Muslim99Muslim99
← Tafsir library

15. Al-Hijr

The Rock · Meccan · 99 ayahs

سُورَةُ الحِجۡرِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 31–40 of 99

31

إِلَّآ إِبْلِيسَ أَبَىٰٓ أَن يَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ

இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.

ஆனால் -வானவர்களுடன் இருந்த வானவர் அல்லாத- இப்லீஸ் வானவர்களுடன் சேர்ந்து ஆதமுக்குச் சிரம்பணியாமல் தவிர்ந்து கொண்டான்.

32

قَالَ يَٰٓإِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ ٱلسَّٰجِدِينَ

"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.

ஆதமுக்கு சிரம்பணிய மறுத்த இப்லீஸிடம் அல்லாஹ் கூறினான்: “என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்த வானவர்களுடன் சேர்ந்து சிரம்பணியாமல் உன்னைத் தடுத்தது எது?

33

قَالَ لَمْ أَكُن لِّأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُۥ مِن صَلْصَٰلٍۢ مِّنْ حَمَإٍۢ مَّسْنُونٍۢ

அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.

இப்லீஸ் கர்வத்துடன் கூறினான்: “நீ காய்ந்த மாற்றமடைந்த கருப்பான களிமண்ணால் படைத்த மனிதனுக்கு சிரம்பணிவது எனக்கு உகந்ததல்ல.

34

قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ

"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."

அல்லாஹ் இப்லீஸிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”

35

وَإِنَّ عَلَيْكَ ٱللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ

"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான்.

உன்மீது சாபம் உண்டு. நீ மறுமை நாள் வரை என் அருளை விட்டும் தூரமாகி விட்டாய்.

36

قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

"என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான்.

இப்லீஸ் கூறினான்: “இறைவா! படைப்புகள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக. என்னை மரணிக்கச் செய்துவிடாதே.”

37

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ

"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;"

அவனிடம் அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக தவணைகள் பிற்படுத்தப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டோரில் நீ உள்ளாய்.

38

إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ

"குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்" என்று அல்லாஹ் கூறினான்.

முதல் சூர் ஊதப்பட்டு படைப்புகள் அனைத்தும் மரணிக்கும் நேரம் வரை.

39

قَالَ رَبِّ بِمَآ أَغْوَيْتَنِى لَأُزَيِّنَنَّ لَهُمْ فِى ٱلْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

இப்லீஸ் கூறினான்: “இறைவா! நீ என்னை வழிகெடுத்ததனால் பூமியில் பாவம் செய்வதை நான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுவேன். நேரான வழியை விட்டும் அவர்கள் அனைவரையும் கெடுப்பேன்.

40

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ

"அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர" என்று கூறினான்.

ஆயினும் உன்னை வணங்குவதற்காக நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட உன் அடியார்களைத் தவிர.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.