وَلَوْ أَنَّ قُرْءَانًۭا سُيِّرَتْ بِهِ ٱلْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ ٱلْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ ٱلْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ ٱلْأَمْرُ جَمِيعًا ۗ أَفَلَمْ يَا۟يْـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعًۭا ۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ تُصِيبُهُم بِمَا صَنَعُوا۟ قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًۭا مِّن دَارِهِمْ حَتَّىٰ يَأْتِىَ وَعْدُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ
நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
இறைவேதங்களில் ஏதேனும் ஒரு வேதத்தின் பண்புகளில், மலைகளை அதன் இடங்களிலிருந்து நகர்த்தும் அல்லது பூமியைப் பிளந்து ஆறுகளாகவும் ஊற்றுகளாவும் அதனை ஓடச் செய்யும் அல்லது மரணித்தவர்களின் மீது அதனை ஓதுவதனால் அவர்களுக்கு உயிர் வழங்கும் இறைவேதம் ஒன்று இருக்குமானால் அது உமக்கு இறக்கப்பட்ட இந்த அல்குர்ஆன்தான். ஏனெனில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தெளிவான அத்தாட்சியைக் கொண்டதாகும். அவர்கள் பயப்படக்கூடிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருந்தால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆயினும் அவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர். மாறாக அற்புதங்களையும் ஏனையவற்றையும் இறக்கும் முழு அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் நாடினால் சான்றுகளை இறக்காமலே மக்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்திடுவான் என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? ஆயினும் அல்லாஹ் அவ்வாறு நாடவில்லை. தொடரான வேதனை இறங்குவதற்கான அல்லாஹ்வின் வாக்குறுதி வரும் வரை அல்லாஹ்வை நிராகரித்தவர்களை, அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களைத் திடீரெனத் தாக்கும் கடும் வேதனை அவர்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும் அல்லது அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் எங்கேனும் ஆபத்து இறங்கிக் கொண்டேயிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்தவற்றுக்கான குறித்த காலம் வந்து விட்டால் அதனை நிறைவேற்றாமல் விட்டு விடுவதில்லை.