Muslim99Muslim99
← Tafsir library

12. Yusuf

Joseph · Meccan · 111 ayahs

سُورَةُ يُوسُفَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 11–20 of 111

11

قَالُوا۟ يَٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَٰصِحُونَ

(பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.

அவரை அகற்றும் விஷயத்தில் அவர்கள் உடன்பட்ட போது தங்களின் தந்தை யஃகூபிடம் வந்து கூறினார்கள்: “எங்களின் தந்தையே! உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் யூஸுஃபின் விஷயத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை? நாங்கள் அவர்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள்; அவரை தீங்கிலிருந்து பாதுகாக்கக் கூடியவர்கள்; நிச்சயமாக அவர் உங்களிடம் பாதுகாப்பாக திரும்பி வரும் வரை நாம் அவரைக் காத்து கவனித்து அவருக்கு விசுவாசமாக இருப்போம். எனவே எங்களுடன் அவரை அனுப்புவதற்கு உங்களுக்கு என்ன தடை உள்ளது?

12

أَرْسِلْهُ مَعَنَا غَدًۭا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ

"நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்று கூறினார்கள்.

நாளை அவரை எங்களுடன் அழைத்துச் செல்வதற்கு அனுமதி அளியுங்கள். அவர் எங்களுடன் உண்டு மகிழட்டும், விளையாடட்டும். அவருக்கு எந்தவொரு தீங்கு நிகழ்வதை விட்டும் நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாப்பவர்களாகவே உள்ளோம்.

13

قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَٰفِلُونَ

(அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.

யஃகூப் தம் பிள்ளைகளிடம் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. ஏனெனில் என்னால் அவரைப் பிரிந்து இருக்க முடியாது. நீங்கள் மெய்மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.”

14

قَالُوا۟ لَئِنْ أَكَلَهُ ٱلذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّآ إِذًۭا لَّخَٰسِرُونَ

(அதற்கு) அவர்கள், "நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்" என்று கூறினார்கள்.

அவர்கள் தம் தந்தையிடம் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருந்தும் ஓநாய் அவரைத் தின்றுவிட்டால் எங்களிடையே எந்த நன்மையும் இல்லை. அவரை ஓநாயிலிருந்து காப்பாற்றவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவோம்.”

15

فَلَمَّا ذَهَبُوا۟ بِهِۦ وَأَجْمَعُوٓا۟ أَن يَجْعَلُوهُ فِى غَيَٰبَتِ ٱلْجُبِّ ۚ وَأَوْحَيْنَآ إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ

(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, "நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.

யஃகூப் யூஸுஃபை அவர்களுடன் அனுப்பினார்: “அவர்கள் அவரை தூரமாக அழைத்துச் சென்ற போது அவரை ஒரு பாழுங்கிணற்றில் போட்டுவிட உறுதிகொண்டார்கள். நாம் அந்த நிலையில் யூஸுஃபிற்கு வஹி அறிவித்தோம்: “அவர்களின் இந்த செயலை நீர் அவர்களுக்கு அறிவிப்பீர். அப்போது அவர்கள் உம்மைப்பற்றி உணர்ந்திருக்க மாட்டார்கள்.

16

وَجَآءُوٓ أَبَاهُمْ عِشَآءًۭ يَبْكُونَ

இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.

யூஸுஃபின் சகோதரர்கள் தமது சூழ்ச்சியை மறைக்க தம்தந்தையிடம் இரவு வேளையில் அழுதவாறு நடித்தவர்களாக வந்தார்கள்.

17

قَالُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئْبُ ۖ وَمَآ أَنتَ بِمُؤْمِنٍۢ لَّنَا وَلَوْ كُنَّا صَٰدِقِينَ

"எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.

அவர்கள் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! நாம் அம்பெய்தும் ஓடியும் விளையாடிக் கொண்டிருந்தோம். எங்களின் ஆடைகள் மற்றும் பொருள்களைப் பாதுகாப்பதற்காக யூஸுஃபை அவற்றிற்கு அருகில் விட்டு விட்டோம். ஓநாய் அவரைத் தின்று விட்டது. நாங்கள் இப்போது உங்களிடத்தில் உண்மையைக் கூறினாலும் நீங்கள் எங்களை நம்பப்போவதில்லை.”

18

وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍۢ كَذِبٍۢ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌۭ ۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ

(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; "இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்" என்று கூறினார்.

தந்திரம் செய்து தங்களின் செய்தியை உறுதிப்படுத்தினார்கள். ஓநாய் தின்றதன் அடையாளம் என்று வேறு இரத்தத்தில் தேய்த்து எடுக்கப்பட்ட யூஸுஃபின் சட்டையைக் கொண்டு வந்தார்கள். கிழியாத சட்டையைக் கண்ட யஃகூப் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக உங்களின் மனம் நீங்கள் செய்த தீய காரியத்தை உங்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளது. நான் பதற மாட்டேன். அழகிய பொறுமையை மேற்கொள்வேன். யூஸுஃபைக்குறித்து நீங்கள் கூறும் விஷயத்திற்கு நான் அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன்.

19

وَجَآءَتْ سَيَّارَةٌۭ فَأَرْسَلُوا۟ وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُۥ ۖ قَالَ يَٰبُشْرَىٰ هَٰذَا غُلَٰمٌۭ ۚ وَأَسَرُّوهُ بِضَٰعَةًۭ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَعْمَلُونَ

பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். "நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!" என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

கடந்து செல்லக்கூடிய ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீரைத் தேடி ஒருவரை அனுப்பினார்கள். அவர் தம் வாளியைக் கிணற்றில் போட்டார். யூஸுஃப் அந்த கயிற்றைப் பிடித்துத் தொங்கினார். வாளியைப் போட்டவர் யூஸுஃபைக் கண்ட போது மகிழ்ச்சியில் கூறினார்: “நற்செய்தி! இதோ ஒரு சிறுவன்.” தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் அவரை தங்களின் வியாபாரப் பொருளாகக் கருதி மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டார்கள். அவர்கள் யூஸுஃபை அற்பமாகக் கருதி விற்றுவிடுவார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.

20

وَشَرَوْهُ بِثَمَنٍۭ بَخْسٍۢ دَرَٰهِمَ مَعْدُودَةٍۢ وَكَانُوا۟ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ

(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.

தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் எகிப்தில் யூஸுஃபை அற்ப விலைக்கு விற்றுவிட்டார்கள். அவர்கள் விரைவாக அவரை விட்டு விடுபட வேண்டும் என்ற எண்ணத்தினால் அவரின் விஷயத்தில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். அவரைப் பார்த்தால் அடிமை போன்று இல்லை என்பதை புரிந்துகொண்டு, அவருடைய குடும்பத்தினர் வந்துவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். இதனால்தான் அவர் அவர்களுடன் நீண்ட காலம் தங்கியிருக்கவில்லை.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.