Muslim99Muslim99
← Tafsir library

15. Al-Hijr

The Rock · Meccan · 99 ayahs

سُورَةُ الحِجۡرِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 1–10 of 99

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1

الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ وَقُرْءَانٍۢ مُّبِينٍۢ

அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகும்.

(الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. உயர்ந்த அந்தஸ்துகளுடைய, அல்லாஹ்விடமிருந்து இறங்கியுள்ளது என்பதை அறிவிக்கக்கூடிய இந்த வசனங்கள், ஏகத்துவத்தையும் சட்ட திட்டங்களையும் தெளிவுபடுத்தும் குர்ஆனின் வசனங்களாகும்.

2

رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِينَ

தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.

தமக்கு உண்மை புரிந்து, உலகில் நிராகரிப்பில் இருந்தமை தவறு என்பது அவர்களுக்குப் புரியும் போது நாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கக் கூடாதா என்று மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் ஏங்குவார்கள்.

3

ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

தூதரே!- இந்த நிராகரிப்பாளர்களை விட்டு விடுவீராக. அவர்கள் கால்நடைகளைப் போன்று உண்ணட்டும்; அழியக்கூடிய இன்பங்களை அனுபவிக்கட்டும்; நீண்ட ஆசைகள் அவர்களை ஈமானை விட்டும், நற்செயல்களை விட்டும் திசைதிருப்பட்டும். மறுமை நாளில் அல்லாஹ்விடம் அவர்கள் சென்றால் அவர்கள் எவ்வளவு நஷ்டத்தில் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

4

وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌۭ مَّعْلُومٌۭ

எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.

எந்தவொரு அநியாயக்கார ஊர் மீதும் அல்லாஹ்வின் அறிவில் உள்ள அதற்கென குறிக்கப்பட்ட தவணையிலன்றி நாம் அழிவை இறக்கவில்லை. அதனை விட்டு முந்தவும் முடியாது; பிந்தவும் முடியாது.

5

مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ

எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.

எந்தவொரு சமூகத்திற்கும் அதற்கான தவணை வருவதற்கு முன்னர் அழிவு வராது. அதற்கான தவணை வந்து விட்டால் தாமதிக்கவும் மாட்டாது. அநியாயக்காரர்கள் அல்லாஹ் அளிக்கும் அவகாசத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது.

6

وَقَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌۭ

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

மக்காவைச் சார்ந்த நிராகரிப்பாளர்கள் தூதரிடம் கூறுகிறார்கள்: “அறிவுரை தன் மீது இறக்கப்பட்ட(தாக எண்ணிக்கொண்டிருப்ப)வரே! நிச்சயமாக உமது இந்த அழைப்பின் மூலம் நீர் பைத்தியக்காரர்களில் ஒருவராக இருக்கின்றீர். பைத்தியக்காரர்கள் செயல்படுவதைப் போன்றே நீர் செயல்படுகின்றீர்.

7

لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.)

நீர் உண்மையாளராக இருந்தால் நீர் இறைத்தூதர்தான் என சாட்சி கூறும் வானவர்களைக் கூட்டிவரக்கூடாதா?

8

مَا نُنَزِّلُ ٱلْمَلَٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًۭا مُّنظَرِينَ

நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.

மலக்குமார்கள் வரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மறுத்துரைத்தவாறு அல்லாஹ் கூறுகிறான்: “உங்களை வேதனையைக் கொண்டு அழிக்கும் சமயத்தில் ஒரு நோக்கத்திற்கேற்பவே தவிர நாம் வானவர்களை இறக்கமாட்டோம். - அவர்கள் நம்பிக்கை கொள்ளாத நிலையில் வானவர்களை நாம் இறக்கினால்- அவர்களுக்கு நாம் அவகாசம் அளிக்க மாட்டோம். மாறாக அவர்கள் உடனே தண்டிக்கப்படுவார்கள்.

9

إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

மனிதர்களுக்கு அறிவுரையாக அமையும் பொருட்டு நாம்தான் இந்த குர்ஆனை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கினோம். நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை கூடுதல், குறைவு, சிதைவு, திரிபு ஆகியவற்றிலிருந்து நாமே பாதுகாப்போம்.

10

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.

தூதரே!- உமக்கு முன்னர் நாம் தூதர்களை நிராகரித்த கூட்டங்களின்பால் அனுப்பினோம். அவர்கள் தூதர்களை நிராகரித்து விட்டார்கள். உமது சமுதாயத்தினால் மறுக்கப்படுவதில் நீர் புதுமையான ஒரு தூதர் அல்ல.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.