Muslim99Muslim99
← Tafsir library

12. Yusuf

Joseph · Meccan · 111 ayahs

سُورَةُ يُوسُفَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 111

51

قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفْسِهِۦ ۚ قُلْنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِن سُوٓءٍۢ ۚ قَالَتِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ ٱلْـَٰٔنَ حَصْحَصَ ٱلْحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ

(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸீஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?" என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், "அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை" என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, "இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சமயாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்" என்று கூறினாள்.

அரசன் அந்தப் பெண்களைப் பார்த்துக் கூறினார் "தந்திரமாக உங்களுடன் தவறான முறையில் நடப்பதற்குத் தந்திரமாக நீங்கள் யூஸுபை அழைத்த விவகாரம் என்ன?' அதற்கு அப்பெண்கள் பதிலளித்தனர்; யூஸுப் சந்தேகத்திற்குள்ளாவதை விட்டும் தூய்மையானவர். அவர்மீது எக்குற்றமும் இல்லை''. அப்போது உடனே தான் செய்ததை ஏற்றுக்கொண்டு அஸீஸின் மனைவி கூறினாள்: இப்போது உண்மை வெளிவந்துவிட்டது நான்தான் அவரை தவறுசெய்யத் தூண்டினேன் அவரல்ல. அவரின் மீது நான் சுமத்திய அவதூறை விட்டும் தான் தூய்மையானவர் என்ற தனது வாதத்தில் அவர் உண்மையானவர்தான்.

52

ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّى لَمْ أَخُنْهُ بِٱلْغَيْبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى كَيْدَ ٱلْخَآئِنِينَ

இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; "நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரொகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரொகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.

மன்னனின் மனைவி கூறினாள்: “நான்தான் யூஸுஃபை வழிகெடுக்க முயன்றேன் அவர் உண்மையாளரே என்பதை நான் ஒத்துக்கொண்டது, அவர் இல்லாத போது எதையும் நான் அவர் மீது இட்டுக்கட்டிக் கூறவில்லையென அவர் அறிந்துகொள்வதற்கேயாகும். அல்லாஹ் பொய் கூறுபவர்களுக்கு, சூழ்ச்சி செய்பவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான் என்பது நடந்தவற்றிலிருந்து எனக்குப் புரிந்துவிட்டது.”

53

۞ وَمَآ أُبَرِّئُ نَفْسِىٓ ۚ إِنَّ ٱلنَّفْسَ لَأَمَّارَةٌۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّىٓ ۚ إِنَّ رَبِّى غَفُورٌۭ رَّحِيمٌۭ

"அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான்" (என்றுங் கூறினார்).

அரசரின் மனைவி தொடர்ந்து கூறினாள்: “நான் என் மனதில் தீய எண்ணம் கொள்ளவில்லை என்று கூறமாட்டேன். இதன் மூலம் என்னைப் பரிசுத்தப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஏனெனில் மனித மனம் தான் விரும்புவற்றின் பால் சாய்வதனாலும் அதனைத் தடுத்துக் கொள்வது சிரமம் என்பதாலும் தீயவற்றை அதிகமாக ஏவுதல் அதன் இயல்பாகும். தீயவற்றை ஏவுவதை விட்டும் அதனைப் பாதுகாத்து அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.

54

وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦٓ أَسْتَخْلِصْهُ لِنَفْسِى ۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌۭ

இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.

யூஸுஃப் நிரபராதி, அறிவாளி என்பது தெளிவாகி அதனை அறிந்துகொண்ட பின்னர் அரசர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை அழைத்து வாருங்கள். அவரை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்.” அவர் அழைத்து வரப்பட்டார். அரசர் அவரிடம் பேசிய போது அவருடைய அறிவையும் ஞானத்தையும் அறிந்து கொண்டார். அவரிடம் கூறினார்: -“யூஸுஃபே!- நிச்சயமாக இன்றைய தினம் நீர் எங்களிடம் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் பதவியுடையவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”

55

قَالَ ٱجْعَلْنِى عَلَىٰ خَزَآئِنِ ٱلْأَرْضِ ۖ إِنِّى حَفِيظٌ عَلِيمٌۭ

(யூஸுஃப்) கூறினார்; "(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்."

யூஸுஃப் அரசரிடம் கூறினார்: “எகிப்து நாட்டிலுள்ள பொக்கிஷங்களுக்கும் உணவுகளுக்கும் என்னைப் பொறுப்பாளராக நியமியுங்கள். நிச்சயமாக நான் நம்பிக்கையான பாதுகாப்பாளன். பொறுப்பேற்றுள்ள விஷயத்தைப் பற்றி நன்கறிந்தவனாகவும் இருக்கின்றேன்.

56

وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَآءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَآءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

நாம் யூஸுஃபை குற்றமற்றவர் என நிரூபித்து அவரை சிறையிலிருந்து விடுவித்து அவர் மீது அருள்புரிந்ததைப் போன்று எகிப்தில் அவருக்கு இடமளித்தும் அவர் மீது அருள்புரிந்தோம். அவர் தாம் நாடிய இடத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இந்த உலகில் நாம் விரும்பும் அடியார்களுக்கு நம் அருளை வழங்குகின்றோம். நன்மை செய்வோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்குரிய கூலியை குறைவின்றி நிறைவாக நாம் அவர்களுக்கு வழங்கி விடுவோம்.

57

وَلَأَجْرُ ٱلْءَاخِرَةِ خَيْرٌۭ لِّلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ

மேலும், பயபக்தியுடையவர்களாக முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் மறுமையில் தயார்படுத்தி வைத்துள்ள நன்மையானது இவ்வுலக நன்மைகளைவிடச் சிறந்ததாகும்.

58

وَجَآءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا۟ عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُۥ مُنكِرُونَ

(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,

யூஸுஃபின் சகோதரர்கள் தங்களின் பொருள்களுடன் எகிப்து நாட்டிற்கு வந்து அவரிடம் வந்தார்கள். அவர்கள் தமது சகோதரர்கள் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கடந்து விட்டதனாலும் அவருடைய உருவத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் அவர் தமது சகோதரர் என்பதை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவரைக் கிணற்றில் அவர்கள் போட்ட போது அவர் சிறுவராக இருந்தார்.

59

وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ قَالَ ٱئْتُونِى بِأَخٍۢ لَّكُم مِّنْ أَبِيكُمْ ۚ أَلَا تَرَوْنَ أَنِّىٓ أُوفِى ٱلْكَيْلَ وَأَنَا۠ خَيْرُ ٱلْمُنزِلِينَ

(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) "உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் "சிறந்தவன்" என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

யூஸுஃப், அவர்கள் வேண்டிய உணவுப் பொருளையும் கட்டுச்சாதனத்தையும் அவர்களுக்கு அளித்த போது, தங்களுக்கு தந்தை வழிச்சகோதரன் ஒருவர் உண்டு, அவரைத் தமது தந்தையிடம் விட்டு வந்தள்ளதாக அவர்கள் அவரிடம் தெரிவித்ததும் அவர் அவர்களிடம் கூறினார்: “உங்களின் தந்தைவழிச் சகோதரனையும் என்னிடம் அழைத்து வாருங்கள். ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பொருள்களை அதிகப்படுத்தி தருகின்றேன். நான் உங்களுக்கு அளவைக் குறைக்காமல் அதிகப்படுத்தி தருகின்றேன், நான் மிகச் சிறந்த முறையில் விருந்தளிப்பவன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?.

60

فَإِن لَّمْ تَأْتُونِى بِهِۦ فَلَا كَيْلَ لَكُمْ عِندِى وَلَا تَقْرَبُونِ

"ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது" என்று கூறினார்.

நீங்கள் அவரை அழைத்து வரவில்லையென்றால் உங்களுக்கு தந்தைவழிச் சகோதரன் இருப்பதாக நீங்கள் கூறியது பொய்யாகி விடும். எனவே உங்களுக்கு ஒருபோதும் உணவுதர மாட்டேன். நீங்கள் எனது ஊரை நெருங்கவும் வேண்டாம்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.