Muslim99Muslim99
← Tafsir library

14. Ibrahim

Abraham · Meccan · 52 ayahs

سُورَةُ إِبۡرَاهِيمَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 41–50 of 52

41

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" (என்று பிரார்த்தித்தார்).

எங்கள் இறைவா! என் பாவங்களை மன்னித்து விடுவாயாக. என் தாய் தந்தையரின் பாவங்களையும் விசாரணை செய்ய தங்களின் இரட்சகனுக்கு முன்னால் நிற்கும் நாளில் நம்பிக்கையாளர்களின் பாவங்களையும் மன்னித்து விடுவாயாக. (இது அவருடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்பதை அறிவதற்கு முன்னர் அவர் செய்த பிரார்த்தனையாகும். அவருடைய தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவான பின்னர் அவரை விட்டும் நீங்கிவிட்டார்).

42

وَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ غَٰفِلًا عَمَّا يَعْمَلُ ٱلظَّٰلِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍۢ تَشْخَصُ فِيهِ ٱلْأَبْصَٰرُ

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

தூதரே!- அநியாயக்காரர்களின் தண்டனையை அல்லாஹ் தாமதப்படுத்துவதால் அவர்கள் செய்யும் நிராகரிப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல், இன்னும் ஏனைய செயல்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்று மட்டும் ஒரு போதும் எண்ணிவிடாதீர். மாறாக அவற்றை அவன் நன்கறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் வேதனையை மறுமை நாள் வரை அவன் தாமதப்படுத்துகிறான். அந்நாளில் பார்வைகள் காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும்.

43

مُهْطِعِينَ مُقْنِعِى رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْـِٔدَتُهُمْ هَوَآءٌۭ

(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.

மக்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்து அழைப்பவரின்பக்கம் விரையும் போது பதற்றத்தால் அவர்களின் தலைகள் வானத்தின்பால் உயர்ந்தவையாக இருக்கும். அவர்களின் பார்வைகள் அவர்களின்பால் திரும்ப வராது. மாறாக அவை காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும். புத்தியில்லாமல் அவர்களின் உள்ளங்கள் வெறுமையாக இருக்கும். அந்த நாளில் பதற்றத்தினால் எதையும் அவற்றால் புரிந்துகொள்ள முடியாது.

44

وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍۢ

எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) "உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?" (என்றும்)

தூதரே!- மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து உம் சமூகத்தினரை அச்சமூட்டுவீராக. அப்போது அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணைவைத்து தமக்குத் தாமே அநீதியிழைத்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக. எங்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவாயாக. கொஞ்ச நாள் வரை எங்களை இவ்வுலகின்பால் திருப்பி அனுப்புவாயாக. நாங்கள் உன்மீது நம்பிக்கை கொண்டு நீ எங்களின் பக்கம் அனுப்பிய தூதர்களைப் பின்பற்றுகிறோம்.” அவர்களைக் கண்டித்தவாறு அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்: “மரணித்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்தவாறு நிச்சயமாக இவ்வுலகத்திலிருந்து மறுமையின்பால் எந்த இடம்பெயர்வும் இல்லை என்று நீங்கள் சத்தியமிட்டுக் கூறவில்லையா?!

45

وَسَكَنتُمْ فِى مَسَٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ

அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும்; உங்களுக்கு தெளிவாக்கப் பட்டது இன்னும் நாம் உங்களுக்கு(ப் பலமுன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).

அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத்தாமே அநீதியிழைத்துக்கொண்ட ஹூத் நபியின் சமூகம், ஸாலிஹ் நபியின் சமூகம் போன்ற உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் வசித்த இடங்களில்தான் நீங்கள் வசிக்கிறீர்கள். அவர்களுக்கு நாம் ஏற்படுத்திய அழிவு உங்களுக்குத் தெரியும். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு அல்லாஹ்வின் வேதத்தில் நாம் உதாரணங்களைக் கூறினோம். ஆனால் நீங்கள் படிப்பினை பெறவில்லை.

46

وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ

எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.

முன்னர் அநியாயக்கார சமூகங்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் வசிக்கும் இவர்கள் முஹம்மது நபியைக் கொல்வதற்கும், அவருடைய அழைப்புப் பணியை நிறுத்துவதற்கும் இரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். அவர்களின் இரகசியத் திட்டங்களை அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவர்களின் திட்டம் பலவீனமானது. அதன் பலவீனத்தினால் மலைகளையோ எனையவற்றையோ அது அகற்றாது. ஆனால் அல்லாஹ் அவர்களுக்குச் செய்யும் சூழ்ச்சி அதற்கு மாற்றமானது.

47

فَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ مُخْلِفَ وَعْدِهِۦ رُسُلَهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍۢ

ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.

தூதரே!- அல்லாஹ் தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதாக தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவான் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிடாதீர். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது. அவன் தன் நேசர்களை மேலோங்கச் செய்கிறான். தன் எதிரிகளையும் தனது தூதர்களின் எதிரிகளையும் கடுமையாக பழி தீர்ப்பவன்.

48

يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

மறுமைநாள் நிகழும்போது, இந்த பூமி தூய்மையான, வெண்மையான வெறொரு பூமியாக, வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்கள் தங்கள் அடக்கத்தலங்களிலிருந்து வெளிப்பட்டு தங்கள் உடல்களோடும் செயல்களோடும் அனைவரையும் அடக்கியாளும் ஏகனான அல்லாஹ்வின் முன்னால் நிற்பார்கள்.

49

وَتَرَى ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍۢ مُّقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ

இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

தூதரே! பூமி வேறு பூமியாக வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் ஒருவருக்கொருவர் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர். அவர்களின் கைகளும் கால்களும் அவர்களின் கழுத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அவர்களின் ஆடைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும்.

50

سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍۢ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ

அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

தூதரே! பூமி வேறு பூமியாக வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் ஒருவருக்கொருவர் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர். அவர்களின் கைகளும் கால்களும் அவர்களின் கழுத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அவர்களின் ஆடைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.