أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ ۚ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ
பூமி (யில் அவர்களின் பிடி) யை அதன் எல்லையோரங்களிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி-கணக்குக் கேட்பதில் விரைவானவன்.
இஸ்லாத்தை பரவச் செய்து, முஸ்லிம்கள் அவற்றை வெற்றி கொள்வதன் மூலம் நிராகரிக்கும் நிலத்தின் பகுதிகளை குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதை இந்த நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் அடியார்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். எவராலும் அவனுடைய தீர்ப்பை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அவன் விசாரணை செய்வதில் விரைவானவன். முன்னோர்கள், பின்னோர்களை ஒரே நாளில் விசாரணை செய்து விடுவான்.