُومٌ
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
அந்த நரகத்திற்கு ஏழு வாயில்கள் உண்டு. அவற்றின் வழியாக அவர்கள் நுழைவார்கள். ஒவ்வொரு வாயில் வழியாகவும் இப்லீஸைப் பின்பற்றிய குறிப்பிட்ட தொகையினர் நுழைவார்கள்.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ
(அவர்களை நோக்கி) "சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
அவர்கள் அவற்றில் நுழையும் போது அவர்களிடம் கூறப்படும்: “துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, பயத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாக நீங்கள் இவற்றில் நுழையுங்கள்.”
وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
அவர்களின் உள்ளங்களிலிருக்கும் குரோதத்தையும் பகைமையையும் நாம் நீக்கி விடுவோம். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் சகோதரர்களாக, ஒருவரையொருவர் பார்த்தவாறு கட்டில்களில் அமர்ந்திருப்பார்கள்.
لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌۭ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ
அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
அங்கு அவர்களுக்கு களைப்பு ஏற்படாது. அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். மாறாக என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள்.
۞ نَبِّئْ عِبَادِىٓ أَنِّىٓ أَنَا ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்."
தூதரே!- என் அடியார்களுக்கு அறிவித்து விடுவீராக: “நிச்சயமாக நான் அவர்களில் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தின் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.”
وَأَنَّ عَذَابِى هُوَ ٱلْعَذَابُ ٱلْأَلِيمُ
"(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்" (என்றும் சொல்லும்).
நிச்சயமாக நான் அளிக்கும் தண்டனையே வேதனை மிக்க தண்டனையாகும் என்பதையும் அறிவித்து விடுவீராக. எனவே அவர்கள் என்னுடைய மன்னிப்பைப் பெறுவதற்காக, என் தண்டனையிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளட்டும்.
Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.