Muslim99Muslim99
← Tafsir library

12. Yusuf

Joseph · Meccan · 111 ayahs

سُورَةُ يُوسُفَ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 31–40 of 111

31

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـًۭٔا وَءَاتَتْ كُلَّ وَٰحِدَةٍۢ مِّنْهُنَّ سِكِّينًۭا وَقَالَتِ ٱخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَٰشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنْ هَٰذَآ إِلَّا مَلَكٌۭ كَرِيمٌۭ

அப் பெண்களின் பேச்சக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். "இப் பெண்கள் எதிரே செல்லும்" என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்; "அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.

அந்தப் பெண்கள் தன்னை மறைமுகமாக பழித்துப் பேசுவதை கேள்விப்பட்ட அரசனின் மனைவி அவர்களுக்கு அழைப்பு விடுத்து அனுப்பினாள். அவர்கள் யூஸுஃபைக் கண்டு விட்டு அவளை நியாயப்படுத்தலாம் என்பதற்கே அவ்வாறு செய்தாள். அவர்களுக்கு விரிப்பும் தலையணையும் உள்ள ஓர் இடத்தைத் தயார்படுத்தி அழைக்கப்பட்ட ஒவ்வொருத்திக்கும் உணவினை (பழங்களை) அறுப்பதற்கான கத்தியை வழங்கினாள். அவர்களை நோக்கி வரும்படி யூஸுஃபிடம் கூறினாள். அந்த பெண்கள் அவரைக் கண்ட போது அப்படியே பிரமித்துவிட்டார்கள். வியப்பில் உணவை (பழங்களை) அறுப்பதற்காக வழங்கப்பட்ட கத்தியைக் கொண்டு தங்களின் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “அல்லாஹ் தூய்மையானவன், இந்தப் பையன் மனிதரே அல்ல. இத்தனை அழகும் ஒரு மனிதனிடம் கொட்டிக் கிடக்காது. இவர் கண்ணியமான வானவரேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.

32

قَالَتْ فَذَٰلِكُنَّ ٱلَّذِى لُمْتُنَّنِى فِيهِ ۖ وَلَقَدْ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ فَٱسْتَعْصَمَ ۖ وَلَئِن لَّمْ يَفْعَلْ مَآ ءَامُرُهُۥ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًۭا مِّنَ ٱلصَّٰغِرِينَ

அதற்கவள் "நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்ளோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்" என்று சொன்னாள்.

அந்த பெண்களுக்கு நேர்ந்ததைக் கண்ட அரசனின் மனைவி கூறினாள்: “யாரை நேசித்ததனால்தான் நீங்கள் என்னைக் குறை கூறினீர்களோ அந்த இளைஞனே இவர். நான் அவரை அடைய முயன்றேன். அவரைத் தவறில் ஈடுபட வைக்க நான் தந்திரம் செய்தும், அவர் மறுத்துவிட்டார். அவர் என் ஆசைக்கு இணங்கவில்லையெனில் அவரை நிச்சயம் சிறையில் அடைத்திடுவேன். அவர் இழிவடைந்தவர்களில் ஒருவராகி விடுவார்.

33

قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ

(அதற்கு) அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.

யூஸுஃப் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “அவர்கள் என்னை அழைக்கும் தவறான நடத்தையில் ஈடுபடுவதை விட அவள் என்னை அச்சுறுத்தும் சிறையே எனக்குப் பிரியமானது. நீ அவர்களின் சூழ்ச்சியை என்னை விட்டும் அகற்றவில்லையெனில் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். அவர்களின் பக்கம் சாய்ந்து அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதற்கு நான் உடன்பட்டால் அறிவற்றவர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்.

34

فَٱسْتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். மன்னனின் மனைவி மற்றும் நகரத்துப் பெண்களின் சூழ்ச்சியை அவரை விட்டும் நீக்கினான். யூஸுஃபுடையவும் ஒவ்வொரு பிரார்த்தனை புரிவோரின் பிரார்த்தனையையும் நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். அவரதும் ஏனையோரதும் நிலமைகளை அவன் நன்கறிந்தவன்.

35

ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعْدِ مَا رَأَوُا۟ ٱلْءَايَٰتِ لَيَسْجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٍۢ

(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.

மன்னரும் அவரது கூட்டமும் அவர் தூய்மையானவர் என்பதற்கான ஆதாரத்தைக் கண்ட போது -தவறு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக- அவரை நிர்ணயிக்கப்படாத காலம் வரை சிறையில் அடைக்க நாடினார்கள்.

36

وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًۭا ۖ وَقَالَ ٱلْءَاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًۭا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்).

அவர்கள் அவரை சிறையில் அடைத்தார்கள். அவருடன் இரு இளைஞர்களும் சிறைபுகுந்தார்கள். அவர்களில் ஒருவர் யூஸுஃபிடம் கூறினார்: “நான் கனவிலே மதுபானம் தயாரிப்பதற்கான திராட்சை ரசம் பிழிவதாகக் கண்டேன்.” மற்றொருவர் கூறினார்: “நான் என் தலையிலே ரொட்டியை சுமந்து செல்வதாக, அதனைப் பறவைகள் கொத்தித் தின்பதாகக் கண்டேன்.” -யூஸுஃபே!- நாங்கள் கண்டதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக. நாங்கள் உம்மை உபகாரம் செய்வோரில் ஒருவராகக் காண்கிறோம்.

37

قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌۭ تُرْزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِۦ قَبْلَ أَن يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِى رَبِّىٓ ۚ إِنِّى تَرَكْتُ مِلَّةَ قَوْمٍۢ لَّا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلْءَاخِرَةِ هُمْ كَٰفِرُونَ

அதற்கு அவர் கூறினார்; "உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.

யூஸுஃப் கூறினார்: “அரசரிடமிருந்தோ ஏனையோரிடமிருந்தோ உங்களுக்கு வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்னரே அதன் உண்மை நிலையையும் முறையையும் நான் உங்கள் இருவருக்கும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த விளக்கம் எனக்கு என் இறைவன் கற்றுத் தந்தவையாகும். இது ஜோதிடமோ வானவியல் சாஸ்திரமோ அல்ல. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையை ஏற்க மறுக்கிறார்கள்.

38

وَٱتَّبَعْتُ مِلَّةَ ءَابَآءِىٓ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ ۚ مَا كَانَ لَنَآ أَن نُّشْرِكَ بِٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ ذَٰلِكَ مِن فَضْلِ ٱللَّهِ عَلَيْنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ

"நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல, இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.

நான் என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றினேன். அது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் மார்க்கமாகும். அவன் மாத்திரமே வணங்குவதற்குத் தகுதியானவனாக இருக்கும் போது அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவது எங்களுக்கு உகந்ததல்ல. நானும் எனது மூதாதையர்களும் ஏற்றுள்ள தவ்ஹீதும் நம்பிக்கையும் அவன் எங்கள் மீது பொழிந்த அருளாகும். அவன் மனிதர்கள் அனைவரின்பாலும் தூதர்களை ஏகத்துவத்தைக் கொடுத்து அனுப்பி அவர்கள் மீது அருள் புரிந்துள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை. மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

39

يَٰصَىٰحِبَىِ ٱلسِّجْنِ ءَأَرْبَابٌۭ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ

"சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெள; வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளகின்ற ஒருவனான அல்லாஹ்வா?

பின்னர் யூசுஃப் சிறையில் இருந்த இரு இளைஞர்களையும் பார்த்துக் கூறினார்: “பல கடவுள்களை வணங்குவது சிறந்ததா? அல்லது தன்னை யாரும் அடக்கி ஆளாமல் மற்றவர்களை அடக்கியாளும், எவ்வித இணையுமற்ற அல்லாஹ் ஒருவனையே வணங்குவது சிறந்ததா?”

40

مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءًۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

"அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக தாமாகவே பெயர் சூட்டிக்கொண்டவைகளையே நீங்கள் வணங்குகிறீர்கள். வணக்கத்தில் அவைகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. அந்த பெயர்கள் சரியானவை என்பதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. எல்லா படைப்புகளின் விஷயத்திலும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துமாறு ஏவியுள்ளான். அவனுக்கு யாரையும் இணையாக்குவதை தடைசெய்துள்ளான். இந்த ஓரிறைக்கொள்கையே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிவதில்லை. எனவேதான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அவனுடைய படைப்புகளில் சிலவற்றை வணங்குகிறார்கள்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.