Muslim99Muslim99
← Tafsir library

15. Al-Hijr

The Rock · Meccan · 99 ayahs

سُورَةُ الحِجۡرِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 99

11

وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.

முன்னர் நிராகரித்த அந்த கூட்டங்களிடம் யாரேனும் தூதர் வந்தபோதெல்லாம் அவரை அவர்கள் நிராகரித்தார்கள்; அவரை பரிகாசம் செய்தார்கள்.

12

كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ

இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.

அந்த சமூக மக்களின் உள்ளங்களில் நாம் நிராகரிப்பை நுழைவித்தது போலவே மக்காவில் வசிக்கும் இந்த இணைவைப்பாளர்களின் உள்ளங்களிலும் அவர்களின் பிடிவாதத்தினாலும் புறக்கணிப்பினாலும் நாம் நிராகரிப்பை நுழைவித்துவிட்டோம்.

13

لَا يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ

அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.

அவர்கள் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆனின் மீது நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்த சமூகங்களை அழிக்கும் அல்லாஹ்வின் வழிமுறை நடந்தேயிருக்கின்றன. எனவே உம்மை நிராகரிப்பவர்கள் படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.

14

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًۭا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ

இவர்களுக்காக நாம், வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுவதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).

இந்த நிராகரிப்பாளர்களுக்கு தெளிவான ஆதாரங்களின் மூலம் சத்தியம் தெளிவாகி விட்டாலும், அவர்கள் பிடிவாதங்கொண்டவர்களாகவே உள்ளனர். எனவேதான் நாம் அவர்களுக்காக வானத்தின் கதவைத் திறந்து அதில் அவர்கள் ஏறிப் பார்த்தாலும் (நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்).

15

لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌۭ مَّسْحُورُونَ

"நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். மாறாக “எங்களின் பார்வைகள் தடுக்கப்பட்டு உள்ளது. நாம் காண்பது சூனியத்தின் தாக்கமாகும். நாங்கள் சூனியம் செய்யப்பட்டுள்ளோம்” என்று கூறுவார்கள்.

16

وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَزَيَّنَّٰهَا لِلنَّٰظِرِينَ

வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.

தரை மற்றும் கடலின் இருள்களில் மக்கள் பயணம் செய்யும் போது அவர்கள் வழிகாட்டலைப் பெறுவதற்காக நாம் வானத்தில் பிரமாண்டமான நட்சத்திரங்களை ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ்வின் வல்லமையை அறிந்துகொள்ளும் பொருட்டு அவற்றைப் பார்ப்போருக்கு நாம் அலங்கரித்துள்ளோம்.

17

وَحَفِظْنَٰهَا مِن كُلِّ شَيْطَٰنٍۢ رَّجِيمٍ

விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.

அல்லாஹ்வின் அருளில் இருந்து விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் வானத்தை பாதுகாத்துள்ளோம்.

18

إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ مُّبِينٌۭ

திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.

ஆனால் யாரேனும் வானவர்களின் உரையாடலை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்டால் பிரகாசமான எரிநட்சத்திரம் அவனைப் பின்தொடர்ந்து பொசுக்கி விடும்.

19

وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍۢ مَّوْزُونٍۢ

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்.

மனிதர்கள் தங்குவதற்காக நாம் பூமியை விரித்துள்ளோம். அது அவர்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக உறுதியான மலைகளை அதில் ஏற்படுத்தியுள்ளோம். அதில் எல்லாவகையான தாவரங்களைிலும் நிர்ணயிக்கப்பட்ட ஞானத்திற்கேற்றவற்றை முளைக்கச் செய்தோம்.

20

وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ

நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.

மனிதர்களே!- பூமியில் நீங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உணவுப்பொருள்கள், பானங்கள் போன்றவை ஏற்படுத்தியுள்ளோம். உங்களைத் தவிர நீங்கள் வாழ்வாதாரம் அளிக்காத மனிதர்கள், மிருகங்கள் ஆகிய ஏனையோருக்கும் தேவையான வாழ்வாதாரத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.