Muslim99Muslim99
← Tafsir library

14. Ibrahim

Abraham · Meccan · 52 ayahs

سُورَةُ إِبۡرَاهِيمَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–52 of 52

51

لِيَجْزِىَ ٱللَّهُ كُلَّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

இது ஒவ்வொரு ஆன்மாவும் செய்த நற்செயல்கள் அல்லது தீய செயல்களுக்கு கூலி வழங்குவதற்காகவேயாகும். நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன். அவன் அனைவரையும் ஒரேநாளில் விசாரணை செய்துவிடுவான். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிப்பதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை.

52

هَٰذَا بَلَٰغٌۭ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَٰهٌۭ وَٰحِدٌۭ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.

முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து மக்களுக்கு வந்த அறிவிப்பாகும். இதிலுள்ள கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டு அவர்களை அச்சமூட்டுவதற்காகவும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் என்பதை அறிந்து அவனுக்கு யாரையும் இணையாக்காது அவனை வணங்க வேண்டும் என்பதற்காகவும் நேர்த்தியான அறிவுடையவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது வந்துள்ளது. ஏனெனில் அவர்களே உபதேசங்களையும், படிப்பினைகளையும் கொண்டு பயனடைவார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.