Muslim99Muslim99
← Tafsir library

13. Ar-Ra'd

The Thunder · Medinan · 43 ayahs

سُورَةُ الرَّعۡدِ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 43

11

لَهُۥ مُعَقِّبَٰتٌۭ مِّنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ يَحْفَظُونَهُۥ مِنْ أَمْرِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوْمٍۢ سُوٓءًۭا فَلَا مَرَدَّ لَهُۥ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

ஒருவருக்குப் பின் ஒருவராக மனிதனிடம் வருகை தரும் வானவர்கள் இருக்கிறார்கள். சிலர் இரவிலும் சிலர் பகலிலும் வருகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு மனிதனை அவனுக்கு நிகழக் கூடாது என எழுதப்பட்டிருக்கும் விதிகளிலிருந்து பாதுகாக்கிறார்கள். மனிதனின் சொற்களையும் செயல்களையும் எழுதுகிறார்கள். ஒரு சமூகம் நன்றி மிக்க தமது நிலையை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அவர்களது நல்ல நிலையை அவர்கள் வெறுக்கும் நிலையாக மாற்ற மாட்டான். அவன் ஒரு சமூகத்தை அழிக்க நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. -மனிதர்களே!- உங்களைப் பீடித்திருக்கும் தீங்கினை அகற்றுவதற்கு நீங்கள் ஒதுங்க அவனைத் தவிர உங்களுக்கு வேறு பொறுப்பாளன் இல்லை.

12

هُوَ ٱلَّذِى يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًۭا وَطَمَعًۭا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ

அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.

மனிதர்களே!- அவனே உங்களுக்கு மின்னலைக் காட்டுகிறான். இடி முழக்கத்தால் அச்சத்தையும் மழையால் ஆர்வத்தையும் அதன் மூலம் அவன் உங்களுக்கு ஏற்படுத்துகிறான். அவனே அடர்த்தியான மழை நீர் மூலம் கனமான மேகங்களை உருவாக்குகிறான்.

13

وَيُسَبِّحُ ٱلرَّعْدُ بِحَمْدِهِۦ وَٱلْمَلَٰٓئِكَةُ مِنْ خِيفَتِهِۦ وَيُرْسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمْ يُجَٰدِلُونَ فِى ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلْمِحَالِ

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

இடிமுழக்கம் தன் இறைவனைப் புகழ்வதுடன் அவனது தூய்மையையும் பறைசாற்றுகிறது. வானவர்கள் அச்சத்தினாலும் கண்ணியத்தினாலும் தங்கள் இறைவனைப் புகழ்கிறார்கள். அவன் தான் நாடிய படைப்புகள் மீது பொசுக்கக்கூடிய இடியை அனுப்பி அவற்றை அழித்து விடுகிறான். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே என்பதில் தர்க்கம் புரிகிறார்கள். தனக்கு மாறாகச் செயல்பட்டவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன். அவன் நாடிய எதனையும் செய்தே தீருவான்.

14

لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦ ۚ وَمَا دُعَآءُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍۢ

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.

ஏகத்துவம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் எவருக்கும் பங்கு இல்லை. இணைவைப்பாளர்கள் அழைக்கும் சிலைகள் அவர்களை அழைப்போரின் எந்தக் கோரிக்கைக்கும் எந்தப் பதிலையும் அளிக்காது. இதற்கு உதாரணம், தாகித்த மனிதன் தண்ணீரை நோக்கி கையை நீட்டிக் கொண்டு அது தன் வாய்க்குள் சென்றதன் பின் பருக நினைப்பவனை போன்றதாகும். அது ஒருபோதும் அவனுடைய வாய்க்குள் செல்லாது. நிராகரிப்பாளர்கள் சிலைகளை அழைப்பது வீணானதாகவும் சத்தியத்தை விட்டுத் தூரமானதாகவும் இருக்கின்றது. ஏனெனில் நிச்சயமாக அவை பலனை கொண்டுவரவோ தீங்கினை அகற்றவோ சக்தி பெறாது.

15

وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًۭا وَكَرْهًۭا وَظِلَٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْءَاصَالِ ۩

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன் அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸங்தா செய்கின்றன).

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிந்து கட்டுப்படுகின்றனர். இதில் நம்பிக்கையாளன், நிராகரிப்பாளன் என அனைவரும் சமமானவர்களே. நம்பிக்கையாளன் விரும்பி அவனுக்குக் கட்டுப்படுகின்றான். நம்பிக்கையற்றவனோ நிர்ப்பந்தமாக அவனுக்குக் கட்டுப்படுகின்றான். ஆனால் அவனது இயல்போ விரும்பி அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறே அவனுக்குக் கூறுகிறது. நிழலுள்ள அனைத்துப் படைப்பினங்களின் நிழல்களும் பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன.

16

قُلْ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ ۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًۭا وَلَا ضَرًّۭا ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُ ۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَىْءٍۢ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّٰرُ

(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று.

தூதரே!- அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணங்கும் நிராகரிப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? அவையிரண்டையும் நிர்வகிப்பவன் யார்?” -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் அவையிரண்டையும் படைத்தான். அவனே அவையிரண்டையும் நிர்வகிக்கின்றான். நீங்கள் இதனை ஒத்துக் கொள்கிறீர்கள்.” -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிரவுள்ள இயலாத பாதுகாவலர்களையா நீங்கள் உங்களுக்கு எடுத்துக்கொண்டீர்கள்? அவை தமக்குத்தாமே பலனை கொண்டுவரவோ தம்மை விட்டும் எத்தீங்கையும் அகற்றவோ சக்தி பெறாது. அவ்வாறிருக்கும் போது எவ்வாறு அவை மற்றவர்களுக்குப் பயனளிக்கும்? -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அகப் பார்வையற்ற நிராகரிப்பாளனும் பார்வையுடைய நேர்வழி பெற்ற நம்பிக்கையாளனும் சமமாவார்களா? அல்லது நிராகரிப்பு என்னும் இருள்களும் ஈமான் எனும் ஒளியும் சமமாக முடியுமா? அல்லது தமது இணை தெய்வங்களின் படைப்புடன் அல்லாஹ்வின் படைப்பும் கலந்து குழம்பி விடும் அளவுக்கு அல்லாஹ்வைப் போன்று படைக்கும் இணைகளை அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தியுள்ளனரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன்; படைப்பில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை; அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்; அனைவரையும் மிகைத்தவன்.

17

أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَسَالَتْ أَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَٱحْتَمَلَ ٱلسَّيْلُ زَبَدًۭا رَّابِيًۭا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِى ٱلنَّارِ ٱبْتِغَآءَ حِلْيَةٍ أَوْ مَتَٰعٍۢ زَبَدٌۭ مِّثْلُهُۥ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْحَقَّ وَٱلْبَٰطِلَ ۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءًۭ ۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمْكُثُ فِى ٱلْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ

அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான்.

அசத்தியத்தின் அழிவுக்கும் சத்தியம் நிலைப்பதற்கும் உதாரணமாக வானத்திலிருந்து பொழிந்த மழையை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதன் மூலம் ஓடைகள் சிறிய பெரிய அதன் அளவுக்கேற்ப நிரம்பி வழிகின்றன. வெள்ளம் மேலெழும் நுரைகளை சுமந்து செல்கிறது. மேலும், உருக்கி மனிதர்கள் அலங்காரமாகப் பயன்படுத்தும் நோக்கில் அவர்கள் நெருப்பிலிடும் பெறுமதியான கனிமங்களையும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். இரண்டிலும் நுரை மிதக்கின்றது. இவ்விரண்டு உதாரணங்கள் மூலமும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அசத்தியம் மேலேழும் நுரையையும், கனிமங்களை உருக்கும் போது கழிந்து விடும் துருவையும் போன்றது. சத்தியம் தூய்மையான நீரைப் போன்றது. அது பருகப்படுகிறது. பழங்கள், புற்பூண்டுகள் ஆகியவற்றை முளைப்பிக்கிறது. மேலும் சத்தியம், உருக்கப்பட்ட பிறகு மீதமிருக்கும் மக்கள் பயனடையும் கனிமத்தைப் போன்றதாகும். இந்த இரண்டு உதாரணங்களைக் கூறியது போன்று அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாக வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான்.

18

لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ ۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمِهَادُ

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகவும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.

தன்னை ஏகத்துவப்படுத்துமாறும் தனக்குக் கட்டுப்படுமாறும் தமது இறைவன் அழைத்ததை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு சுவனம் என்னும் அழகிய கூலி இருக்கின்றது. அவனை ஓருமைப்படுத்தி அவனுக்குக் கட்டுப்படுமாறு விடுத்த அவனது அழைப்புக்குப் பதிலளிக்காத நிராகரிப்பாளர்களுக்கு பூமி நிறைய செல்வங்கள் இருந்து அதேபோன்று மேலதிகமாகவும் இருந்தாலும் அவர்கள் வேதனையிலிருந்து தப்பிக்க அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவனுடைய அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள் அவர்களின் தீய செயல்களுக்கு முழுமையாக விசாரணை செய்யப்படுவார்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்களின் விரிப்பும் தங்குமிடமுமான நரகம் மிகவும் மோசமானது.

19

۞ أَفَمَن يَعْلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰٓ ۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ

உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையன அறிகிறவர் குரடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.

தூதரே!- உமது இறைவனிடமிருந்து அல்லாஹ் உம்மீது இறக்கியது சந்தேகமற்ற சத்தியமாகும் என்பதை அறிந்த அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட நம்பிக்கையாளனும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத நிராகரிப்பாளனான குருடனும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக ஆரோக்கியமான சிந்தனைகள் உடையோரே இதன் மூலம் அறிவுரை பெற்றுக் கொள்வார்கள், படிப்பினை பெற்றுக்கொள்வார்கள்.

20

ٱلَّذِينَ يُوفُونَ بِعَهْدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلْمِيثَٰقَ

அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியையும் அவனுடைய அடியார்களிடம் செய்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள். அல்லாஹ்விடமோ மற்றவர்களிடமோ செய்த ஒப்பந்தங்களை அவர்கள் முறிப்பதில்லை.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.