Muslim99Muslim99
← Tafsir library

12. Yusuf

Joseph · Meccan · 111 ayahs

سُورَةُ يُوسُفَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 41–50 of 111

41

يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسْقِى رَبَّهُۥ خَمْرًۭا ۖ وَأَمَّا ٱلْءَاخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ ٱلطَّيْرُ مِن رَّأْسِهِۦ ۚ قُضِىَ ٱلْأَمْرُ ٱلَّذِى فِيهِ تَسْتَفْتِيَانِ

"சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்).

சிறையில் இருக்கும் எனது இரு தோழர்களே! மதுபானம் தயாரிக்க திராட்சை ரசம் பிழிவதாக கனவு கண்டவர் சிறையிலிருந்து விடுபட்டு தம் பணிக்குத் திரும்பி, அரசனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். தம் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு, அதை பறவைகள் கொத்தித் தின்பதாக கனவு கண்டவர் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்படுவார். அவர் தலை மாமிசத்தை பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் தீர்ப்புக் கூறுமாறு கேட்ட விடயம் தீர்மானிக்கப்பட்டு முடிந்து விட்டது. சந்தேகமின்றி இது நிகழ்ந்தே தீரும்.

42

وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍۢ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَٰنُ ذِكْرَ رَبِّهِۦ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ

அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், "என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!" என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதவையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியாவரானார்.

இருவரில் விடுதலையடைவார் என்று எண்ணியவரிடம் -அரசனுக்கு மது ஊற்றிக்கொடுப்பவர்- யூஸுஃப் கூறினார்: “அரசனிடம் என்னைப் பற்றி எடுத்துக் கூறுவீராக. அதனால் அவர் சிறையிலிருந்து என்னை விடுவிக்கலாம். அரசனிடம் யூஸுஃபைக் குறித்துக் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான். எனவே அதன் பின்னர் யூஸுஃப் பல வருடங்கள் சிறையில் கழித்தார்.

43

وَقَالَ ٱلْمَلِكُ إِنِّىٓ أَرَىٰ سَبْعَ بَقَرَٰتٍۢ سِمَانٍۢ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌۭ وَسَبْعَ سُنۢبُلَٰتٍ خُضْرٍۢ وَأُخَرَ يَابِسَٰتٍۢ ۖ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ أَفْتُونِى فِى رُءْيَٰىَ إِن كُنتُمْ لِلرُّءْيَا تَعْبُرُونَ

நான். ஏழு கொழுத்த பசக்களை, ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும்; ஏழு பசமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்" என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.

அரசன் கூறினான்: “நான் கனவில் ஏழு கொழுத்த பசுமாடுகளை ஏழு மெலிந்த பசுமாடுகள் தின்றுகொண்டிருப்பதையும் ஏழு பசுமையான கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் கண்டேன். தலைவர்களே, கண்ணியவான்களே! நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் அறிந்தவர்களாக இருந்தால் நான் கண்ட இந்த கனவிற்கு விளக்கம் அளியுங்கள்.”

44

قَالُوٓا۟ أَضْغَٰثُ أَحْلَٰمٍۢ ۖ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ ٱلْأَحْلَٰمِ بِعَٰلِمِينَ

"(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்" என்று கூறினார்கள்.

அவர்கள் கூறினார்கள்: “நீர் கண்ட கனவு குழப்பமான கனவாகும். இவ்வகையான கனவுகளுக்கு எந்த விளக்கமும் இல்லை. நாங்கள் குழப்பமான கனவுகளுக்கு விளக்கம் அறிந்தவர்கள் அல்ல.”

45

وَقَالَ ٱلَّذِى نَجَا مِنْهُمَا وَٱدَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأْوِيلِهِۦ فَأَرْسِلُونِ

அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து "இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று சொன்னார்.

சிறையில் இருந்த இருவரில் விடுதலையடைந்த மது ஊற்றிக் கொடுப்பவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு யூஸுஃபை, கனவுக்கு விளக்கம் கூறும் அவரது அறிவையும் நினைவு கூர்ந்தவராக கூறினார்: “அரசர் கண்ட கனவின் விளக்கத்தை அதனை அறிந்தவரிடம் கேட்டு நான் உங்களுக்கு அறிவிப்பேன். -அரசரே!- நீங்கள் கண்ட கனவின் விளக்கத்தைக் கூற என்னை யூஸுஃபிடம் அனுப்புங்கள்.”

46

يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفْتِنَا فِى سَبْعِ بَقَرَٰتٍۢ سِمَانٍۢ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌۭ وَسَبْعِ سُنۢبُلَٰتٍ خُضْرٍۢ وَأُخَرَ يَابِسَٰتٍۢ لَّعَلِّىٓ أَرْجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ

(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், "யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசக்களை, ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது" (என்று கூறினார்).

சிறையிலிருந்து வெளியேறிய அவர் யூஸுஃபிடம் வந்த பிறகு அவரிடம் கேட்டார்: “யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுமாடுகளை ஏழு மெலிந்த பசுமாடுகள் தின்று கொண்டிருப்பதையும் ஏழு பசுமையான கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் கனவில் கண்டவருக்கான விளக்கத்தை எமக்குக் கூறுங்கள். நான் அரசரிடமும் அவரோடு இருப்போரிடமும் திரும்பிச் செல்வேன். அரசனின் கனவின் விளக்கத்தை அவர்கள் புரிந்து உமது சிறப்பையும் மகிமையையும் அறிந்துகொள்வார்கள்.”

47

قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًۭا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِى سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلًۭا مِّمَّا تَأْكُلُونَ

"நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.

யூஸுஃப் அந்த கனவிற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார்: “நீங்கள் தொடர்ந்து ஏழு வருடங்கள் நன்கு பயிரிடுவீர்கள். இந்த ஏழு வருடங்களில் நீங்கள் அறுவடை செய்யும் போது நீங்கள் உண்பதற்குத் தேவையான தானியங்களைத் தவிர மீதமுள்ள தானியங்களை கெட்டுப் போவதைத் தடுக்குமுகமாக அதன் கதிர்களிலேயே விட்டு விடுங்கள்.

48

ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌۭ شِدَادٌۭ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًۭا مِّمَّا تُحْصِنُونَ

"பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.

செழிப்பான இந்த ஏழு வருடங்களுக்குப் பிறகு பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். விதைக்காக வேண்டி அவர்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ள குறைவானவற்றைத் தவிர செழிப்பான வருடங்களில் அறுவடை செய்தவற்றை மக்கள் இந்த வருடங்களில் உண்பார்கள்.

49

ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَامٌۭ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ

பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சகமாக) இருப்பார்கள்" என்று கூறினார்.

பின்னர் இந்த பஞ்ச காலத்திற்குப் பிறகு வரக்கூடிய ஆண்டில் நல்ல மழை பொழியும். அப்போது விளைச்சல்கள் அதிகரிக்கும். மக்கள் திராட்சை, ஸைதூன், கரும்பு போன்ற பழரசம் பிழிவதற்கு தேவையானவற்றை கொண்டு பழரசம் பிழிவார்கள்.”

50

وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦ ۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرْجِعْ إِلَىٰ رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ ٱلنِّسْوَةِ ٱلَّٰتِى قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّى بِكَيْدِهِنَّ عَلِيمٌۭ

("இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், "நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, 'தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?' என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றனான்" என்று கூறினார்.

தனது கனவுக்கான யூஸுஃபின் விளக்கம் அரசரை அடைந்த போது அவர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை சிறையிலிருந்து விடுதலை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள். அரசரின் தூதர் யூஸுஃபிடம் வந்தபோது யூஸுஃப் அவரிடம் கூறினார்: “உம் எஜமானிடம் திரும்பிச் சென்று தங்களின் கைகளை அறுத்துக் கொண்ட அந்தப் பெண்களைக் குறித்துக் கேட்பீராக. விடுதலையடைவதற்கு முன்னர் அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினார். நிச்சயமாக என் இறைவன் அவர்கள் எனக்குச் செய்த ஏமாற்று வேலையை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.”

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.