Muslim99Muslim99
← Tafsir library

14. Ibrahim

Abraham · Meccan · 52 ayahs

سُورَةُ إِبۡرَاهِيمَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 31–40 of 52

31

قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا بَيْعٌۭ فِيهِ وَلَا خِلَٰلٌ

ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) "கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்" என்று நீர் கூறுவீராக.

தூதரே!- நீர் நம்பிக்கையாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்களே! எவ்வித வியாபாரமோ, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விமோசனமளிக்கும் ஈடோ, ஒரு நண்பன் தன்னுடைய இன்னொரு நண்பனுக்கு பரிந்துரை செய்யும் உற்ற நட்போ இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னரே தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையாக்கப்பட்ட தர்மங்களையும் உபரியான தர்மங்களையும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் பொருட்டு வெளிப்படையாகவோ முஹஸ்துதியிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இரகசியமாகவோ வழங்குங்கள்.

32

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًۭا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَٰرَ

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.

அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். -மனிதர்களே!- உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் பொருட்டு வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் பல்வேறு வகையான பழங்களை வெளிப்படுத்துகிறான். அவன்தான் அவனுடைய ஏற்பாட்டின் மூலம் நீரில் செல்லக்கூடிய கப்பல்களையும் நீங்கள் நீர் அருந்துவதற்காகவும் உங்கள் கால்நடைகளுக்கு நீர்ப் புகட்டுவதற்காகவும் உங்கள் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதற்காகவும் ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.

33

وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.

அவனே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இரவையும் பகலையும் பின்தொடர்ந்துவரக்கூடியதாக உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். இரவை நீங்கள் உறங்குவதற்காகவும் ஓய்வெடுப்பதற்காகவும் பகலை உங்கள் செயல்பாட்டுக்காகவும் தொழிலுக்காகவும் அவன் ஆக்கித் தந்துள்ளான்.

34

وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا۟ نِعْمَتَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱلْإِنسَٰنَ لَظَلُومٌۭ كَفَّارٌۭ

(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.

நீங்கள் வேண்டிய, வேண்டாத அனைத்திலிருந்தும் அவன் உங்களுக்குத் தந்துள்ளான். அதன் அதிகரிப்பினால் அவனுடைய அருட்கொடைகளை எண்ணினால் அவற்றை எண்ணி முடிக்க நீங்கள் ஆற்றல் பெறமாட்டீர்கள். அவற்றுள் சில உதாரணங்கள்தான் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக மனிதன் தன்மீதே மிகவும் அநீதி இழைப்பவனாகவும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு அதிகமாக நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்ளக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

35

وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَٰذَا ٱلْبَلَدَ ءَامِنًۭا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ

நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

தூதரே!- இப்ராஹீம் தம் மகன் இஸ்மாயீலையும் அவரது தாய் ஹாஜரையும் மக்காவிலுள்ள பள்ளத்தாக்கில் குடியமர்த்திய போது கூறியதை நினைவுகூர்வீராக. அவர் கூறினார்: “இறைவா! என் குடும்பத்தினரைக் குடியமர்த்தும் இந்த -மக்கா- நகரத்தை பாதுகாப்பானதாக ஆக்குவாயாக. இங்கு இரத்தம் சிந்தப்படக் கூடாது. எவர் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. என்னையும் என் சந்ததியினரையும் சிலை வழிபாட்டிலிருந்து தூரமாக்குவாயாக.

36

رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

("என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்."

இறைவா! நிச்சயமாக சிலைகள் மக்களில் ஏராளமானோரை வழிகெடுத்து விட்டன. அவை அவர்களுக்காகப் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் எண்ணி அதனால் சோதனைக்குள்ளாகி அல்லாஹ் அல்லாத அவற்றையும் அவர்கள் வணங்கினார்கள். அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதிலும் அவனுக்குக் கட்டுப்படுவதிலும் மக்களில் என்னைப் பின்பற்றியவர் என்னைச் சார்ந்தவர்களில் ஒருவர் ஆவார். எனக்கு மாறுசெய்து, அல்லாஹ் ஒருவனையே வணங்குவதிலும், அவனுக்குக் கட்டுப்படுவதிலும் என்னைப் பின்பற்றாதவர் ஆவர், -இறைவா!- நிச்சயமாக நீ நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.

37

رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!"

எங்கள் இறைவா! நான் எனது சந்ததியினரில் சிலரை என் மகன் இஸ்மாயீல் மற்றும் அவருடைய பிள்ளைகள் பயிரோ தண்ணீரோ அற்ற புனிதமான உன் இல்லத்திற்கு அருகில் (மக்காவில்) உள்ள பள்ளத்தாக்கில் குடியமர்த்தியுள்ளேன். எம் இறைவா! அவர்கள் அங்கு தொழுகையை நிலைநாட்டவே புனித ஆலயத்துக்கு அருகாமையில் அவர்களைக் குடியிருத்தினேன். -இறைவா- மக்களின் உள்ளங்களை அவர்களின் பக்கமும் இந்த நகரத்தின் பக்கமும் பாசமுடையதாக ஆக்குவாயாக. அவர்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கனி வகைகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக.

38

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."

எங்கள் இறைவா! நாங்கள் இரகசியமாகச் செய்வதையும், வெளிப்படையாகச் செய்வதையும் நீ அறிவாய். வானத்திலோ பூமியிலோ எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இல்லை. மாறாக அனைத்தையும் அவன் அறிவான். நம்முடைய வறுமையும், தேவையும் அவனை விட்டு மறைவாக இல்லை.

39

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.

நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நற்குழந்தைகளை வழங்குமாறு கேட்ட என் பிரார்த்தனைக்கு அவனே பதிலளித்து, தள்ளாத வயதிலும் எனக்கு ஹாஜரின் மூலம் இஸ்மாயீலையும் சாராவின் மூலம் இஸ்ஹாக்கையும் எனக்கு வழங்கினான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கக் கூடியவன்.

40

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"

இறைவா! என்னையும் என் சந்ததியினரையும் சிறந்த முறையில் தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக ஆக்குவாயாக. எங்கள் இறைவா! என் பிரார்த்தனைக்குப் பதிலளிப்பாயாக. அதனை உன்னிடத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக ஆக்குவாயாக.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.