قَالُوا۟ سَنُرَٰوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ
"அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்" என்று கூறினார்கள்.
அவருடைய சகோதரர்கள் கூறினார்கள்: “நாங்கள் எங்கள் தந்தையிடம் வேண்டுவோம். அவரை அழைத்து வருவதற்கு முழு முயற்சி செய்வோம். நீங்கள் இட்ட கட்டளையை நிச்சயம் நாங்கள் எவ்வித குறையுமின்றி செய்பவர்களே.”