Muslim99Muslim99
← Tafsir library

12. Yusuf

Joseph · Meccan · 111 ayahs

سُورَةُ يُوسُفَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 81–90 of 111

81

ٱرْجِعُوٓا۟ إِلَىٰٓ أَبِيكُمْ فَقُولُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَآ إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَٰفِظِينَ

ஆகவே, "நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, 'எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்.;

மூத்த சகோதரர் கூறினார்: “உங்களின் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்: “உங்களின் மகன் திருடிவிட்டான். அதற்குத் தண்டனையாக எகிப்தின் அரசன் அவரை அடிமையாக்கி விட்டான். அவரது பொதியில் இருந்து எடுப்பதை நாங்கள் கண்ணால் கண்டு அறிந்ததைத்தான் கூறுகிறோம். அவர் திருடுவார் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை, அவ்வாறு அறிந்திருந்தால் அவரைத் திரும்ப அழைத்து வருவோம் என்று உங்களிடம் வாக்குறுதி அளித்திருக்க மாட்டோம்.”

82

وَسْـَٔلِ ٱلْقَرْيَةَ ٱلَّتِى كُنَّا فِيهَا وَٱلْعِيرَ ٱلَّتِىٓ أَقْبَلْنَا فِيهَا ۖ وَإِنَّا لَصَٰدِقُونَ

நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்' (என்றும் சொல்லுங்கள்" என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).

எங்களின் தந்தையே!- நாங்கள் உண்மைதான் கூறுகிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக நாம் இருந்த எகிப்து மக்களிடம் கேளுங்கள். எங்களுடன் வந்த பயணக் கூட்டத்தினரிடமும் கேளுங்கள். நாங்கள் கூறியதையே அவர்களும் கூறுவார்கள். அவர் திருடியதாக நாங்கள் கூறுவதில் நாங்கள் உண்மையாளர்களே.

83

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌ ۖ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ

(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) "இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “அவர் திருடிவிட்டார் என்று நீங்கள் கூறுவது உண்மையல்ல. யூஸுஃபின் விஷயத்தில் சூழ்ச்சி செய்ததைப் போலவே இவரின் விஷயத்திலும் சூழ்ச்சி செய்வதை உங்களின் மனம் உங்களுக்கு அழகாக்கிக் காட்டி விட்டது. நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேன். அல்லாஹ்விடமே என் கவலைகளை முறையிடுவேன். யூஸுஃப், அவருடைய சகோதரன் மற்றும் மூத்த சகோதரன் என அவர்கள் அனைவரையும் அவன் என்னிடம் கொண்டுவரக்கூடும். அவன் என் நிலையை நன்கறிந்தவன். எனது விடயத்தில் அவன் செய்யும் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.

84

وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌۭ

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி "யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

அவர் அவர்களைப் புறக்கணித்து தூரமாகிச் சென்று, கூறினார்: “அந்தோ! யூஸுபின் மீது எனது கவலை எவ்வளவு கடுமையானது. அவர் அதிகமாக அழுததனால் அவர் கண்களின் கருவிழி வெண்மையாகி விட்டது. அவர் துக்கத்தாலும் கவலையாலும் நிரம்பியிருந்தார். மக்களை விட்டும் தம் கவலையை மறைத்துக் கொண்டிருந்தார்.

85

قَالُوا۟ تَٱللَّهِ تَفْتَؤُا۟ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ ٱلْهَٰلِكِينَ

(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.

யூஸுஃபின் சகோதரர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: -“எங்கள் தந்தையே!- அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களின் நோய் கடினமாகும் வரை அல்லது உண்மையாக நீர் அழிந்து விடும் வரை நீங்கள் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.

86

قَالَ إِنَّمَآ أَشْكُوا۟ بَثِّى وَحُزْنِىٓ إِلَى ٱللَّهِ وَأَعْلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

அதற்கவர், "என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் கவலையையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகின்றேன். நீங்கள் அறியாத அல்லாஹ்வின் அருளையும் உபகாரத்தையும் நிர்ப்பந்தத்தில் உள்ளவனுக்கு பதிலளிப்பதையும் துன்பத்தில் அகப்பட்டவருக்கு கூலி வழங்குவதையும் நான் அறிவேன்.

87

يَٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَٰفِرُونَ

"என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்" என்றும் கூறினார்.

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் பற்றிய செய்தியை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் தன் அடியார்களின் துன்பத்தைப் போக்குவான் என்பதில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிராகரித்த மக்கள் மட்டுமே அல்லாஹ் துன்பங்களைப் போக்கி விடுதலையளிப்பான் என்பதில் நம்பிக்கை இழப்பார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையை, அவன் தன் அடியார்களுக்கு வழங்கும் மறைவான அருட்கொடைகளை அறிய மாட்டார்கள்.

88

فَلَمَّا دَخَلُوا۟ عَلَيْهِ قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا ٱلضُّرُّ وَجِئْنَا بِبِضَٰعَةٍۢ مُّزْجَىٰةٍۢ فَأَوْفِ لَنَا ٱلْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَآ ۖ إِنَّ ٱللَّهَ يَجْزِى ٱلْمُتَصَدِّقِينَ

அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; "அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறேன்" என்று கூறினார்கள்.

தமது தந்தையின் கட்டளையின் படி அவர்கள் செயற்பட்டு, யூஸுஃபையும் அவரது சகோதரரரையும் தேடிச் சென்றனர். அவர்கள் யூஸுஃபிடம் வந்த போது கூறினார்கள்: “வறுமையும் கஷ்டமும் எங்களைப் பாதித்துள்ளது. நாங்கள் அற்ப பொருளையே கொண்டுவந்துள்ளோம். இதற்கு முன்னர் எங்களுக்கு நிறைவாக தானியங்கள் தந்தவாறு இப்பொழுதும் நிறைவாக தானியங்கள் தாருங்கள். அதிகப்படியாக தர்மமும் செய்யுங்கள். அல்லது எங்களின் அற்ப பொருள்களைக் கண்டுகொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்யக்கூடியவர்களுக்கு அழகிய முறையில் கூலி வழங்குகின்றான்.

89

قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنتُمْ جَٰهِلُونَ

(அதற்கு அவர்?) "நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று வினவினார்.

அவர்களின் பேச்சைக் கேட்ட யூஸுஃபின் உள்ளம் அவர்கள் மீது கொண்ட கருணையால் உருகிவிட்டது. தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் கேட்டார்: “யூஸுஃபுடனும் அவருடைய சகோதரருடனும் நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீர்கள் என்பதை அறிந்தேயுள்ளீர்கள். அப்போது நீங்கள் செய்த செயலின் விளைவைக் குறித்து அறியாதவர்களாக இருந்தீர்கள்.”

90

قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِى ۖ قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ ۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

(அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்ததைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்" என்று கூறினார்.

அவர்கள் திடுக்கிட்டார்கள். “நீர்தான் யூஸுஃபா” என்று கேட்டார்கள். யூஸுஃப் அவர்களிடம் கூறினார்: “ஆம். நான்தான் யூஸுஃப். என்னுடன் இருக்கும் இவர் என் சொந்த சகோதரர். நாங்கள் இருந்த நிலையிலிருந்து எங்களை விடுவித்து, எங்களின் அந்தஸ்தை உயர்த்தி அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக அவருடைய செயல் நன்மையான செயலாகும். நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்காக அதனைப் பாதுகாக்கிறான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.