Muslim99Muslim99
← Tafsir library

14. Ibrahim

Abraham · Meccan · 52 ayahs

سُورَةُ إِبۡرَاهِيمَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 21–30 of 52

21

وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًۭا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًۭا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍۢ

அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.

மறுமை நாளில் படைப்புகள் அனைத்தும் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கம் வருவார்கள். தலைவர்களைப் பின்பற்றிய பலவீனர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: -தலைவர்களே- “நாங்கள் உங்களைப் பின்பற்றக்கூடியவர்களாக இருந்தோம். உங்களின் ஏவல்களை ஏற்றும் விலக்கல்களை விலகியும் நடந்தோம். உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்ற முடியுமா?” பின்பற்றப்பட்ட தலைவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருந்தால் நாங்கள் உங்களுக்கும் நேர்வழி காட்டியிருப்போம். நாம் அனைவரும் அவனுடைய வேதனையிலிருந்து தப்பியிருப்போம். ஆனால் நாமும் வழிகெட்டு. உங்களையும் வழிகெடுத்து விட்டோம். நாம் வேதனையை சகித்துக் கொண்டாலும் அல்லது பொறுமையடைந்தாலும் இரண்டுமே நமக்கு ஒன்றுதான். நாம் வேதனையிலிருந்து தப்ப முடியாது.”

22

وَقَالَ ٱلشَّيْطَٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று கூறுவான்.

சுவனவாசிகள் சுவனத்தில் நுழையும் போதும், நரகவாசிகள் நரகத்தில் நுழையும் போதும் இப்லீஸ் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளித்தான். தான் அளித்த வாக்குறுதியை அவன் நிறைவேற்றினான். நான் உங்களுக்குப் பொய்யான வாக்குறுதி அளித்தேன். நான் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றவில்லை. உலகில் உங்களை நிராகரிப்பின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் தள்ளுவதற்கு நான் உங்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. ஆனால் நிராகரிப்பின் பக்கம் நான் உங்களை அழைத்தேன்; பாவங்களை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டினேன். நீங்கள் விரைந்து என்னைப் பின்பற்றினீர்கள். எனவே உங்களது வழிகேட்டுக்கு என்னைப் பழிக்காதீர்கள். உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். நீங்கள்தாம் பழிப்பிற்குத் தகுதியானவர்கள். உங்களின் வேதனையை அகற்றுவதற்கு நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. என்னை விட்டு வேதனையை அகற்றுவதற்கு நீங்களும் எனக்கு உதவ முடியாது. நீங்கள் வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக என்னை வணங்கியதை நான் நிராகரித்து விட்டேன். -இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்திய, அவனை நிராகரித்த- அநியாயக்காரர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.

23

وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌ

இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது "ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!") என்பதாகும்.

அநியாயக்காரர்களுக்கு மாறாக நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள் சுவனங்களில் நுழைவிக்கப்படுவார்கள். அவற்றின் மாளிகைகள் மற்றும் மரங்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் தங்கள் இறைவனின் அனுமதியோடு என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறுவார்கள். வானவர்களும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவார்கள். அவர்களின் இறைவன் அவர்களுக்கு சலாம் கூறுவான்.

24

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا كَلِمَةًۭ طَيِّبَةًۭ كَشَجَرَةٍۢ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌۭ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ

(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.

தூதரே!- “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையின் வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அது பேரீச்சை மரமாகும். அது அதன் நல்ல வேர்களின் மூலமாக நீரை உறிஞ்சி அதன் தண்டு பூமியில் நிலையாக இருக்கிறது. அதன் கிளைகள் வானத்தின்பால் உயர்ந்து மழைத் துளிகளிலிருந்து நீரை உறிஞ்சுகிறது; நல்ல காற்றையும் சுவாசிக்கிறது.

25

تُؤْتِىٓ أُكُلَهَا كُلَّ حِينٍۭ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.

இந்த நல்ல மரம் தன் இறைவனின் கட்டளைப்படி எல்லா நேரங்களிலும் நல்ல பழத்தைத் தருகிறது. மக்கள் படிப்பினை பெறும் பொருட்டு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

26

وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍۢ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجْتُثَّتْ مِن فَوْقِ ٱلْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍۢ

(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை.

இணைவைப்பான தீய வார்த்தை வேரோடு பிடுங்கி எறியப்பட்ட தீய கள்ளிச் செடியைப் போன்றதாகும். அதற்கு பூமியில் எந்த உறுதியும் இல்லை. வானத்தின் பக்கம் உயர்ந்த கிளைகளும் இல்லை. அது இறந்து காற்றோடு அடித்துச் செல்லப்படுகிறது. எனவே நிராகரிப்பைத் தாங்கிய வார்த்தையின் முடிவு அழிவே. அவனது எந்த நல்லறமும் அல்லாஹ்விடம் செல்லாது.

27

يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْءَاخِرَةِ ۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَ ۚ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ

எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானனோ அதைச் செய்கின்றான்.

நிலையான ஏகத்துவ வார்த்தையை இவ்வுலகில் பூரணமாக நம்பிக்கை கொண்ட முஃமீன்களுக்கு அவர்கள் நம்பிக்கையுடன் மரணிக்கும் பொருட்டு உறுதியை வழங்குகிறான். அதேபோன்று மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கிய அநியாயக்காரர்களை, அவனை நிராகரிப்பவர்களை அவன் நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்து விடுகிறான். அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். தன் நீதியால் தான் நாடுபவர்களை வழிதவறச் செய்கிறான். தன் அருளால் தான் நாடுபவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். அவனை நிர்ப்பந்திக்கும் எவரும் இல்லை.

28

۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُوا۟ نِعْمَتَ ٱللَّهِ كُفْرًۭا وَأَحَلُّوا۟ قَوْمَهُمْ دَارَ ٱلْبَوَارِ

அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த குறைஷிகளை நீர் பார்க்கவில்லையா? ஹரமில் பாதுகாப்பு அளித்து, அவர்களிடையே முஹம்மத் என்ற தூதரை ஏற்படுத்தி அல்லாஹ் அவர்கள் மீது புரிந்து அருட்கொடைகளுக்குப் பகரமாக நபியவர்கள் கொண்டு வந்தததை மறுத்து அவனது அருள்களை நிராகரித்தார்கள். தங்கள் சமூகத்தில் நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியோரை அழிவில் தள்ளவிட்டார்கள்.

29

جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ ٱلْقَرَارُ

(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.

அந்த அழிவின் வீடு நரகமாகும். அதன் வெப்பத்தில் சுழன்றுகொண்டே அதில் அவர்கள் நுழைவார்கள். அது அவர்களின் தங்குமிடங்களில் மோசமான தங்குமிடமாகும்.

30

وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًۭا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ ۗ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, "இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்" என்று நீர் கூறிவிடும்.

இணைவைப்பாளர்கள் தாங்கள் வழிகெட்ட பிறகு தங்களைப் பின்பற்றுபவர்களையும் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “இவ்வுலக வாழ்வில் இச்சைகளினாலும் சந்தேகங்களைப் பரப்பியும் அனுபவித்துக் கொள்ளுங்கள். ஆனால் மறுமை நாளில் நீங்கள் நரகத்தின் பக்கமே திரும்ப வேண்டும். உங்களுக்கு அதைத் தவிர வேறு திரும்புமிடம் இல்லை.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.