Muslim99Muslim99
← Tafsir library

11. Hud

Hud · Meccan · 123 ayahs

سُورَةُ هُودٍ

Reading Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies

Ayahs 91–100 of 123

91

قَالُوا۟ يَٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًۭا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفًۭا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَٰكَ ۖ وَمَآ أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍۢ

(அதற்கு) அவர்கள் "ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லாலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்" என்று கூறினார்கள்.

ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் கொண்டு வந்தவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரிவதில்லை. உமது கண் பார்வையில் ஏற்பட்ட பலவீனம் அல்லது குருட்டுத் தன்மை ஆகியவற்றால் எங்களில் பலவீனமுற்றவராகவே நாங்கள் உம்மைக் காண்கிறோம். உம் குலத்தினர் மட்டும் எங்களின் மார்க்கத்தில் இல்லையென்றால் உம்மைக் கல்லால் அடித்துக் கொன்றிருப்போம். நாங்கள் உம்மைக் கொலை செய்வதை அஞ்சுமளவுக்கு நீர் ஒன்றும் பலமானவரும் அல்ல. உம் குலத்தார் மீதுள்ள கண்ணியத்தினால்தான் நாங்கள் கொல்லாமல் உம்மை விட்டுவைத்துள்ளோம்.

92

قَالَ يَٰقَوْمِ أَرَهْطِىٓ أَعَزُّ عَلَيْكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذْتُمُوهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا ۖ إِنَّ رَبِّى بِمَا تَعْمَلُونَ مُحِيطٌۭ

(அதற்கு) அவர் கூறினார்; "(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.

ஷுஐப் தனது சமூகத்திடம் கூறினார்: “சமூகமே! உங்கள் இறைவனான அல்லாஹ்வை விட என் குலத்தார்தான் உங்களிடம் கண்ணியமானவர்களா? நீங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றை சூழ்ந்துள்ளான். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவ்வுலகில் உங்களை அழிப்பதன் மூலமும் மறுமையில் வேதனைக்குட்படுத்துவதன் மூலம் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.”

93

وَيَٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَٰمِلٌۭ ۖ سَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌۭ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَٰذِبٌۭ ۖ وَٱرْتَقِبُوٓا۟ إِنِّى مَعَكُمْ رَقِيبٌۭ

"என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கோண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன் இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" (என்றும் கூறினார்).

சமூகமே! நீங்கள் விரும்பும் வழியில் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் விரும்பும் வழியில் என்னால் இயன்றதைச் நானும் செய்வேன். இழிவுபடுத்தக்கூடிய வேதனை தண்டனையாக யார்மீது இறங்கும் என்பதையும் நம்மில் யார் தனது கூற்றில் பொய்யர் என்பதையும் நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

94

وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًۭا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍۢ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَٰرِهِمْ جَٰثِمِينَ

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.

ஷுஐபுடைய சமுதாயத்தை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். அவர்களின் சமூகத்திலுள்ள அநியாயக்காரர்களை அழிவை ஏற்படுத்தும் பயங்கர சப்தம் தாக்கியது.உடனே அவர்கள் செத்துமடிந்தார்கள். முகங்குப்புற தமது முகங்களில் மண் ஒட்டுமளவு வீழ்ந்து கிடந்தார்கள்.

95

كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَا بُعْدًۭا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ

அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்தலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்; ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!

அவர்கள் இதற்கு முன்னர் அங்கு வசிக்காதவர்களைப்போல் ஆகிவிட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், ஸமூத் சமூகத்தினர் மீது இறைவனின் கோபத்தை இறக்கி அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டது போன்று மத்யன்வாசிகளும் அவனது கோபம் இறங்கி அல்லாஹ்வின் அருளை விட்டு தூரமாக்கப்பட்டு விட்டார்கள்.

96

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلْطَٰنٍۢ مُّبِينٍ

நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.

மூஸாவை அல்லாஹ் ஒருவனே என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகளையும் அவர் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கான ஆதாரங்களையும் அளித்து நாம் அனுப்பினோம்.

97

إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱتَّبَعُوٓا۟ أَمْرَ فِرْعَوْنَ ۖ وَمَآ أَمْرُ فِرْعَوْنَ بِرَشِيدٍۢ

(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.

அவரை பிர்அவ்னிடமும் அவன் சமூகத்துப் பெரியவர்களிடமும் அனுப்பினோம். இந்த பெரியவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து பிர்அவ்னின் கட்டளையைப் பின்பற்றினார்கள். பிர்அவ்னின் கட்டளை பின்பற்றதக்களவு நேர்மையானதல்ல.

98

يَقْدُمُ قَوْمَهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَأَوْرَدَهُمُ ٱلنَّارَ ۖ وَبِئْسَ ٱلْوِرْدُ ٱلْمَوْرُودُ

அவன் (-ஃபிர்அவ்ன்) மறுமை றானில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது.

மறுமை நாளில் பிர்அவன் தன் சமூகத்தை வழிநடத்தி தன்னையும் அவர்களையும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். அவன் அவர்களைக் கொண்டுபோய் சேர்த்த இடம் மோசமானது.

99

وَأُتْبِعُوا۟ فِى هَٰذِهِۦ لَعْنَةًۭ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ ۚ بِئْسَ ٱلرِّفْدُ ٱلْمَرْفُودُ

இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது.

அல்லாஹ் அவர்களை இவ்வுலகில் மூழ்கடித்து அழித்ததுடன் தன் அருளை விட்டும் அவர்களைத் தூரமாக்கி விட்டான். மறுமை நாளிலும் அவர்கள் அவனுடைய அருளை விட்டும் தூரமாக்கப்படுவார்கள். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்குக் கிடைத்த சாபமும் வேதனையும் மிகவும் மோசமானதாகும்.

100

ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيْكَ ۖ مِنْهَا قَآئِمٌۭ وَحَصِيدٌۭ

(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊhகளில் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன் சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.

தூதரே!- நாம் இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்ட சமூகங்களின் அந்த செய்திகளை நாமே உமக்கு அறிவிக்கிறோம் அவற்றுள் சிலவற்றின் அடையாளங்கள் நிலைத்திருக்கின்றன. சிலவற்றின் அடையாளங்கள் எவ்வித தடையமுமின்றி அழிந்து விட்டன.

Commentary: Al-Mukhtasar in Interpreting the Noble Qur'an by Tafsir Center for Quranic Studies. Qur'an text and translation via AlQuran Cloud.