Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 51–60 of 123

51

يَٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱلَّذِى فَطَرَنِىٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ

"என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)

என் சமூகமே! என் இறைவனிடமிருந்து நான் எடுத்துரைக்கும் அழைப்புப் பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி என்னைப் படைத்த அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் இதனை விளங்கிக் கொண்டு நான் உங்களை எதனை நோக்கி அழைக்கிறேனோ அதனை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?

52

وَيَٰقَوْمِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا۟ مُجْرِمِينَ

"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).

என் சமூகமே! அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். பின்னர் உங்கள் பாவங்களை விட்டு விட்டு அவன் பக்கமே திரும்புங்கள். -பாவங்களில் மிகப் பெரியது இணைவைப்பாகும்.- அதற்கு வெகுமதியாக அல்லாஹ் உங்கள் மீது பெரு மழையைப் பொழியச் செய்வான். அதிகமான பிள்ளைகளையும் செல்வங்களையும் வழங்கி உங்களுடைய மதிப்பை மென்மேலும் அதிகரிப்பான். எனது அழைப்பை புறக்கணித்துவிடாதீர்கள். அவ்வாறு செய்தால் எனது அழைப்பைப் புறக்கணித்ததனாலும் அல்லாஹ்வை நீங்கள் நிராகரித்ததனாலும் நான் கொண்டு வந்ததை பொய்ப்பித்ததனாலும் குற்றவாளிகளாகி விடுவீர்கள்.

53

قَالُوا۟ يَٰهُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍۢ وَمَا نَحْنُ بِتَارِكِىٓ ءَالِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ

(அதற்கு) அவர்கள்; "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்.

அவருடைய சமூகத்தார் கூறினார்கள்: “ஹூதே! நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்வதற்கு நீர் எங்களிடம் எந்த தெளிவான சான்றையும் கொண்டுவரவில்லை. ஆதாரமற்ற உம் பேச்சை நம்பி எங்கள் தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட மாட்டோம். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்ற உமது வாதத்திலும் நாங்கள் உம்மை நம்பப்போவதில்லை.”

54

إِن نَّقُولُ إِلَّا ٱعْتَرَىٰكَ بَعْضُ ءَالِهَتِنَا بِسُوٓءٍۢ ۗ قَالَ إِنِّىٓ أُشْهِدُ ٱللَّهَ وَٱشْهَدُوٓا۟ أَنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تُشْرِكُونَ

"எங்களுடைய தெய்வங்களில் சிலகேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.

எங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்ததனால் அவற்றுள் சில உம்மைத் தீண்டி பைத்தியமாக்கி விட்டது என்றே நாங்கள் கூறுவோம். ஹூத் கூறினார்: “நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். நீங்களும் சாட்சி கூறுங்கள், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நான் முற்றிலும் நீங்கி விட்டேன் என்பதற்கு. நீங்களும் என்னைப் பைத்தியமாக்கி விட்டது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் உங்கள் தெய்வங்களும் சேர்ந்து எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்க வேண்டாம்.

55

مِن دُونِهِۦ ۖ فَكِيدُونِى جَمِيعًۭا ثُمَّ لَا تُنظِرُونِ

"(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்" (என்றும் கூறினார்).

எங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுத்துக் கொண்டிருந்ததனால் அவற்றுள் சில உம்மைத் தீண்டி பைத்தியமாக்கி விட்டது என்றே நாங்கள் கூறுவோம். ஹூத் கூறினார்: “நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். நீங்களும் சாட்சி கூறுங்கள், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்குவதை விட்டும் நான் முற்றிலும் நீங்கி விட்டேன் என்பதற்கு. நீங்களும் என்னைப் பைத்தியமாக்கி விட்டது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் உங்கள் தெய்வங்களும் சேர்ந்து எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்க வேண்டாம்.

56

إِنِّى تَوَكَّلْتُ عَلَى ٱللَّهِ رَبِّى وَرَبِّكُم ۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذٌۢ بِنَاصِيَتِهَآ ۚ إِنَّ رَبِّى عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ

நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழிpயலிருக்கின்றான்.

நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து என் விஷயத்தில் முழுமையாக அவனையே சார்ந்துள்ளேன். அவன்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். இந்த பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து திரியும் ஒவ்வொன்றும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவன் தான் நாடியவாறு அவற்றை மாற்றுகிறான். நிச்சயமாக என் இறைவன் நீதியில் நிலைத்திருப்பவன்.அவன் உங்களை என் மீது சாட்டிவிட மாட்டான். ஏனெனில் நிச்சயமாக நான் சத்தியத்திலும் நீங்கள் அசத்தியத்திலும் இருக்கின்றீர்கள்.

57

فَإِن تَوَلَّوْا۟ فَقَدْ أَبْلَغْتُكُم مَّآ أُرْسِلْتُ بِهِۦٓ إِلَيْكُمْ ۚ وَيَسْتَخْلِفُ رَبِّى قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُۥ شَيْـًٔا ۚ إِنَّ رَبِّى عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌۭ

"நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எனற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).

நான் கொண்டு வந்ததை நீங்கள் புறக்கணித்தால் எடுத்துரைப்பது மட்டுமே என் மீதுள்ள கடமையாகும். அல்லாஹ் எனக்கு எந்த தூதுப் பணியை அளித்து உங்களுக்கு எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டானோ அதனை நான் உங்களுக்கு முழுமையாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு எதிராக ஆதாரம் நிலைபெற்று விட்டது. என் இறைவன் விரைவில் உங்களை அழித்திடுவான். அவன் உங்களின் இடத்தில் வேறொரு சமூகத்தைக் கொண்டு வருவான். நீங்கள் உங்களின் நிராகரிப்பு, புறக்கணிப்பு மூலம் அல்லாஹ்வுக்கு சிறிய, பெரிய எந்த தீங்கையும் அளித்துவிட முடியாது. ஏனெனில் அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாவான். எனக்கெதிராக நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளிலிருந்து அவனே என்னைப் பாதுகாப்பான்.

58

وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًۭا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَنَجَّيْنَٰهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍۢ

நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.

அவர்களை அழிக்குமாறு அழிவைத் தாங்கிய நம்முடைய கட்டளை அவர்களிடம் வந்த போது நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் காப்பாற்றினோம். நிராகரித்த அவருடைய சமூகத்தைத் தாக்கிய கடுமையான வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்.

59

وَتِلْكَ عَادٌۭ ۖ جَحَدُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ وَعَصَوْا۟ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓا۟ أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍۢ

(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.

இவர்கள் ஆத் சமூகத்தினர். தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். தங்கள் தூதர் ஹூதிற்கு கட்டுப்பட மறுத்தார்கள். சத்தியத்திற்கு எதிராக கர்வம் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதற்குக் கட்டுப்படாமலும் வரம்பு மீறிய ஒவ்வொருவரின் கட்டளைக்கும் கட்டுப்பட்டார்கள்.

60

وَأُتْبِعُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةًۭ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ أَلَآ إِنَّ عَادًۭا كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًۭا لِّعَادٍۢ قَوْمِ هُودٍۢ

எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக 'ஆது' கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்கு கேடுதான்.

இவ்வுலகில் அவர்களை இழிவும் அல்லாஹ்வின் கருணை நீக்கமும் அவர்களைப் பீடித்துக் கொண்டன. அதே போன்று மறுமையிலும் அவர்கள் அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்படுவார்கள். இது அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் ஆகும். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்களை எல்லா வகையான நன்மைகளை விட்டும் தூரமாக்கி தீமைகளோடு நெருக்கமாக்கி விட்டான்.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.