Muslim99Muslim99
← Tafsir library

13. Ar-Ra'd

The Thunder · Medinan · 43 ayahs

سُورَةُ الرَّعۡدِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 31–40 of 43

31

وَلَوْ أَنَّ قُرْءَانًۭا سُيِّرَتْ بِهِ ٱلْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ ٱلْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ ٱلْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ ٱلْأَمْرُ جَمِيعًا ۗ أَفَلَمْ يَا۟يْـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعًۭا ۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ تُصِيبُهُم بِمَا صَنَعُوا۟ قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًۭا مِّن دَارِهِمْ حَتَّىٰ يَأْتِىَ وَعْدُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ

நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.

இறைவேதங்களில் ஏதேனும் ஒரு வேதத்தின் பண்புகளில், மலைகளை அதன் இடங்களிலிருந்து நகர்த்தும் அல்லது பூமியைப் பிளந்து ஆறுகளாகவும் ஊற்றுகளாவும் அதனை ஓடச் செய்யும் அல்லது மரணித்தவர்களின் மீது அதனை ஓதுவதனால் அவர்களுக்கு உயிர் வழங்கும் இறைவேதம் ஒன்று இருக்குமானால் அது உமக்கு இறக்கப்பட்ட இந்த அல்குர்ஆன்தான். ஏனெனில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தெளிவான அத்தாட்சியைக் கொண்டதாகும். அவர்கள் பயப்படக்கூடிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருந்தால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆயினும் அவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர். மாறாக அற்புதங்களையும் ஏனையவற்றையும் இறக்கும் முழு அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் நாடினால் சான்றுகளை இறக்காமலே மக்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்திடுவான் என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? ஆயினும் அல்லாஹ் அவ்வாறு நாடவில்லை. தொடரான வேதனை இறங்குவதற்கான அல்லாஹ்வின் வாக்குறுதி வரும் வரை அல்லாஹ்வை நிராகரித்தவர்களை, அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவர்களைத் திடீரெனத் தாக்கும் கடும் வேதனை அவர்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும் அல்லது அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் எங்கேனும் ஆபத்து இறங்கிக் கொண்டேயிருக்கும். நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்தவற்றுக்கான குறித்த காலம் வந்து விட்டால் அதனை நிறைவேற்றாமல் விட்டு விடுவதில்லை.

32

وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍۢ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا۟ ثُمَّ أَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)

நீர், தனது சமூகத்தின் நிராகரிப்பும் பரிகாசத்திற்கும் உள்ளாகிய முதலாவது தூதர் அல்ல. -தூதரே!- உமக்கு முன்னிருந்த சமூகங்களும் தமது தூதர்களை பரிகாசம் செய்து நிராகரித்துள்ளார்கள். தூதர்களை நிராகரித்தவர்கள் நான் அவர்களை அழிக்க மாட்டேன் என்று எண்ணுமளவு அவர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். அவகாசத்தின் பின்னர் பல்வேறு வேதனைகளால் அவர்களைத் தண்டித்தேன். அவர்களுக்கான எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை நீர் பார்த்தீரா? அது கடுமையான வேதனையாக இருந்தது.

33

أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۗ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْ ۚ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَٰهِرٍۢ مِّنَ ٱلْقَوْلِ ۗ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍۢ

ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்; "அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?" என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.

அனைத்து படைப்பினங்களின் வாழ்வாதரத்தை பாதுகாப்பவனான, ஒவ்வொரு ஆன்மாவும் செய்யும் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குபவன் வணங்கப்படத் தகுதியானவனா? அல்லது வணக்கத்திற்குத் தகுதியற்ற இந்த சிலைகளா? நிராகரிப்பாளர்கள் அநியாயமாகவும் அபாண்டமாகவும் அவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வணங்கும் இணை தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள் அல்லது பூமியில் அல்லாஹ் அறியாத இணைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது உண்மையற்ற வெறும் வார்த்தைகளை அவனிடம் கூறுகிறீர்களா? மாறாக ஷைத்தான் நிராகரிப்பாளர்களின் தீய திட்டங்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். எனவே அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தார்கள். நேர்வழியை விட்டும் அவர்களைத் திருப்பி விட்டான். யாரை அல்லாஹ் நேரான பாதையை விட்டும் வழிதவறச் செய்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை.

34

لَّهُمْ عَذَابٌۭ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَشَقُّ ۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍۢ

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.

நம்பிக்கையாளர்களின் கரங்களினால் கொலை, கைது செய்யப்படுவதன் மூலம் இவ்வுலகில் அவர்களுக்கு தண்டனை உண்டு. அவர்களுக்காக காத்திருக்கும் மறுமையின் வேதனையோ உலக வேதனையை விட மிகக் கடுமையானது. ஏனெனில் அது கடுமையான முடிவடையாத நிரந்தரமான வேதனையாகும். மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அவர்களைப் பாதுகாக்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

35

۞ مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌۭ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَٰفِرِينَ ٱلنَّارُ

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கெண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் வாக்களித்த சுவனத்தின் தன்மையானது, அதன் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் பழங்கள் உலகத்தில் இருக்கும் பழங்களை போல் அல்லாமல் என்றும் முடிவடையாதது. அதன் நிழல்கள் நிலையானது, அகன்று விடாதது, குறையாதது. இந்த முடிவு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கே ஆகும். நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு நரகமேயாகும். அங்கு நிரந்தரமாக அவர்கள் நுழைவார்கள்.

36

وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ

எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

தூதரே!- நாம் தவ்ராத்தை வழங்கிய யூதர்களும் இன்ஜீலை வழங்கிய கிறிஸ்தவர்களும் உம்மீது இறக்கப்பட்டதைக் கொண்டு அது அவர்களுக்கு இறக்கப்பட்ட சிலவற்றுடன் ஒத்துப் போவதால் மகிழ்ச்சியடைகிறார்கள். யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் சிலர் அவர்களின் மன இச்சையோடு ஒத்துப் போகாத அல்லது திரிபுபடுத்தியாக அவர்களை வர்ணிக்கும் உமக்கு இறக்கப்பட்ட சிலவற்றை நிராகரிக்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் பக்கமே நான் அழைக்கின்றேன். வேறு யாரையும் நான் அழைக்க மாட்டேன். அவனிடமே நான் திரும்ப வேண்டும். இதைக் கொண்டுதான் தவ்ராத்தும் இன்ஜீலும் வந்தன.

37

وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ حُكْمًا عَرَبِيًّۭا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَمَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّۢ وَلَا وَاقٍۢ

(நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.

தூதரே!- முந்தைய வேதங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே நாம் இறக்கியது போன்று உம்மீதும் குர்ஆனை, சத்தியத்தை தெளிவுபடுத்தக்கூடியதாக அரபி மொழியில் இறக்கினோம். -தூதரே!- அல்லாஹ் உமக்குக் கற்றுக் கொடுத்த தெளிவான அறிவு உம்மிடம் வந்த பின்னரும் தமது மன இச்சைக்கு ஒத்துவராதவற்றை நீக்குமாறு வேதக்காரர்கள் பேரம் பேசுவதில் அவர்களின் மன இச்சையை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவர்களோ யாரும் இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

38

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًۭا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًۭا وَذُرِّيَّةًۭ ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍۢ كِتَابٌۭ

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.

தூதரே!- உமக்கு முன்னரும் நாம் மனிதர்களிலிருந்து பல தூதர்களை அனுப்பியுள்ளோம். தூதர்களில் நீர் ஒன்றும் புதுமையானவர் அல்ல. மற்ற மனிதர்களைப் போன்று அவர்களுக்கும் மனைவியரையும் பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம். மணமுடிக்காத, பிள்ளை பெறாத வானவர்களாக நாம் அவர்களை ஆக்கவில்லை. நீரும் மணமுடித்து, பிள்ளைகள் பெறும் இந்த மனிதத் தூதர்களில் ஒருவரே. பின்னர் எதற்காக நீர் அவ்வாறிருப்பதைப் பார்த்து இணைவைப்பாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்?! அல்லாஹ் அனுமதித்தாலேயன்றி எந்த தூதரும் தன் புறத்திலிருந்து சான்றினைக் கொண்டுவர மாட்டார். அல்லாஹ் விதித்த ஒவ்வொரு விஷயத்திற்கும் அது குறிக்கப்பட்ட ஓர் ஏடு உண்டு. மேலும் முந்தவோ பிந்தவோ செய்யாத ஒரு தவணையும் உண்டு.

39

يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَٰبِ

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.

அல்லாஹ் தான் நீக்குவதற்கு நாடிய நன்மையையோ, அல்லது தீமையையோ அல்லது பாக்கியத்தையோ அல்லது துர்பாக்கியத்தையோ, வேறு ஒன்றையோ நீக்கிவிடுகிறான். அவற்றில் தான் நாடியதை நிலைபெறச் செய்கிறான். அவனிடத்தில் லவ்ஹுல் மஹ்பூல் எனும் ஏடு இருக்கின்றது. அவை அனைத்தின் மூலம் அதுவே. அழித்தலோ அல்லது பதிவதோ அனைத்தும் அதிலுள்ளதற்கு ஒத்து வருபவையே.

40

وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ

(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.

நபியே!- உம்மை மரணிக்கச் செய்வதற்கு முன்னரே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அது எம்மைச் சார்ந்ததே. அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிட்டாலும் நாம் கட்டளையிட்டதை எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களுக்குக் கூலி அளிப்பதோ, கணக்கு தீர்ப்பதோ உம்மீது கடமையல்ல. அது நம்மீதுள்ள கடமையாகும்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.